பயணிகள் எண்ணிக்கை இரட்டிப்பானது

பயணிகள் எண்ணிக்கை இரட்டிப்பானது

3 mins read

சாங்கி விமான நிலையத்தில் ஏப்ரல் மாத நிலவரம்: கொவிட்-19 பரவலுக்கு முன்பிருந்த அளவில் 40 விழுக்காட்டை நெருங்கியது

இவ்­வாண்டு மார்ச் மாதத்­தைக் காட்­டி­லும், ஏப்­ரல் மாதத்­தில் சாங்கி விமான நிலை­யம் வழி­யாகப் பய­ணம் செய்­தோர் எண்­ணிக்கை இரு­ம­டங்­கிற்­கும் மேல் இருந்­தது என்­றும் கொவிட்-19 பர­வ­லுக்கு முந்­திய நிலை­யில் 40 விழுக்­காட்டை நெருங்­கி­யது என்­றும் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் தெரி­வித்துள்ளார்.

கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட அனை­வ­ருக்­கும் சென்ற மாதம் 1ஆம் தேதி­யில் இருந்து சிங்கப்­பூர் தனது கதவு­களைத் திறந்­து­விட்­டதை அடுத்து, பய­ணி­கள் விமா­னப் போக்­கு­வரத்து நிலைமை முன்­னேற்­றம் கண்­டுள்­ளது.

கடந்த மார்ச் மாதத்­தில் சாங்கி விமான நிலை­யம் வழி­யா­கப் பய­ணம் செய்­தோர் எண்­ணிக்கை, கொரோனா பர­வ­லுக்கு முன்­பு இ­ருந்த நிலை­யில் 18 விழுக்­காடாக இருந்­தது.

ஈராண்­டு­க­ளுக்­குப்­பின் நேற்று முதன்­மு­றை­யாக இடம்­பெற்ற சாங்கி விமான நிலைய விரு­து­கள் வழங்கும் நிகழ்ச்­சி­யில் பங்­கேற்­ற­போது அமைச்­சர் ஈஸ்­வ­ரன் இவ்விவ­ரங்­களை வெளி­யிட்­டார்.

விமா­னப் பய­ணி­கள் எண்­ணிக்­கை­யைப் பொறுத்­த­மட்­டில், இவ்­வாண்டு இறு­திக்­குள் கொவிட்-19 பர­வ­லுக்கு முன்­பி­ருந்த நிலை­யில் 50 விழுக்­காட்டை எட்­டி­விட வேண்­டும் என இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த 2020ஆம் ஆண்­டில் சிங்­கப்­பூ­ரில் கொரோனா பர­வத் தொடங்­கு­முன், 68.3 மில்­லி­யன் பேர் சாங்கி விமா­னம் நிலை­யம் வழி­யா­கப் பய­ணம் செய்­த­னர்.

மீண்­டும் விமா­னப் போக்­கு­வரத்து சூடு­பி­டிக்­கத் தொடங்­கி­இருக்கும் நிலை­யில், அதற்­கேற்ப விமான நிலை­யச் செயல்­பா­டு­களை விரைந்து அதி­கப்­ப­டுத்­து­வது எளி­தான விஷ­ய­மல்ல என்று திரு ஈஸ்­வ­ரன் சொன்­னார்.

"சாங்கி போன்ற அனைத்­துலக விமானப் போக்­கு­வ­ரத்து மையத்­தில் செயல்­பா­டு­களை அதி­கப்­படுத்­து­வ­தில் குறிப்­பி­டத்­தக்க சவால்­கள் உள்ளன. ஆயி­னும், அவ்­வே­லை­யைச் செய்து முடிப்­பதில் நமது விமா­னத்­து­றைப் பங்­கா­ளி­களும் தங்­களால் ஆன­மட்­டும் சிறப்­பா­கச் செயல்­பட்டு வரு­கின்றனர்," என்­றார் அமைச்­சர்.

அதற்கு சிங்­கப்­பூர் அர­சாங்­கத்­தின் முழு­மை­யான ஆத­ர­வு உண்டு எனக் குறிப்­பிட்ட அவர், ஒருங்­கி­ணைந்து பணி­யாற்­று­வ­தன் மூலம் சாங்­கி­யின் தனித்த அடை­யா­ள­மான தனிச்­சி­றப்­பு­மிக்க, இடை­ய­றாப் பயண அனு­ப­வத்தை மீண்­டும் கொண்­டு­வர முடி­யும் என்­றும் சொன்­னார்.

உட­னடி மீட்சி நட­வ­டிக்­கை­களு­டன், கொவிட்-19 பர­வ­லுக்­குப் பிந்­திய உல­கி­லும் சாங்கி விமான நிலை­யம் செழித்­தோங்­கு­வது முக்­கி­யம் என்று அமைச்சர் ஈஸ்­வரன் கூறி­னார்.

அதற்கு இணைப்­புத்­தி­றன் மிக முக்­கி­யம் எனக் குறிப்­பிட்ட அவர், அதற்­கேற்ப சம்­பந்­தப்­பட்ட விமான நிறுவனப் பங்­கா­ளி­களு­டன் இணைந்து பணி­யாற்றி, விமா­னப் போக்­கு­வ­ரத்­துக் கட்­ட­மைப்பை அதி­க­ரிக்க கடப்­பாடு கொண்­டு உள்ளதாகவும் தெரி­வித்­தார்.

"முந்­திய இணைப்­பு­களை மீட்­டெ­டுப்­பது மட்­டு­மின்றி, நமது கட்­ட­மைப்பை விரி­வாக்­க­வும் விமாச்ன சேவை­களை அதி­க­ரிக்­க­வும் விமானச் சேவை நிறு­வ­னங்­களு­டன் புதிய பங்­கா­ளித்­து­வத்தை ஏற்­ப­டுத்­திக்­கொள்­ள­வும் வேண்­டும்," என்­றார் அமைச்­சர்.

பெருந்­தொற்­றுச் சூழ­லி­லும் கடந்த ஆண்டு இங்கு புதிய ஏழு புதிய பய­ணி­கள் விமானச் சேவை நிறு­வ­னங்­கள் இங்கு செயல்­ப­டத் தொடங்­கி­ய­தா­க­வும் பஹ்­ரேன் மற்­றும் வான்­கூ­வ­ருக்­குப் புதிய பயணி­கள் விமான இணைப்­பு­கள் தொடங்கப்­பட்­ட­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

இதற்­கி­டையே, கொவிட்-19 பர­வ­லுக்­குப் பிறகு சாங்கி விமான நிலை­யம் வழி­யாக இயக்­கப்­படும் சரக்கு விமா­னங்­க­ளின் எண்­ணிக்­கை­யும் மும்­ம­டங்­கா­கி­யுள்­ளது.

அத்­து­டன், புதி­தாக ஆறு சரக்கு விமானச் சேவை வழங்­கு­நர்­க­ளை­யும் சாங்கி விமான நிலை­யம் ஈர்த்­துள்­ளது.

டிஎச்­எல் எக்ஸ்­பி­ரஸ் நிறு­வ­ன­மும் ஃபெடெக்ஸ் நிறு­வ­ன­மும் இங்கு தங்­க­ளது கட்­ட­மைப்­பு­களை விரி­வு­ப­டுத்­தி­யுள்­ளன.

இம்­மா­தம் 1ஆம் தேதி நில­வரப்­படி, 47 நாடு­க­ளை­யும் பிர­தே­சங்­க­ளை­யும் சேர்ந்த 125 நக­ரங்­களு­டன் சிங்­கப்­பூரை இணைக்­கும் வகை­யில், 82 விமா­னப் போக்­கு­வரத்து நிறு­வ­னங்­கள் வாரத்திற்கு 3,300க்கும் மேற்­பட்ட விமான சேவை­களை வழங்கி வரு­கின்­றன.