நீக்குப்போக்கான வேலை முறை ஊழியரணிக்கு பலம்

நீக்குப்போக்கான வேலை முறை ஊழியரணிக்கு பலம்

2 mins read
b6d3a982-bbe1-402e-bdbf-82033fcd8c69
'எதிர்கால வேலை: எப்படி தயாராவது' என்ற குழு விவாதத்தில் இடமிருந்து சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக கௌரவப் பேராசிரியை அனி கோ, சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ராபர்ட் யாப், என்டியுசி தலைவர் திருவாட்டி மேரி லியூ, மனிதவள அமைச்சர் டாக்டர் டான் சீ லெங், என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங், நிஞ்ஜா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி லாய் சாங் வென் ஆகியோர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நீக்­குப்­போக்­கான வேலை ஏற்­பாடு­கள் முன்­னேற்­றத்­துக்­கான வழி­கள் என்­றும் மேலும் அதிக பெண்­களும் முதிர்ச்சி அடைந்த நிலை­யில் உள்ள ஊழி­யர்­களும் ஊழி­ய­ர­ணி­யில் சேர அந்த ஏற்­பா­டு­கள் உத­வும் என்­றும் குழு விவா­தம் ஒன்­றில் மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் தெரி­வித்­தார்.

குத்­த­கைப் பணி­யா­ளர் மற்­றும் தற்­கா­லிக ஊழி­யர்­களை உள்ளடக்­கிய பொரு­ளி­ய­லின் எதிர்­கா­லம் குறித்­தும் பல­த­ரப்­பட்ட வேலை­களை அது எப்­படி உள்­ள­டக்க முடி­யும் என்­பது பற்றி­யும் அவர் பேசி­னார்.

பார்க்­ரா­யல் கலெக்­‌ஷன் மரினா பே ஹோட்­ட­லில் நடை­பெற்ற முத்­த­ரப்­புக் கூட்­டணி தொடக்­கத்­தின் தொடர்­பில் நடை­பெற்ற குழு விவா­தம் ஒன்­றில் டாக்­டர் டான் பங்­கேற்­றார்.

முத­லா­ளி­களும் ஊழி­யர்­களும் எதிர்­நோக்­கும் பிரச்­சி­னை­கள் தொடர்­பான யோச­னை­க­ளைப் பகிர்ந்­து­கொள்ள அந்­தக் கூட்­டணி வழி­வகை காணும்.

அத்­து­டன், அர­சாங்­கம், முத­லா­ளி­கள் மற்­றும் ஊழி­யர்­க­ளை உள்­ள­டக்­கிய சிங்­கப்­பூ­ரின் முத்­த­ரப்பு உணர்­வைப் பேண­வும் அது நம்­பிக்கை கொண்­டுள்­ளது.

வருங்­கால வேலை குறித்து விளக்­கிய டாக்­டர் டான், அடுத்த கட்ட முக்­கிய மாற்­றம் நீக்­குப்­போக்­கான வேலை ஏற்­பா­டு­க­ளா­கவே இருக்­கும் என்று தான் நினைப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

அத்­த­கைய தர­நி­லை­களை முத்­த­ரப்­புப் பங்­கா­ளி­க­ளு­டன் இணைந்து மனி­த­வள அமைச்சு உரு­வாக்கி உள்­ளது. இவற்றை ஒவ்­வொ­ரு­வ­ரும் ஆத­ரிப்­பார்­கள் என்று நம்­பு­கி­றேன்.

இப்­போ­தி­லி­ருந்து கிட்­டத்­தட்ட ஓராண்டு காலத்­தில் சில வழி­காட்டி நெறிமு­றை­களை நாம்­ உரு வாக்­கி­விட முடி­யும் என்று அவர் தெரி­வித்­தார்.

பரா­ம­ரிப்­புப் பொறுப்­பு­களில் ஈடு­பட்டு இருக்­கும் பெண்­கள், முதிர்­சி­ய­டைந்த ஊழி­யர்­கள் போன்ற அதி­க­மா­னோரை ஊழி­ய­ர­ணி­யில் கொண்­டு­வர நீக்­குப்­போக்­கான வேலை ஏற்­பா­டு­கள் ஒரு நல்ல வழி என்­றும் அவர் சொன்­னார்.

சிங்­கப்­பூ­ரில் 25 வய­துக்­கும் 64 வய­துக்­கும் இடைப்­பட்ட 260,000 பெண்­களும் 65 வய­துக்­கும் 69 வய­துக்­கும் இடைப்­பட்ட 120,000 முதிர்ச்­சி­ய­டைந்த ஊழி­யர்­களும் வேலை பார்க்­க­வில்லை என்­பதை அமைச்­சர் சுட்­டி­னார்.

"துணிச்­ச­லான, அறி­வு­பூர்­வ­மான, மேம்­பா­டான நீக்­குப்­போக்கு வேலை ஏற்­பா­டு­க­ளைச் செய்­வதன் மூலம் இந்த இரு குழு­வி­ன­ரை­யும் சேர்த்து நமது ஊழி­ய­ர­ணிக்கு 400,000 பேரை மீண்­டும் கொண்டு­வர முடி­யும்.

"இது நமது பொரு­ளி­ய­லுக்­கும் தொழில்­து­றைக்­கும் எந்த அளவுக்கு வலு சேர்க்­கும் என்பதை நினைத்­துப் பாருங்­கள்," என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூர் தேசிய முத­லா­ளி­கள் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரான ராபர்ட் யாப், நீக்­குப்­போக்­கான வேலை ஏற்­பா­டு­களை நிறை­வேற்று­வ­தன் தொடர்­பில் ஒவ்­வொரு­வ­ரும் வெளிப்­ப­டை­யா­க­வும் புத்­தாக்­கத்­து­ட­னும் நடந்­து­கொள்ள வேண்­டும் என்று விவாதத்தின் போது தெரி­வித்­தார்.