லிட்டில் இந்தியாவில் வெளிநாட்டு ஊழியருக்கு இலவச சட்ட உதவிக்கூடம்

லிட்டில் இந்தியாவில் வெளிநாட்டு ஊழியருக்கு இலவச சட்ட உதவிக்கூடம்

2 mins read
4ea4d64f-b70c-43a4-bd73-967dcca7e574
(இடது) 'வோங் பார்ட்னர்ஷிப் எல்எல்பி' நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான அட்னான் நூர், 33, சட்டக் கழகத்தின் இலவச சட்ட சேவை அமைப்பின் தொண்டூழிய வழக்கறிஞராக இருக்கிறார். இவர், அங்கூலியா பள்ளிவாசலில் வெளிநாட்டு ஊழியர் ஒருவருக்குச் சட்ட ஆலோசனை சேவை வழங்குகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சம்­ப­ளப் பிரச்­சி­னை­கள், வேலை­யில் ஏற்­ப­டக்­கூ­டிய காயம் தொடர்­பான பிரச்­சி­னை­கள், சட்­டப் பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு இல­வ­ச­மாக ஆலோ­ச­னை­களை வழங்­கு­வ­தற்­காக முதல் சட்ட உத­விக்­கூ­டம் அமைக்­கப்­பட்டு இருக்­கிறது.

லிட்­டில் இந்­தி­யா­வில் உள்ள அங்­கூ­லியா பள்­ளி­வா­ச­லில் அந்தக் கூடத்தை சட்­டக் கழ­கத்­தின் இலவச பொதுச் சேவை அமைப்பு நிர்­வகித்து நடத்­து­கிறது.

அந்­தக் கூடம் இரு வாரங்­களுக்கு ஒருமுறை ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் செயல்­படும். அனைத்து சம­யங்­க­ளை­யும் சேர்ந்த வெளி­நாட்டு ஊழி­யர்­கள் அந்­தக் கூடத்­தின் சேவை­யைப் பெற­லாம்.

தமிழ், இந்தி, வங்­கா­ளம் போன்ற மொழி­களில் மொழி­பெ­யர்ப்­புச் சேவை­களும் அங்கு கிடைக்கும்.

சட்ட உத­விக்கூடம் நேற்று அதி­கா­ர­பூர்­வ­மா­கத் தொடங்­கப்­பட்­டது. தற்­காப்பு, மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்­தினராகக் கலந்­து­கொண்­டார்.

மனி­த­வள அமைச்­சின் உத்­த­ர­வாத, பரா­ம­ரிப்பு, ஈடு­பாட்­டுக் குழு­வைச் சேர்ந்த அதி­கா­ரி­கள், அந்­தச் சட்ட உத­விக்கூடத்­தில் பணி­யில் இருப்­பார்­கள் என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

"அந்த அதி­கா­ரி­கள் கடு­மை­யான விவ­கா­ரங்­க­ளைக் கையா­ளு­வார்­கள். ஊழி­யர்­க­ளின் பிரச்­சி­னை­கள் கவ­னிக்­கப்­படும் என்று அவர்­கள் உத்­த­ர­வா­தம் அளிப்­பார்­கள்," என அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

சென்ற ஆண்­டில் வெளி­நாட்டு ஊழி­யர் குழு­மம் என்ற அமைப்பு தோற்­று­விக்­கப்­பட்­டது. அந்த அமைப்பு கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் நடப்­பில் இருந்­த­போது வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு இணை­யம் வழி­யாக சட்ட உத­வி­களை வழங் கும் நடை­மு­றை­யைப் பரி­சோதித்துப் பார்த்­தது என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

சட்­டக் கழ­கத்­தின் இல­வச பொதுச் சேவை அமைப்பு நிர்­வகித்து நடத்­தும் இத்­த­கைய கூடங்­கள் 260க்கும் மேற்­பட்ட ஊழி­யர்­களுக்கு உதவி இருக்­கின்­றன என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

"தவ­றி­ழைக்­கும் முத­லா­ளி­களிடம் மனி­த­வள அமைச்சு கடுமை­யாக நடந்­து­கொள்­ளும்.

"அவர்­க­ளுக்கு எதி­ராக நட­வடிக்கை எடுக்க தயங்­காது. உதவி தேவைப்­படும் ஊழி­யர்­கள் நிரா­கரிக்­கப்­ப­ட­மாட்­டார்­கள்," என்று திரு ஸாக்கி தெரி­வித்­தார்.

இத­னி­டையே, நேற்று தொடங்­கப்­பட்ட சட்ட உத­விக்கூடம் மார்ச்­முதல் செயல்­பட்டு வரு­கிறது. அதில் 40க்கும் மேற்­பட்ட வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தங்­க­ளைப் பதிந்துகொண்டு இருக்­கி­றார்­கள்.

இது பற்றி கருத்­து­ரைத்த சட்டக் கழக இல­வச சட்ட உத­விச் சேவை அமைப்­பின் தலை­வர் கிரி­கோரி விஜ­யேந்­தி­ரன், வழி­பாட்டு இடங் களைப் பாது­காப்­பா­னவையாக பெரும் எண்­ணிக்­கை­யி­லான வெளி­நாட்டு ஊழி­யர்­கள் கரு­து­வதால் பள்­ளி­வா­ச­லில் சட்ட உதவிக் கூடத்தை திறப்­பது என்று முடிவு செய்­யப்­பட்­ட­தாக நேற்­றைய நிகழ்ச்­சி­யில் தெரி­வித்­தார்.

அந்­தக் கூடம் ஒவ்­வொரு மாத­மும் இரண்­டா­வது, நான்­கா­வது ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் முற்­ப­கல் 10 மணி­யில் இருந்து பிற்­ப­கல் 12.30 மணி வரை செயல்­படும்.

வெளி­நாட்டு ஊழி­யர்­கள் அங்கு சென்று ஆலோ­ச­னைக்கு விண்­ணப்­பிக்­க­லாம். அல்­லது https://form.jotform.com/Lawsocprobono/MWLC என்ற இணைய முக­வரி மூல­மும் தங்­க­ளைப் பதி­ய­லாம்.