பொதுப் போக்குவரத்து பயணங்கள் அதிகரித்தன

பொதுப் போக்குவரத்து பயணங்கள் அதிகரித்தன

2 mins read

கொவிட்-19க்கு முன்பிருந்த நிலையில் 78 விழுக்காட்டை எட்டின

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் பெரும்­பா­லும் தளர்த்­தப்­பட்­ட­தைத் தொடர்ந்து, கடந்த ஏப்­ரல் மாதம் கடைசி வாரத்­தில் பேருந்து, ரயில் பய­ணங்­கள் கொவிட்-19க்கு முன்­பி­ருந்த நிலை­யில் 78 விழுக்­காட்டை எட்டின.

இவ்­வாண்டு ஜன­வ­ரி­யின் முதல் வாரத்­தில் பொதுப் போக்கு­வ­ரத்­துப் பய­ணங்­கள் கொவிட்-19க்கு முன்­பி­ருந்த நிலை­யில் 67 விழுக்­கா­டாக இருந்­தன. அப்­போது 50 விழுக்­காடு ஊழி­யர்­கள் வேலை­யி­டத்­திற்­குத் திரும்­ப­லாம் என்­றும் ஐந்­து பேர் வரை ஒன்­று­கூ­ட­லாம் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆனால், கடந்த ஏப்­ரல் மாதம் அறி­விக்­கப்­பட்­டி­ருந்த கட்­டுப்­பாட்டுத் தளர்­வின் ஒரு பகு­தி­யாக, எல்லா ஊழி­யர்­களும் வேலை­யி­டம் திரும்­ப­லாம் என்­றும் ஒன்­று­கூடல்­க­ளுக்­கான எண்­ணிக்கை வரம்பு நீக்­கப்­ப­டு­வதாகவும் தெரி­விக்­கப்­பட்­டது.

நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் வெளி­யிட்­டுள்ள அண்­மைய தக­வல்­கள்­படி, கடந்த ஏப்­ரல் மாதம் கடைசி வாரத்­தில், காலை உச்ச நேரத்­தில் பொதுப் போக்கு­வரத்­தைப் பயன்­ப­டுத்­தி­யோர் எண்­ணிக்­கை­யும் கொவிட்-19க்கு முன்­பி­ருந்த நிலை­யில் 76 விழுக்­காட்டை எட்­டி­யது.

ஒப்­பு­நோக்க, கடந்த ஜன­வரி முதல் வாரத்­தில் இது 59 விழுக்­கா­டாக இருந்­தது.

என்­றா­லும், பொதுப் போக்­கு­வரத்­துப் பய­ணங்­கள் கொவிட்-19க்கு முன்­பி­ருந்த நிலைக்­குத் திரும்­பு­வ­தற்கு இன்­னும் சற்று காலம் ஆக­லாம் எனத் தெரி­கிறது.

பொதுப் போக்­கு­வ­ரத்தை மக்கள் பயன்­ப­டுத்­தும் முறை­யில் நிரந்­தர மாற்­றம் ஏற்­ப­டுமா என்­பதைக் கணிக்க பேருந்து, ரயில் பய­ணங்­கள் எண்­ணிக்­கை­யைத் தாங்­கள் அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து வரு­வ­தாக பொதுப் போக்­கு­வ­ரத்து நிறு­வ­னங்­களும் அர­சாங்­க­மும் கூறி­யுள்­ளன.

கொவிட்-19 பெருந்­தொற்­றும் அத­னால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட கட்டுப்­பா­டு­களும் பொதுப் போக்­கு­வரத்துப் பய­ணங்­க­ளை­யும் வருவா­யை­யும் பெரி­தும் பாதித்­து உள்­ளன.

2010க்குப் பிறகு 2020ஆம் ஆண்­டி­லும் 2021ஆம் ஆண்­டி­லும் பொதுப் போக்­கு­வரத்துப் பய­ணங்­கள் ஆகக் குறை­வா­கப் பதி­வா­கின.

2020/2021 நிதி­யாண்­டில் பொதுப் போக்­கு­வ­ரத்­துப் பய­ணங்­கள் எண்­ணிக்கை, கொவிட்-19க்கு முன்­பி­ருந்த நிலை­யில் 60 விழுக்­கா­டாக இருந்­தது. இத­னால் வரு­வாய் 30 விழுக்­காடு குறைந்­த­தாக ஆணை­யம் ஏற்­கெ­னவே தெரி­வித்­தி­ருந்­தது.

இதற்­கி­டையே, ஏப்­ரல் கடைசி வாரத்­தில் டாக்சி, தனி­யார் வாடகை கார் சேவை­க­ளைப் பயன்­ப­டுத்­தி­யோர் எண்­ணிக்கை கொவிட்-19க்கு முன்­பி­ருந்த நிலை­யில் 81 விழுக்­கா­டாக இருப்­ப­தாக ஆணை­யம் தெரி­வித்­தது.

ஆண்டு தொடக்­கத்­தி­லும் ஏறக்­கு­றைய இதே எண்­ணிக்­கை­தான் பதி­வாகி­யி­ருந்­தது.

சாலை­களில் செல்­லும் டாக்சி­களின் எண்­ணிக்கை, 2019ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் இவ்வாண்டு குறைந்­துள்­ளது. 2019ல் 18,542ஆக இருந்த அந்த எண்­ணிக்கை, இவ்­வாண்டு ஜன­வரி­யில் 14,847ஆக­வும் மார்ச்­சில் 14,603ஆக­வும் குறைந்­தது.

என்­றா­லும், தொழில்­முறை உரிமம் வைத்­தி­ருக்­கும் டாக்சி, தனி­யார் வாடகை கார் ஓட்­டு­நர்­க­ளின் எண்­ணிக்கை கடந்த ஆண்டு அக்­டோ­ப­ரு­டன் ஒப்­பு­நோக்க இவ்­வாண்டு மார்ச்­சில் சற்று அதி­க­ரித்­த­தாக ஆணை­யத்­தில் புள்­ளி­வி­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

கடந்த மார்ச் நில­வ­ரப்­படி, 94,513 டாக்சி ஓட்­டு­நர்­கள் தொழில்­முறை உரி­மம் வைத்­தி­ருந்­த­னர். ஜன­வ­ரி­யில் இது 94,111ஆக இருந்­தது.

தனி­யார் வாடகை கார் ஓட்டு­நர்­க­ளைப் பொறுத்­த­மட்­டில், கடந்த மார்ச் மாதம் 48,300 பேர் அத்­த­கைய உரி­மங்­களை வைத்­து­இருந்தனர். ஜன­வ­ரி­யில் இந்த எண்ணிக்கை 47,913ஆக இருந்­தது.

எனி­னும், பெருந்­தொற்­றுச் சூழலில் டாக்­சி­க­ளின் எண்­ணிகை குறைந்­துள்­ளது. 2020ல் 18,500ஆக இருந்த அந்த எண்­ணிக்கை, தற்­போது 14,600ஆகக் குறைந்­துள்­ளது.