ஸ்டாலின்: டிரில்லியன் டாலர் பொருளியல் முயற்சிகள் தீவிரம்

தமிழ்­நாடு வரும் 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்­லி­யன் டாலர் பொருளி­ய­லாக மாற வேண்­டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கு நிறை­வேற மாநில அரசு தீவிர மாக முயன்றுவருவதாக தமி­ழக முதல்­வர் மு.க. ஸ்டா­லின் அறி­வித்தார்.

தமிழ்­நாட்­டின் ஒவ்­வொரு மாவட்­டத்­தி­லும் ஏற்­று­மதி மையம் உரு­வாக்­கப்­பட்டு வரு­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

இந்­திய ஏற்­றுமதி நிறு­வனக் கூட்­ட­மைப்­பின் தெற்கு வட்­டார விருது வழங்கும் விழா சென்­னை­யில் செவ்வாய்க்­கி­ழமை இரவு நடந்­தது. அதில் உரை­யாற்­றிய முதல்­வர், தமி­ழக அர­சின் பொரு­ளி­யல் இலக்கு நிறை­வேற மாநி­லத்­தின் ஏற்­று­மதி கூட வேண்­டும் என்றார்.

இந்­திய ஏற்­று­ம­தி­களில் 27%க்கும் அதிக பங்கைத் தென் மாநி­லங்­கள் வகிக்­கின்­றன. அடுத்த ஐந்­தாண்­டு­களுக்­குள் இந்­தப் பங்கு 35%ஐத் தாண்டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

தென் மண்­ட­லத்­தில் தமிழ்­நா­டு­தான் முன்­ன­ணி­யில் திகழ்­கிறது. தமிழக ஏற்­று­மதி $26 பில்­லி­ய­னாக இப்­போது இருக்­கிறது. இது $1 டிரில்­லி­ய­னாக அதி­க­ரிக்க வேண்­டும். இதற்கு அதிக முத­லீ­டு­ மாநி­லத்­திற்கு வரவேண்டும்.

தொழி­லைத் தொடங்க கவர்ச்­சி­கரமான திட்­டங்­க­ளை­யும் அணு­கு­முறையை­யும் மாநில அரசு கைக்­கொள்ள வேண்­டும் என்று தெரி­வித்த ஸ்டா­லின், இந்த முயற்­சி­களைப் பல கோணங்­க­ளி­லும் மாநில அரசு முடுக்­கி­விட்டு இருப்­ப­தா­கக் கூறினார்.

மொத்­தம் 35,000 பேரைக் கொண்ட இந்­திய ஏற்­று­ம­தி நிறு­வனக் கூட்­ட­மைப்­பில் 5,000 நிறு­வ­னங்­கள் தமிழ்­நாட்­டைச் சேர்ந்­தவை என்­பதை அவர் சுட்டினார்.

இதனிடையே, அண்மைய மத்திய கிழக்கு பயண வெற்றியைத் தொடர்ந்து முதலீடுகளைக் கவர்வதற்காக பிரிட்­டனுக்­கும் அமெரிக்­கா­வுக்­கும் முதல்வர்­ விரைவில் பய­ணம் மேற்­கொள்வார் என்று தமிழக அரசு தெரி­வித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!