சாங்கி விமான நிலையத்தில் டாக்சி ஏறினால் செலுத்தும் கூடுதல் கட்டணம் தற்காலிகமாக உயர்கிறது

சாங்கி விமான நிலையத்தில் டாக்சி ஏறினால் செலுத்தும் கூடுதல் கட்டணம் தற்காலிகமாக உயர்கிறது

1 mins read
77f7a7be-a039-41fa-9207-bbe85f6801a0
சாங்கி விமான நிலையத்தில் பயணிகளுக்காக காத்திருக்கும் டாக்சிகள். மே 19 முதல் ஜூன் 30 வரை அங்கிருந்து எடுக்கும் டாக்சிகளுக்கான கூடுதல் கட்டணம் 3 வெள்ளி உயர்த்தப்படும். பயணிகளை ஏற்ற கூடுதல் டாக்சிகள் வரவேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. படம்: எஸ்பிஎச் -
Google News Preferred Icon

சாங்கி விமான நிலையத்தில் டாக்சிகளில் ஏறுவோர் செலுத்தும் கூடுதல் கட்டணம், சுமார் ஒரு மாதத்துக்கு, மூன்று வெள்ளி உயர்த்தப்படும்.

வரும் மே 19ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை கூடுதல் கட்டணம் அதிகரிக்கப்படும்.

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் மாலை 5 மணி முதல் நள்ளிரவு பன்னிரண்டு மணி வரை, சாங்கி விமான நிலையத்தில் டாக்சியில் ஏறினால், இனி கூடுதல் கட்டணமாக $8 செலுத்த வேண்டும்.

மற்ற எல்லா நேரங்களிலும் கூடுதல் கட்டணம் $6 ஆக உயரும்.

கூடுதல் கட்டணம் தற்போது வெள்ளி, சனி, ஞாயிறு மாலை உச்ச நேரத்தில் $5ஆகவும் மற்ற எல்லா நேரங்களில் $3 ஆகவும் உள்ளது.

சாங்கி விமான நிலையத்தில் கூடுதல் டாக்சிகள் கிடைப்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சாங்கி விமான நிலையக் குழுமம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதை வியாழக்கிழமை (மே 12) அன்று இதைத் தெரிவித்தது.

அனைத்துலகப் பயணிகள் இங்கு வருவது கூடியுள்ளது.

இருந்தபோதும், டாக்சி ஓட்டுநர்கள் சாங்கி விமான நிலையத்துக்குச் சென்று அவர்களை ஏற்றி வரத் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இதனால் சாங்கி விமான நிலையத்தில் பயணிகள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.