இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டு மேம்படுக

இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டு மேம்படுக

3 mins read
b697cf12-f51e-438f-9c61-dc0bbffd64fa
சிங்கப்பூர் இந்திய அமைப்புகள் சம்மேளனத்தின் சின்னத்தை திருவாட்டி ஹலிமா (நடுவில்) நேற்றைய விருந்து நிகழ்ச்சியின்போது அறிமுகம் செய்தார். அவருடன் டாக்டர் டி.சந்துரு (வலம்), திரு கிஷோர் தர்யானானி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கி. ஜனார்த்­த­னன்

சிங்­கப்­பூர் இந்­திய நிறு­வ­னங்­களின் ஒரு­மித்த குர­லாக ஒலிக்க உள்ள சிங்­கப்­பூர் இந்­திய அமைப்பு­கள் சம்­மே­ள­னத்தை (எஃப்எஸ்­ஐஓ) நேற்று அதி­கா­ர­பூர்­வ­மா­கத் தொடங்கி வைத்த அதி­பர் ஹலிமா யாக்­கோப், சிங்­கப்­பூ­ரும் இந்­தி­யா­வும் பசு­மைப் பொரு­ளி­யல், மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல் போன்­ற­வற்­றில் இணைந்­துப் பணி­யாற்றி அடுத்த கட்ட வளர்ச்­சி­யைக் காண­லாம் என்­றார்.

கொவிட்-19 சிர­ம­ கா­லத்­துக்­குப் பிறகு சிங்­கப்­பூர் மீண்­டும் பொரு­ளி­யல் நட­வ­டிக்­கை­க­ளைத் தொடங்கி, உல­கத்­து­டன் மீண்­டும் இணை­யும் இத்­த­ரு­ணத்­தில் வணி­கங்­களும் ஊழி­யர்­களும் புதிய வாய்ப்­பு­க­ளைக் கைப்­பற்­றிக்­கொள்ள வேண்­டும் என்று அதி­பர் கூறி­னார்.

அந்த வாய்ப்­பு­களில் ஒன்று இரு நாடு­க­ளுக்­கும் முக்­கி­ய­மான பசு­மைப் பொரு­ளி­ய­லில் உள்­ளது.

நீடித்த, குறை­வான கரி­மத்தை வெளி­யேற்­றும் தீர்­வு­களின் ஆய்வு மேம்­பாடு, அவற்­றைப் பயன்­ப­டுத்­து­தல் ஆகி­ய­வற்­றில் சிங்­கப்­பூ­ரும் இந்­தி­யா­வும் ஒத்­து­ழைக்­க­லாம் என்று திரு­வாட்டி ஹலிமா விளக்­கி­னார்.

இரு நாடு­களும் அண்­மை­யில் கையெ­ழுத்­திட்ட அறி­வி­யல், தொழில்­நுட்ப, புத்­தாக்­கப் புரிந்­து­ணர்­வுக் குறிப்­பின்­கீழ் ஒத்­துழைக்க முடி­யும் என்­றும் அவர் கூறி­னார். அந்­தக் குறிப்­பின்­கீழ் உள்ள திட்­டங்­க­ளுக்கு இந்­திய அர­சாங்­கம் நிதி உதவி வழங்­கும்.

மேலும், மின்­னி­லக்­கப் பொரு­ளி­ய­லில் இரு நாட்டு தனி­யார் நிறு­வ­னங்­கள் சேர்ந்து இரு தரப்­புக்­கும் நன்மை தரும் தீர்­வு­களை உரு­வாக்­க­லாம் என்று அதி­பர் கூறி­னார். அதன்­வழி, அனை­வரை­யும் ஒருங்­கி­ணைக்­கக்­கூ­டிய மின்­னி­லக்­கச் சமூ­கங்­களை உரு­வாக்க முடி­யும் என்­றார் அவர்.

இரு நாட்டு பண­ப் பரிமாற்­றத்­திற்­கான சிங்­கப்­பூ­ரின் 'பேநவ்'வும் இந்­தி­யா­வின் 'யுனைடெ­ட் பே இன்­டர்­பேஸ்' பாங்­கா­ளித்­து­வத்­தை­யும் அவர் அதற்கு உதா­ர­ண­மா­கக் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூர் இந்­திய அமைப்­பு­கள் சம்­மே­ள­னத்­தின் சின்­னத்தை திரு­வாட்டி ஹலிமா நேற்­றைய விருந்து நிகழ்ச்­சி­யில் அறி­மு­கப்­ப­டுத்­தி­னார்.

வெளி­நாட்டு ஊழி­யர் பற்­றாக்­குறை, அதி­க­ரிக்­கும் வணி­கச் செல­வு­கள் உள்­ளிட்ட இந்­திய வணி­கர்­கள் எதிர்­நோக்­கும் பல்­வேறு சவால்­களில் உதவ சிங்­கப்­பூர் இந்­திய வர்த்­தக தொழிற்­ச­பை­யும் மேலும் 26 இந்­திய அமைப்­பு­களும் இணைந்து சிங்­கப்­பூர் இந்­திய அமைப்­பு­கள் சம்­மே­ள­னத்தை (எஃப்எஸ்­ஐஓ) அமைத்­துள்­ளன.

சிர­ம­மான கால­கட்­டங்­களில் தாக்­குப் பிடிப்­ப­தற்­கும் ஊழி­யர்­களைத் தக்­க­வைத்து அவர்­க­ளைப் பயிற்­சிக்கு அனுப்­பு­வ­தற்­கும் இந்­த சம்­மே­ள­னம் தனது உறுப்பு அமைப்­பு­க­ளுக்கு வழி­காட்­ட­வுள்­ளது.

2024ஆம் ஆண்டு தனது நூற்­றாண்டு நிறை­வைக் கொண்­டா­ட­உள்ள வர்த்­தக தொழிற்­சபை, இந்­தச் சம்­மே­ள­னத்தை உரு­வாக்­கும் பணி­யில் கிட்­டத்­தட்ட ஈராண்­டு­களுக்கு முன்­னரே ஈடு­பட்­ட­தாக அதன் தலை­வர் டாக்­டர் டி. சந்­துரு கூறி­னார். கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லால் கூடு­தல் வேகத்­து­டன் இந்­தப் புதிய சம்­மே­ள­னம் செயல்­வ­டி­வம் கண்­டது என்­றார் அவர்.

சம்­மே­ள­னத்­தின் மூல­ம் வர்த்­தக தொழிற்­ச­பை­யின் நிபு­ணத்­துவ, வர்த்­தக தொடர்­பு­களைப் பயன்­ப­டுத்­தும் வாய்ப்பு கிடைத்­துள்­ள­தாக அதன் உறுப்பு அமைப்­பான சிங்­கப்­பூர் கடை­ய­நல்­லூர் முஸ்­லிம் லீக் தெரி­வித்­தது.

கடந்த இரண்டு ஆண்­டு­களாக பொரு­ளி­யல் மீட்­சிக்­கும் வளர்ச்­சிக்­கும் சிங்­கப்­பூர் இந்­திய வர்த்­தக தொழிற்­சபை முக்­கி­யப் பங்கு ஆற்­றி­யுள்­ள­தா­கக் குறிப்­பிட்­டார் திரு­வாட்டி ஹலிமா.

சுமார் 500 பேர் கலந்­து­கொண்ட நிகழ்ச்­சி­யில் வர்த்­தக தொழிற்­ச­பை­யின் முந்­தைய தலை­வர்­கள் 'ஓய்­வு­பெற்ற கௌர­வத் தலை­வர்' என்ற பட்­டத்­து­டன் கௌர­விக்­கப்­பட்­ட­னர். திரு ஷபீர் ஹசான்­பாய், திரு ஆர் நாரா­ய­ண­மோ­கன், திரு தவு தயால் குப்தா, திரு விஜய் அய்­யங்­கார், திரு எம் ராஜா­ராம் ஆகி­யோர் இந்­தக் கௌர­வத்தை வழங்­கும் பத்­திரத்தை அதி­ப­ரி­டம் பெற்­ற­னர்.