ரணில் விக்ரமசிங்கே இலங்கை பிரதமராக பதவியேற்றார்

ரணில் விக்ரமசிங்கே இலங்கை பிரதமராக பதவியேற்றார்

2 mins read
6305c702-1537-47a3-aff6-af4e8d4ece94
கொழும்பில் ஊரடங்கு தொடங்குவதற்குமுன் பேருந்தில் முண்டியடித்துக்கொண்டு மக்கள் ஏறினர். படம்: ராய்ட்டர்ஸ் -

முன்­னைய பிர­த­ம­ரும் எதிர்த்­த­ரப்பு ஐக்­கிய தேசிய கட்­சி­யின் தலை­வ­ரு­மான திரு ரணில் விக்­ர­ம­சிங்கே, நேற்று மாலை இலங்கையின் பிர­தமராகப் பத­வி ஏற்­றார்.

திரு ரணில் விக்­ர­ம­சிங்கே அதி­பர் கோத்­த­பா­ய­வு­டன் புதன் அன்று ரக­சி­யச் சந்­திப்பை நடத்­தி­ய­தாக இலங்கை ஊட­கங்­கள் கூறின.

அதே வேளை­யில், இடைக்­கால அர­சாங்­கத்தை அமைக்க அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்சே விடுத்த அழைப்­பைத் தாம் ஏற்­றுள்­ள­தாக ஐக்­கிய மக்­கள் சக்­தி­யின் தலை­வர் சஜித் பிரே­ம­தாசா அறிக்கை விடுத்­துள்­ளார். இருப்­பி­னும், அதற்கு நிபந்­த­னை­யாக அதி­பர் கோத்­த­பாய பதவி விலக வேண்­டும் என்­றும் அதி­பர் பதவி என்ற ஒன்றே ஒழிக்­கப்­பட வேண்­டும் என்­றும் அவர் தமது அறிக்­கை­யில் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

இலங்­கை­யின் முன்­னாள் பிர­த­மர் மகிந்த ராஜ­பக்சே, அவ­ரின் மகன் நமல் ராஜ­பக்சே இரு­வ­ரும் நாட்டை விட்டு வெளி­யேற கொழும்பு நீதி­மன்­றம் பய­ணத் தடை விதித்­துள்­ளது. இதன்­படி, ஆளும் கட்சி அர­சி­யல் புள்­ளி­கள், முக்­கிய அதி­கா­ரி­கள் என 17 பேர் நாட்டை விட்டு வெளி­யே­று­வ­தற்­குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வே­ளை­யில் அதி­பர் கோத்­த­பா­ய­வுக்கு எதி­ரான நம்­பிக்கை இல்லா தீர்­மா­னம் நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­படும் என்று இலங்கை நாடா­ளு­மன்ற நாய­க­ரின் அலு­வ­கம் தெரி­வித்­தது.

'இலங்கை செல்­வ­தைத் தவிர்க்­க­வும்'

இதற்­கி­டையே, தேவை ஏற்­பட்­டால் மட்­டுமே இலங்­கைக்கு பய­ணம் மேற்­கொள்­ளு­மாறு வெளி­யுறவு அமைச்சு சிங்­கப்­பூ­ரர்­களுக்கு அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

இலங்­கை­யில் வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் நடந்து வரு­வதை அடுத்து, வெளி­யு­றவு அமைச்சு நேற்று இந்­தப் பயண ஆலோ­ச­னையை விடுத்­தி­ருந்­தது.

அத்­து­டன் இலங்­கை­யில் உள்ள சிங்­கப்­பூ­ரர்­கள் விழிப்­பு­நி­லை­யில் இருக்­கும்­ப­டி­யும் தங்­க­ளின் பாது­காப்பை உறு­தி­செய்­யத் தேவை­யான முன்­னெச்­செ­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் எடுக்­கும்­ப­டி­யும் அது அறி­வு­றுத்­தி­யது. ஆர்ப்­பாட்­டங்­களும் மக்­கள் அதி­க­மா­கக் கூடும் இடங்­க­ளை­யும் தவிர்க்­கும்­படி அது குறிப்­பிட்­டது. இலங்­கை­யில் பல வாரங்­க­ளாக அமை­தி­யான முறை­யில் நடந்து வந்த ஆர்ப்­பாட்­டங்­கள், கடந்த சில நாள்­களில் வன்­மு­றைச் சம்­ப­வங்­க­ளாக வெடித்­தன.

முன்­னைய பிர­த­மர் மகிந்த ராஜ­பக்­சே­யின் ஆத­ர­வா­ளர்­கள் அமைதி ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களைத் தாக்­கிய பின்­னர், அவர்­களும் பதி­லுக்­குத் தாக்­கி­யுள்­ள­னர். அந்­தச் சம்­ப­வங்­களில் குறைந்­தது எட்டு பேர் இறந்­த­னர். கிட்­டத்­தட்ட 200 பேர் காயமடைந்துள்ளனர்.