பிடோக் நார்த் 4வது மாடி வீட்டில் தீ; 3 வயது குழந்தை உட்பட மூவர் பலி

பிடோக் நார்த் அவென்யூ 2ல் இருக்­கும் புளோக் 409ன் நான்­கா­வது மாடி­ வீட்டில் மூண்ட தீயில் மூன்று வயது குழந்தை உட்­பட மூன்று பேர் மாண்­டு­விட்­ட­னர்.

சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை அதி­கா­ரி­கள் நேற்றுக் காலை சுமார் 6.40 மணிக்கு அங்கு சென்­ற­போது நால்­வர் மயங்­கி­ய நி­லை­யில் காணப்பட்டனர்.

எளி­தில் தீப்­பி­டிக்­கக்­கூ­டிய பொருள்­கள் வீட்டில் நிறைந்து கிடந்­தன.

மூன்று வயது கைக்­கு­ழந்­தை­யும் அந்தக் குழந்­தை­யின் 34 வயது தாயா­ரும் 35 வயது ஆட­வர் ஒரு­வ­ரும் சுயநினைவு இழந்த நிலை­யில் மருத்­து­வ­ம­னைக்குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர்.

அந்த ஆட­வ­ரும் கைக்­கு­ழந்­தை­யும் மருத்­து­வ­ம­னை­யில் மாண்­டு­விட்­ட­தாக காவல்­துறை தெரி­வித்­தது. தாயா­ரின் உடல்­நிலை கவ­லைக்­கி­ட­மாக இருக்­கிறது.

சம்­பவ இடத்­தில் 56 வயது மாது ஒரு­வர் மர­ண­ம­டைந்து­விட்­ட­தாக அதிகாரிகள் தெரி­வித்தனர். இத­னி­டையே, செய்­தி­யாளர்களிடம் பேசிய அந்­தக் குடி­யி­ருப்பு பேட்­டைக்­கான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டான் கியட் ஹாவ், தீ விபத்து நிகழ்ந்த வீட்­டில் ஐந்து பேர் குடி­யி­ருந்­த­தா­கத் தெரி­வித்­தார்.

அந்த வீட்­டில் குடி­யி­ருந்த தம்­ப­தி­யர் ஓர் அறையை மூன்று பேருக்கு வாட­கைக்கு விட்டு இருந்­த­னர். தீ மூண்ட வீட்டுக்குப் பக்­கத்து வீட்டில் இருந்த மூன்று பேரை­யும் பலவந்தமாக வீட்டிற்குள் நுழைந்து அதி­கா­ரி­கள் காப்­பாற்­றி­னர்.

அவர்­க­ளுக்கு இலேசான காயம். என்றா லும் மருத்­து­வ­மனைக்குச் செல்ல அவர்­கள் மறுத்­து­விட்­ட­னர்.

முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக பக்­கத்து வீடு­களில் வசிக்­கும் 60 பேர் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

தீ விபத்­துக்­கான கார­ணம் பற்றி புலன் விசா­ரணை நடந்து வரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!