மயங்கி விழும்வரை மூச்சடைக்கும் சவால்: பத்து வயது சிறுமி மரணம்; டிக்டாக் மீது வழக்கு

அமெ­ரிக்­கா­வில் இணைய சவால் விளை­யாட்டு ஒன்­றில் பங்­கெ­டுத்த நைலா ஆண்­டர்­சன் என்ற 10 வயது சிறுமி மர­ண­ம­டைந்­து விட்டதை அடுத்து ‘டிக்­டாக்’ செயலி மீது வழக்குத் தொடுக்­கப்­பட்டு இருக்­கிறது.

அந்த விளை­யாட்­டில் கலந்­து­கொள்­ப­வர்­கள் மயக்­கம் வரும் வரை மூச்­சு­வி­டாதபடி கழுத்தை நெரித்துக்கொள்ள வேண்­டும்.

மூன்று மொழி­களில் வல்­லமை பெற்ற அறி­வு­மிக்க சிறு­மி­யான நைலா, அமெ­ரிக்­கா­வில் ஃபிலடெல்­ஃபியா நக­ரில் உள்ள வீட்­டில் படுக்கை அறை­யில் டிசம்­பர் 7ஆம் தேதி சுய­நி­னை­வின்றிக் கிடந்­த­தாக மத்­திய நீதி­மன்­றத்­தில் மே 12ல் தாக்­க­லான புகார் மனு­வில் தெரி­விக்­கப்­பட்டு இருக்­கிறது.

சிறு­மிக்கு மருத்­து­வ­ம­னை­யில் தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்­டும் பல­னில்லை. ‘பிளாக்­அ­வுட் சேலஞ்ச்’ எனப்­படும் டிக்­டாக் சவால் போட்டி அந்த 10 வயது சிறு­மியைக் கவர்ந்து ஈர்க்­கும் வகை­யில் இடம்­பெற்று இருந்­தது. இத­னால் அந்­தச் சிறுமி இறந்­துவிட்­டார் என்று புகார் தெரி­விக்­கிறது.

இந்த வழக்­கில் டிக்­டாக்­கின் தாய் நிறு­வ­ன­மான ‘பைட்­டான்ஸ்’ என்ற நிறு­வ­ன­மும் பிர­தி­வா­தி­யாகச் சேர்க்­கப்­பட்டு இருக்­கிறது.

என்­றா­லும் இந்த வழக்கு பற்றி கருத்து எதை­யும் தெரி­விக்க விரும்­ப­வில்லை என்று அந்த நிறு­வனத்­தின் பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.

பிளாக்­அ­வுட் சேலஞ்ச் போட்­டி­யில் கலந்­து­கொண்ட இதர நான்கு சிறார்­களும் மர­ண­ம­டைந்து இருப்­பதாக அந்­தப் புகார் அறிக்கை தெரி­விக்­கிறது.

டிக்டாக் சவால் போட்­டி­யில் கலந்து­கொள்­ப­வர்­கள் கால­ணியைக் கட்­டும் கயிறு போன்ற வீட்­டில் உள்ள பொருள்­களைப் பயன்­ப­டுத்தி கழுத்தை இறுக்­கிக் கொள்­கி­றார்­கள்.

தங்­க­ளுக்கு மயக்­கம் வரும் வரை ஒரு சில விநா­டி­க­ளுக்கு அவ்­வாறு செய்­கி­றார்­கள். இந்­தச் சவால் சில நேரங்­களில் மர­ணத்­தில் முடிந்­து­வி­டு­கிறது.

இவ்­வே­ளை­யில், தன்­னு­டைய மக­ளின் மர­ணம் பற்றி செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் பேசிய தவைனா ஆண்­டர்­சன், இந்­தச் சவால் போட்டி மேலும் பல சிறார்­க­ளைக் கொன்று­விட்­டது என்­பது தனக்கு தெரி­ய­வந்திருப்­ப­தா­கக் கூறி­னார்.

இந்த ஆபத்­தான விளை­யாட்டு கள் முடி­வுக்கு வர­வேண்­டும் என்று அவர் கேட்­டுக்­கொண்­டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!