பிரதமர் லீ: அமைச்சரவை மாற்றம் ஜூனில் நிகழலாம்

ஜூன் மாதத் தொடக்­கத்­தில் சிங்­கப்­பூர் அமைச்­ச­ரவை மாற்றி அமைக்­கப்­ப­ட­லாம் என்று பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­துள்­ளார்.

அமைச்­ச­ரவை மாற்­றம் நிகழ்ந்­தால், சிங்­கப்­பூ­ரின் அடுத்த பிர­த­மர் என்று கரு­தப்­படும் லாரன்ஸ் வோங் துணைப் பிர­த­ம­ராக பதவி உயர்வு அளிக்­கப்­ப­டக்­கூ­டும்.

அமைச்­ச­ரவை மாற்­றம் தொடர்­பான பணி­கள் நடை­பெற்று வரு­

வ­தா­கக் குறிப்­பிட்ட திரு லீ, தாம் மேற்­கொள்ள இருக்­கும் வெளி­நாட்­டுப் பய­ணங்­க­ளுக்­குப் பின்­னர் அதற்­கான அறி­விப்பு வெளி

­யி­டப்­ப­ட­லாம் என்­றார்.

வருங்­கால ஆசியா தொடர்­பான அனைத்­து­லக மாநாடு மே 26, 27 தேதி­களில் ஜப்­பான் தலை­

ந­கர் தோக்­கி­யோ­வில் நடை­பெ­ற­உள்ளது.

நிக்­கே வர்த்­தக ஊட­கக் குழு­மம் ஏற்­பாடு செய்­துள்ள மாநாடு, 'பிரிந்­தி­ருக்­கும் உல­கில் மறு­வ­ரை­யறை செய்­யப்­பட்ட ஆசி­யான் பங்கு' என்­னும் தலைப்­பில் அரங்­கே­று­கிறது. மாநாட்டு நிகழ்­வு­கள் இணை­யத்­தி­லும் நேர­லை­யாக இடம்­பெற உள்­ளன.

பிர­த­மர் லீ இந்த மாநாட்­டில் நேர­டி­யாக பங்­கேற்­கி­றார்.

ஆசி­யான்-அமெ­ரிக்கா சிறப்பு உச்­ச­நிலை மாநாட்­டில் பங்­கேற்ற திரு லீ, நேற்று வாஷிங்­ட­னி­

லி­ருந்து புறப்­பட்­டார். முன்­ன­தாக, சிங்­கப்­பூர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அவர் பேசி­னார்.

அமைச்­ச­ரவை நட­வ­டிக்­கை­கள் தொடர்­பான விவ­ரங்­களை அப்­போது பிர­த­ம­ரி­டம் செய்­தி­யா­ளர்­கள் வின­வி­னர்.

அதற்­குப் பதி­ல­ளித்த அவர், "அதற்­கான பணி­களில் ஈடு­பட்டு வரு­கி­றேன். என்­னு­டைய வெளி­நாட்­டுப் பய­ணங்­கள் முடிந்த பின்­னர், அதா­வது ஜூன் மாதத் தொடக்­கத்­தில் அது­கு­றித்த அறி­விப்­பு­களை வெளி­யிட இய­லும் என்று நம்­பு­கி­றேன்," என்­றார்.

நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங், கடந்த மாதம் சிங்­கப்­பூரின் நான்­காம் தலை­முறை அணி­யின் தலைவரா­கப் பெயர் குறிப்­பி­டப்­பட்­டார்.

"இதன்­மூ­லம் நாட்­டின் அடுத்த பிர­த­மர் ஆவ­தற்­கான வாய்ப்பு திரு வோங்­கிற்கு கிடைக்­கக்­கூ­டும்.

சிங்­கப்­பூ­ரின் அடுத்த பொதுத் தேர்­தல் 2025ஆம் ஆண்டு நடை­பெற வேண்­டி­யது. அந்­தத் தேர்­த­லில் மக்­கள் செயல் கட்­சியை திரு வோங் வழி­ந­டத்­து­வாரா என்­பது குறித்து பின்­னர் முடி­வெ­டுக்­கப்­படும் என திரு லீ கூறி­யி­ருந்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!