தங்கம் வென்று சாதித்த சாந்தி

தங்கம் வென்று சாதித்த சாந்தி

2 mins read
4b69d95e-d38c-44f8-82ea-b289c11e92cd
வெற்றிப் புன்னகையுடன் சாந்தி பெரேரா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டாவது தங்கம்

ஓட்­டப் பந்­த­யத்­தில் சிங்­கப்­பூ­ரின் ராணி­யா­கத் திக­ழும் சாந்தி பெரேரா தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் 200 மீட்­டர் ஓட்­டத்­தில் தமது இரண்­டா­வது தங்­கப் பதக்­கத்­தைக் கைப்­பற்­றி­னார்.

ஏழு ஆண்­டு­க­ளுக்­கு­முன் அப்­போட்­டி­களில் தங்­கம் வென்­றி­ருந்த சாந்தி, வியட்­னா­மில் நடந்­து­வ­ரும் 31வது தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் நேற்று புதிய தேசிய சாத­னை­யு­டன் தங்­கத்­தைத் தன­தாக்­கிக்­கொண்­டார்.

இதற்­கு­முன் 23.60 விநாடி­களில் ஓடி சாதனை படைத்­தி­ருந்த சாந்தி, நேற்று பந்­த­யத் தொலை­வைக் கடக்க 23.52 விநாடிளை மட்­டுமே எடுத்­துக்­கொண்­டார்.

பிலிப்­பீன்­சின் கைலா ஆஷ்லி ரிச்­சர்ட்­சன், கேலா அனிஷ் ரிச்­சர்ட்­சன் சகோ­த­ரி­கள் முறையே வெள்ளி, வெண்­க­லப் பதக்­கங்­

க­ளைக் கைப்­பற்­றி­னர்.

ஓடி முடித்­த­தும் தாம் எடுத்­துக்­கொண்ட நேரத்­தைத் திரை­யில் கண்ட சாந்தி, உணர்ச்­சிப் பெருக்­கு­டன் ஆனந்­தக் கண்­ணீர்­விட்­டார்.

"இது உண்­மை­தானா, இது உண்­மை­தானா?" என்று தம்­மா­லேயே நம்ப முடி­யா­மல் மீண்­டும் மீண்­டும் கேட்­டார் இந்­தத் தங்க மங்கை.

தொடர்ந்து நான்­கா­வது முறை­யா­கத் தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் இவர் பதக்­கம் வென்று சாதித்­துள்­ளார்.

2013ஆம் ஆண்டு 12 விநாடி

­க­ளுக்­குள் 100 மீட்­டர் தூரம் ஒடி சாதனை படைத்த முதல் சிங்­கப்­பூர் பெண் என்­னும் சாத­னை­யைப் படைத்­த­போது சாந்தி பெரேரா அதி­கம் பேசப்­பட்­டார்.

அதன் பின்­னர் 2015ஆம் ஆண்­டின் தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் அவர் முதல் தங்­கப்­ப­தக்­கம் வென்று சாதித்­தார். 200 மீட்­டர் ஓட்­டத்­தில் அவர் முத­லா­வ­தாக வந்து அவர் அந்த சாத­னைக்­குச் சொந்­தக்­கா­ரர் ஆனார்.

ஆனால், 2017ஆண்­டில் கோலா­லம்­பூ­ரில் அந்த நடை­பெற்ற போட்­டி­யில் அவர் தோல்­வி­யைச் சந்­திக்க வேண்டி இருந்­தது.

தற்­போது மீண்­டும் தனது சாதனையை சாந்தி பெரேரா நிரூ­பித்­துள்­ளார்.

"திட­லில் தடை­க­ளைத் தாண்டி இந்த வெற்­றியை அறு­வடை செய்ய பல மனத்­த­டங்­கல்­க­ளைத் தாண்ட வேண்டி இருந்­தது. நான் வெல்­வேனா என்ற கேள்­விக்கு எனது வெற்றி விடை­யாகி உள்­ளது," என்­றார் அவர்.

ஓடி முடித்து சாதித்­த­தும் உள்­ளத்­தில் இருந்து கிளம்­பிய ஆனந்­தம் கண்­ணீ­ராக அவ­ரது கன்­னங்­களில் வழிந்­தோ­டி­யது.