பத்து ஆசியான் நாடுகளின் ரோட்டரி சங்கங்களுக்கு இடையில் ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, இவை அத்தனையும் ஒரே குழுவின்கீழ் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளன.
சமூக, சுற்றுச்சூழல் விவகாரங்களை ஆதரிக்கும் பொருட்டு இந்த ஒப்பந்தத்தை இவை ஏற்
படுத்தி உள்ளன.
புதிய 'ஆசியான் ரோட்டரி இன்டர்கன்ட்ரி குழு' இந்த வட்டாரத்தில் உள்ள 1,600க்கும் மேற்பட்ட ரோட்டரி சங்கங்களின் 42,000 உறுப்பினர்களை ஒருங்கிணைக்கிறது.
இந்தப் புதிய குழு நேற்று சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு மண்டபத்தில் முதன்முறையாகச் சந்தித்தது. அதிபர் ஹலிமா யாக்கோப் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
"ஆசியான் உறுப்பு நாடுகளில் உள்ள ரோட்டரி உறுப்பினர்கள் தங்களுக்கு இடையிலான தொடர்பு களை ஏற்படுத்தி யோசனைகளை யும் புத்தாக்கங்களையும் பரிமாறிக்கொள்வதற்கான வாய்ப்பு
களைப் பெற இந்தப் புதிய தளம் வழிவகுக்கும்," என்றார் அதிபர்.
ரோட்டரி இன்டர்நேஷனல் போன்ற அமைப்புகள் கடந்த ஈராண்டுகளில் மேற்கொண்ட முக்கியப் பணிகளை அவர் மேற்கோள் காட்டினார். சிங்கப்பூர் ரோட்டரி சங்கம், கொவிட்-19 வேலைஇழந்தோர் நிதி ஒன்றை ஏற்படுத்தியதை அவர் உதாரணமாகக் கூறினார்.
கொள்ளைநோய் காலத்தில் வேலை இழந்தோருக்கு உதவிக்
கரம் நீட்ட இந்த நிதி ஏற்படுத்தப்பட்டது. அத்துடன், முன்களப் பணியாளர்களுக்கு அறுவை சிகிச்சை முகக்கவசம், முகக்காப்பு, மருத்துவ அங்கிகள் போன்றவற்றை நன்கொடையாக வழங்க இந்த நிதி பயன்பட்டது என்றார் அவர்.
இதற்கிடையே, செய்தியாளர் களிடம் பேசிய ரோட்டரி இன்டர் நேஷனல் தலைவர் சேகர் மேத்தா, ஆசியானின் சுற்றுச்சூழல், கல்வி போன்றவற்றில் தமது குழு கவனம் செலுத்தும் என்றார்.

