தாமஸ் கிண்ண பேட்மிண்டன்: வெற்றிவாகை சூடி வரலாறு படைத்த இந்திய அணி

தாமஸ் கிண்ண பேட்மிண்டன்: வெற்றிவாகை சூடி வரலாறு படைத்த இந்திய அணி

2 mins read
227b69ed-c56e-4157-b031-4369810d1f1d
இந்திய அணியின் ஆடவர் பிரிவு பேட்மிண்டன் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் நேற்று கொண்டாட்ட உணர்வுடன் மேடையில் காணப்பட்டனர். படம்: இபிஏ -

தாய்­லாந்­தில் நடை­பெற்ற தாமஸ் கிண்ண பேட்­மிண்­டன் போட்­டி­யில் இந்­திய அணிக்கு அபார வெற்றி கிட்­டி­யது. தாமஸ், உபர் கிண்­ணத்­துக்­கான பேட்­மிண்­டன் போட்டி தாய்­லாந்து தலை­ந­கர் பேங்­காக்­கில் நடந்து வந்­தது.

இதில் ஆண்­க­ளுக்­கான தாமஸ் கிண்­ணப் போட்­டி­யின் காலி­றுதி ஆட்­டத்­தில் இந்­திய அணி மூன்­றுக்கு இரண்டு என்ற ஆட்­டக்­கணக்­கில் மலே­சி­யாவை வீழ்த்தி 43 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு அரை இறு­திச் சுற்­றுக்கு முன்­னே­றி­யது.

தொடர்ந்து, அரை­யி­று­திச் சுற்­றில் இந்­திய அணி மூன்­றுக்கு இரண்டு என்ற ஆட்­டக்­க­ணக்­கில் முன்­னாள் வெற்­றி­யா­ள­ரான டென்­மார்க்கை வீழ்த்தி இறு­திப் போட்­டிக்கு முன்­னே­றி­யது. நேற்று நடந்த இறுதி ஆட்­டத்­தில் இந்­திய அணி, நடப்பு வெற்­றி­யா­ள­ரான இந்­தோனீ­சி­யா­வு­டன் மோதி­யது.

இதில், இந்­திய வீரர் லக்­சயா சென் முதல் போட்­டி­யில் 8-21, 21-17, 21-16 என்ற புள்ளிக் கணக்­கில் ஆண்­டனி கின்­திங்கை வீழ்த்தி வெற்றி பெற்­றார். இத­னால், இறு­திப் போட்­டி­யில் 1-0 என்ற புள்ளி கணக்­கில் இந்­தியா முன்­னிலை வகித்­தது.

அதைத் தொடர்ந்து இரண்­டாவது சுற்­றில் இந்­திய இணை­யினர் சாத்­விக் - சிராக் வெற்றி பெற்­ற­னர். 3வது போட்­டி­யில் இந்­திய அணி­யின் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி பெற்ற நிலை­யில் இந்­திய அணி 3-0 என்ற கணக்­கில் வெற்றி பெற்று தாமஸ் கிண்­ணத்தை வென்­றது.

இந்­தோ­னீ­சியா அணி 14 முறை வெற்­றி­யா­ள­ராக இருந்து வந்­துள்ள நிலை­யில், மூன்­றுக்கு பூஜ்­ஜி­யம் என்ற ஆட்­டக்­க­ணக்­கில் இந்­தோனீ­சி­யா­வைச் சாய்த்து இந்­திய அணி அபார வெற்றி பெற்­றது.

தாமஸ் கிண்ண பேட்­மிண்­டன் வெற்­றி­யா­ளர் பட்­டத்தை 73 ஆண்டு­களில் முதல்­மு­றை­யாக இந்­தியா வென்­றுள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

இதை­ய­டுத்து வர­லாற்­றுச் சாதனை படைத்த இந்­திய அணிக்கு ஒரு கோடி ரூபாய் (S$180,000) ரொக்­கப் பரிசு வழங்­கப்­படும் என்று விளை­யாட்­டுத் துறை அமைச்­சர் அனு­ராக் தாகூர் நேற்று டுவிட்­டரில் அறி­வித்­தி­ருந்­தார்.

இந்த வெற்றி இன்­னும் பல விளை­யாட்டு வீரர்­க­ளுக்கு ஒரு தூண்­டு­த­லாக இருக்­கும் என்று கூறித் தமது வாழ்த்­து­க­ளை­யும் நேற்று தெரி­வித்­துக்­கொண்­டார் பிர­த­மர் மோடி.