முதல் சாங்கி விமானத்துறை மாநாடு சிங்கப்பூரில்

முதல் சாங்கி விமானத்துறை மாநாடு சிங்கப்பூரில்

2 mins read

கொவிட்-19 கொள்­ளை­நோய் தொடங்­கி­ய­து­மு­தல் வட்­டார நாடு­களில் நடக்­க­வி­ருக்­கும் முதல் முக்­கி­ய­மான விமா­னத்­துறை நிகழ்வு நாளை சிங்­கப்­பூ­ரில் தொடங்­க­வுள்­ளது. இரண்டு நாள் நடை­பெ­ற­விருக்­கும் சாங்கி விமா­னத்­துறை மாநாட்­டில் 45 நாடு­க­ளைச் சேர்ந்த 300க்கும் மேற்­பட்ட அனைத்­து­லக விமா­னத்­து­றைத் தலை­வர்­கள், அர­சி­யல் தலை­வர்­கள் மற்­றும் மூத்த நிர்­வா­கி­கள் கலந்­து­கொள்ள இருக்­கின்­ற­னர்.

இது குறித்து சிங்­கப்­பூர் சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் (சிஏ­ஏ­எஸ்) நேற்று அறிக்கை வெளி­யிட்­டி­ருந்­தது.

விமா­னப் பய­ணங்­க­ளுக்­குக் கொள்­ளை­நோய் ஒரு முற்­றுப்­புள்ளி வைத்­ததை அடுத்து அனைத்­து­லக விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை தற்­போது மெல்ல மீண்டு வரு­கிறது.

சிங்­கப்­பூர் உட்­பட பல நாடு­கள் தங்­க­ளின் எல்­லைக் கட்­டுப்­பா­டு­களைத் தளர்த்தி வரு­வ­து­டன் விமா­னப் பய­ணங்­களை முந்­தைய நிலைக்­குக் கொண்டு செல்­ல­வும் முயன்று வரு­கின்­றன.

போக்­கு­வ­ரத்து அமைச்­சு­டன் சிஏ­ஏ­எஸ் இணைந்து ஏற்­பாடு செய்­துள்ள இந்த மாநாடு, சேன்ட்ஸ் எக்ஸ்போ மற்­றும் மாநாடு நிலை­யத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது.

போக்­கு­வ­ரத்து அமைச்­சர்­கள், சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை­யைச் சேர்ந்த மூத்த நிர்­வாகி­கள், அனைத்­து­லக அமைப்­பு­கள், விமான நிலை­யங்­கள், விமான நிறு­வ­னங்­கள், விமான உற்­பத்தி நிறு­வ­னங்­கள், விமா­னப் போக்­கு­வரத்­துச் சேவை வழங்­கு­நர்­கள் ஆகி­யோர் மாநாட்­டுக்கு வருகை அளிப்­பர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மீண்­டும் அனைத்­து­லக சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்­துச் செயல்­பா­டு­க­ளைப் பாது­காப்­பு­மிக்க, நீடித்த நிலைத்­தன்­மை­யு­டைய, அனைத்­தை­யும் உள்­ள­டக்­கும் தன்மை கொண்­ட­தாக மாற்­று­வதை மாநாட்­டில் கலந்­து­கொள்­ளும் அனைத்­து­லக விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் தலை­வர்­கள் உறு­தி­செய்­வர் எனக் கூறப்­பட்­டது.

கடந்த ஏப்­ரல் 1 முதல் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பய­ணி­க­ளுக்கு சிங்­கப்­பூர் அதன் எல்­லை­க­ளைத் திறந்­தது.

விமா­னப் போக்­கு­வ­ரத்து மைய­மாக சாங்கி திகழ்­வதை உறு­தி­செய்­வ­தற்கு இத்­திட்­டம் நடை­முறைக்கு வந்­தது.

இதற்­கி­டையே, அனைத்­து­லக மனித முத­லீட்டு வாய்ப்­பு­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்­கும் ஒப்­பந்­தங்­களில் சிங்­கப்­பூர் இந்த மாநாட்­டின்­போது கையெ­ழுத்­தி­டும். அத்­து­டன் ஆசிய பசி­பிக் வட்­டார விமா­னப் போக்­கு­வ­ரத்­துப் பாது­காப்­புத் தரத்­தை­யும் அது உறு­தி­செய்­யும்.