விசாக தினத்தை முன்னிட்டு ஊரடங்கைத் தளர்த்திய இலங்கை

இலங்­கை­யில் அமல்­ப­டுத்­தப்­பட்ட ஊர­டங்கு உத்­த­ரவு நேற்று அனு­சரிக்­கப்­பட்ட விசாக தினத்­துக்­காக தளர்த்­தப்­பட்­ட­தாக இலங்கை அர­சாங்­கம் அறி­வித்­துள்­ளது.

மிக மோச­மான பொரு­ளி­யல் நெருக்­க­டி­யைச் சந்­தித்­து­வ­ரும் சூழ்­நி­லை­யில் நேற்று ஆர­வா­ர­மின்றி அமை­தி­யான முறை­யில் விசாக தினக் கொண்­டாட்­டங்­கள் நடந்­தன.

இலங்­கை­யில் விசாக தினம் மிக முக்­கி­ய­மான சம­யக் கொண்­டாட்­டங்­களில் ஒன்­றா­கும். நாடு முழு­வ­தும் இது மிக­வும் சிறப்­பா­கக் கொண்­டா­டப்­படும்.

ஆனால் இவ்­வாண்டு பொரு­ளி­யல் சூழ்­நி­லை­யைக் கார­ணம்­காட்டி வழக்­க­மாக ஏற்­பாடு செய்­யப்­படும் கொண்­டாட்­டங்­களை அர­சாங்­கம் மேற்­கொள்­ள­வில்லை.

மக்­கள் தங்­கள் விருப்­பத்­திற்­கேற்ப சொந்த கொண்­டாட்­டங்­களில் ஈடு­ப­ட­லாம் என்று அர­சாங்­கம் தெரி­வித்­தி­ருந்­தது.

இலங்­கை­யில் கடந்த சில ஆண்டு­க­ளாக விசாக தினக் கொண்­டாட்­டங்­க­ளுக்­குத் தடங்­கல் ஏற்­பட்டு வந்­தது. 2019ஆம் ஆண்டு ஈஸ்­டர் பண்­டிகை அன்று நடத்­தப்­பட்ட தாக்­கு­தல், 2020, 2021ஆம் ஆண்­டு­களில் கொவிட்-19 தொற்று ஆகிய கார­ணங்­க­ளால் விசாக தினத்­தைக் கோலா­க­ல­மா­கக் கொண்­டாட முடி­ய­வில்லை.

இந்­நி­லை­யில் ஊர­டங்கு முழு­மை­யாக மீட்­டுக்­கொள்­ளப்­பட்­டதா அல்­லது இது தற்­கா­லிக தளர்வா என்­பது குறித்த தக­வல்­களை அந்­நாட்டு அர­சாங்­கம் உறு­தி­யாகத் தெரி­விக்­க­வில்லை.

அர­சாங்க ஆத­ர­வா­ளர்­க­ளுக்­கும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்­கும் இடையே மூண்ட கல­வ­ரத்­தில் குறைந்­தது ஒன்­பது பேர் மாண்­டனர், 225க்கும் மேற்­பட்­டோர் காய­ம­டைந்­த­னர். இத­னைத் தொடர்ந்து ஒரு வார கால­மாக நாடு முழு­வ­தும் ஊர­டங்கு அமல்­படுத்­தப்­பட்­டது.

பௌத்த சம­யத்­தார் பெரும்­பான்­மை­யாக உள்ள இலங்­கை­யில் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் தொடர்ந்து அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்­சே­யின் பதவி வில­க­லைக் கோரி வரு­கின்­ற­னர்.

உணவு, எரி­பொ­ருள், மருந்து ஆகி­ய­வற்­றுக்­குத் தட்­டுப்­பாடு. அத்­து­டன் இது­வரை இல்­லாத அள­வுக்­குப் பொரு­ளா­தார மந்­த­நிலை. மிக அதிக நேரத்­திற்கு மின்­சா­ரத் தடை. இவை யாவும் நாட்­டில் உள்ள 22 மில்­லி­யன் மக்­க­ளுக்­குக் கடும் துயரை அளித்து வரு­கின்­றன.

புத்­த­ரின் பிறப்பு, இறப்பு மற்­றும் அவர் அறி­வொளி பெற்­றதை அனு­ச­ரிப்­பதே விசாக தினம்.

ஒன்­று­கூடி தியா­னம் செய்­தல், பௌத்த விளக்­கப் பேரு­ரை­க­ளைக் கேட்­டல் போன்­ற­வற்­றில் அமைதி­யான முறை­யில் நாட்டு மக்­கள் நேற்று கலந்­து­கொண்­ட­னர்.

இதற்­கி­டையே, நாளை தமது முதல் நாடா­ளு­மன்ற அமர்வு நடை­பெ­ற­வுள்ள நிலை­யில் இலங்­கை­யின் புதிய பிர­த­ம­ரா­கப் பதவி ஏற்­றுள்ள ரணில் விக்­ர­ம­சிங்கே, 73, ஐக்­கிய அர­சாங்­கத்தை அமைப்­ப­தற்­குத் திண­று­கி­றார்.

தற்­போது இலங்கை அதி­ப­ராக உள்ள கோத்­த­பாய ராஜ­பக்சே பதவி வில­கி­னால் மட்­டுமே எந்த ஒரு புதிய நிர்­வா­கப் பொறுப்­பை­யும் தாங்­கள் ஏற்­பர் என்று எதிர்க்­கட்­சி­கள் கூறி வரு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!