தமிழகத்தில் ஐவரில் ஒருவருக்கு சிறுநீரக செயல்பாடு குறைந்துள்ளதாக தமிழ்நாட்டு பொதுச் சுகாதாரம், நோய்த் தடுப்புத் துறை நடத்திய ஆய்வு கூறுகிறது.
தமிழ்நாட்டில் சிறுநீரகக் கோளாறு பற்றி அதிக விழிப்புணர்வு தேவை என்று ஆய்வுமுடிவுகள் காட்டுவதாக அதன் அறிக்கை தெரிவித்தது.
தமிழ்நாட்டின் பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு துறை, நாள்பட்ட சிறுநீரக கோளாறு தொடர்பான இந்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தியது.
அதில் ஐந்து பேரில் ஒருவருக்கு சிறுநீரகத்தின் செயல்பாட்டைக் காட்டும் அளவுருக்கள் அதிகமாக இருப்பதாக முதல்கட்ட ஆய்வறிக்கையில் கூறியது.
தமிழ்நாட்டில் சிறுநீரகக் கோளாறு குறித்து போதுமான தரவுகள் இல்லாதததால் முதல்முறையாக இத்தகைய ஆய்வு நடத்தப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் 177 இடங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட 5310 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
அவர்களில் சுமார் 19.7 விழுக்காட்டனருக்கு சிறுநீரில் ரத்தம் இருந்தது. அல்லது சிறுநீரில் ஆல்புமின் புரதம் வெளியேறியது. அல்லது அளவுக்கு அதிகமான கிரியேட்டினின் இருந்தது.
நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உள்ளவர்கள் கட்டாயம் சிறுநீரக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் சிறுநீரகச் செயல்பாட்டைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அறிக்கை கூறியது.

