ஸெலென்ஸ்கி: உக்ரேனில் முடங்கிப்போன ரஷ்ய படை

ஸெலென்ஸ்கி: உக்ரேனில் முடங்கிப்போன ரஷ்ய படை

2 mins read
95a9e72e-d91b-4518-ab94-9b47bf85ccf6
உக்ரேனில் ரஷ்ய தாக்குதல் காரணமாக இடம்பெயர்ந்த மக்களில் சிலர் நிப்ரோ என்ற நகருக்கு வெளியே அனைத்துலக அமைப்பு வழங்கிய மளிகைப் பொருள்களைப் பெற்றுக் கொண்டனர். படம்: ராய்ட்டர்ஸ் -

மேலும் முன்னேற முடியாமல் ரஷ்யா தேங்கிவிட்டதாக உக்ரேன் அதிபர் அறிவிப்பு

உக்­ரே­னில் ரஷ்­யப் படை­கள் இனி­மேல் முன்­னேற முடி­யாத அளவுக்கு முடங்­கிப்­போய்­விட்­டன என்று உக்­ரே­னிய அதி­பர் ஸெலென்ஸ்கி தெரி­வித்­தார்.

உக்­ரே­னின் இரண்­டா­வது ஆகப் பெரிய நக­ரான கார்­கிவ்வை பிடிக்க வந்த ரஷ்­யப் படை­களைப் பின்­வாங்க வைத்து, ரஷ்­யா­வு­டன் கூடிய எல்­லை­வரை உக்­ரேனி­யப் படை­கள் முன்­னே­றி­விட்­ட­தாக உக்­ரேன் நேற்று தெரி­வித்­தது.

அதே­வே­ளை­யில், போராட போதிய அள­வுக்குச் சேமப்­படை வீரர்­கள் இல்­லாமல் ரஷ்­யப் படை­கள் திண்­டா­டு­வ­தாக வல்­லு­நர்­கள் கூறு­கி­றார்­கள்.

இந்­நி­லை­யில், உக்­ரே­னில் ரஷ்யா தொடுத்து இருக்­கும் போர், அந்த நாடு திட்­ட­மிட்­ட­தைப் போல இல்லை என்­றும் அந்­தப் போரில் கடை­சி­யில் உக்­ரேனே வெற்றி பெறும் என்­றும் நேட்டோ தலைமைச் செய­லா­ளர் ஜென்ஸ் ஸ்டோல்­டென்­பர்க் கூறினார்.

உக்­ரே­னுக்கு மேலும் ராணுவ உதவி தேவை என்று அவர் கோரிக்கை விடுத்­தார்.

அதே­வே­ளை­யில், ரஷ்­யப் படை­ க­ளுக்­கும் உக்­ரேன் தரப்­பு­களுக்­கும் இடை­யில் கடும் மோதல் நடந்து வரும் டோன்­பாஸ் வட்­டா­ரத்­தில், உக்ரே­னி­யப் படை­களைச் சுற்றி வளைக்க ரஷ்யா முயன்று வரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. உக்­ரேன் மீது ரஷ்யா படை­யெ­டுத்து 82 நாள்­கள் ஓடி­விட்­டன.

இந்த நிலை­யில், தான் எதிர்­பார்த்­த­தைப் போல ரஷ்­யா­வுக்கு வெற்றி கிட்­ட­வில்லை என்று பல தரப்­பு­களும் கூறு­கின்­றன.

டோன்­பாஸ் வட்­டா­ரத்­தில் ரஷ்யத் துருப்­பு­கள் 23 குடி­யிருப்பு­களை நாசப்­படுத்­தி­விட்­ட­தாக உக்­ரே­னிய ராணு­வத்தை மேற்­கோள்­காட்டி 'கியவ் இன்­டி­பென்­டண்ட்' என்ற செய்­தித்­தாள் தெரி­வித்­தது. இதற்­கி­டையே, அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் ஆண்­டனி பிளிங்­கன், உக்­ரே­னிய வெளி­யுறவு அமைச்­சரை பெர்­லி­னில் சந்­தித்­தார்.

உக்­ரே­னுக்கு மேலும் ஆயு­தங்­களும் உத­வி­களும் வந்துகொண்டு இருப்­ப­தாக அந்­தச் சந்­திப்­புக்­குப் பிறகு உக்­ரே­னிய வெளி­யு­றவு அமைச்­சர் குலோபா கூறி­னார்.

ரஷ்­யப் படை­க­ளுக்குக் கடும் எதிர்ப்பைக் கொடுத்­து­வ­ரும் உக்­ரே­னி­யப் படை­கள் ரஷ்­யா­வின் ஏவு­க­ணை­கள், ஹெலி­காப்­டர்­கள் உள்­ளிட்ட 11 ஆகாய ராணு­வச் சாத­னங்­களை நாசப்­ப­டுத்­தி­விட்­ட­தா­கத் தெரி­வித்­தன.

இந்நிலையில் ஃபின்­லாந்து, சுவீடன் நாடு­கள் நேட்டோ அமைப்பில் சேரும் முயற்­சி­களை முடுக்­கி­விட்டு இருக்­கின்­றன.

இதன்­ மூ­லம் ரஷ்­யா­வுக்கு ராணுவ ரீதி­யில் மட்­டு­மின்றி அர­ச­தந்­திர நிலை­யி­லும் பாதிப்பு ஏற்­படும் வாய்ப்பு தலை­தூக்கி இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.