கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சாங்கி விமான நிலையத்தின் முனையம் 5ன் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கவிருக்கின்றன.
கட்டுமானப் பணிகள் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் தொடங்கும் என்றும் முனையம் 5, 2030களின் மத்தியில் தயாராக இருக்கும் என்றும் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் இன்று கூறினார்.
கொவிட்-19 பெருந்தொற்றின் பாதிப்பிலிருந்து மீண்டு சிங்கப்பூர் அதன் விமானத்துறையின் எதிர்கால திறன்களையும் வளங்களையும் எதிர்பார்த்ததைவிட விரைவாக வளர்த்துக்கொள்ளும் என்றும் அவர் கூறினார். முனையம் 5ன் வடிவமைப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அது மேலும் மெருகூட்டப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மண்டபத்தில் இன்று(மே 17) தொடங்கிய இரண்டு நாள் சாங்கி விமானத்துறை மாநாட்டில் அமைச்சர் பேசினார்.


