புதிய மின்னிலக்க, புலனாய்வு சேவை எஸ்டோனியா, லத்திவியாவிடம் கற்றுக்கொள்ளும் சிங்கப்பூர்

புதிய மின்னிலக்க, புலனாய்வு சேவை எஸ்டோனியா, லத்திவியாவிடம் கற்றுக்கொள்ளும் சிங்கப்பூர்

1 mins read
babf4076-8690-464d-bb19-4fd79cd7445f
வரும் ஆண்டிறுதிக்குள் புதிய மின்னிலக்க, புலனாய்வு சேவை உருவாக்கப்படும். படம்: தற்காப்பு அமைச்சு -

பெருகிவரும் மின்னிலக்க அச்சுறுத்தல்களால் பாதுகாப்பை மேம்படுத்த சிங்கப்பூர் ஆயுதப்படைகள், பால்டிக் நாடுகளான எஸ்டோனியா, லத்திவியா ஆகிய நாடுகளிடம் கற்றுக்கொண்டு புதிதாக மின்னிலக்க, புலனாய்வு சேவையை உருவாக்கவுள்ளன.

ஆகாய, நில, கடல் படைகளுக்குப் பிறகு சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் நான்காவது பிரிவாக இச்சேவை அமைக்கப்படுகிறது. இதற்காக எஸ்டோனியா, லத்திவியா ஆகிய நாடுகளுக்குச் சென்றது நல்ல பயன் அளித்திருப்பதாக தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென், லத்திவியாவின் தலைநகர் ரிகாவிலிருந்து செய்தியாளர்களிடம்.

இவ்வாண்டு மார்ச் மாதத்தில் வரவு செலவு திட்டத்தின்போது அறிவிக்கப்பட்ட இந்தச் சேவை, வரும் ஆண்டிறுதிக்குள் உருவாக்காப்படும். புலனாய்வு, இணைய மற்றும் உளவியல் தற்காப்புக்கு இச்சேவை பொறுப்பேற்கும்.

வானிலும் நிலத்திலும் கடலிலும் தாக்குதல்களை நடத்துவது போல் எதிரிகள் இணைய வெளியிலும் தாக்குதல்கள் நடத்தலாம் என்பதை டாக்டர் இங் சுட்டினார்.