தொடர்ந்து வீசும் வெப்ப அலை

தொடர்ந்து வீசும் வெப்ப அலை

1 mins read
a0c2c327-8415-4255-b08f-db0a48b73d42
வெப்பநிலை கடந்த வெள்ளிக்கிழமையினபோது 36.7 டிகிரி செல்சியஸ் வரை பதிவானது. கோப்புப் படம் : ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மே மாதத்தின் எஞ்சியுள்ள நாட்கள், முன்னைய நாட்களைவிட அதிக வெப்பத்துடன் இருக்கலாம். சில இரவுகளும் வெப்பமாகவும் ஈரத்தன்மையுடனும் இருக்கக்கூடும்.

வெப்பநிலை சில நாட்களுக்கு 36 டிகிரி செல்சியஸ் வரை உயரலாம் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வெப்பநிலை, சிங்கப்பூரின் தெற்கு, கிழக்குக் கடலோரப்பகுதிகளில் 28 டிகிரி செல்சியஸ் வரை உயரலாம் என்று தேசிய சுற்றுப்புற வாரியத்தின் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது.

கிழக்கிலிருந்தும் தென்கிழக்கிலிருந்தும் வீசும் காற்று இவற்றுக்குக் காரணம் என்றது சிங்கப்பூர் வானிலை ஆய்வகம்.

மே மாதத்திற்கான மழைப்பொழிவு ஒட்டுமொத்தமாக சராசரியான அளவுக்குக் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.