நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியின் முன்னாள் விரிவுரையாளர் ஒருவர், சமய, இன உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் ேபசியதற்காக நேற்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
திரு டான் பூன் லீ மீது இன உணர்வை புண்படுத்தியதாகவும் சமய நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் கருத்துகளைத் தெரிவித்ததாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி ஆச்சர்ட் ரோட்டில் உள்ள ஆங்குலியா பூங்காவில் 26 வயது தேவ் பர்கேஷை எதிர்கொண்டபோது அவர் அத்தகைய கருத்துகளை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. சிங்கப்பூரரான இந்திய-பிலிப்பீனோ தம்பதிக்குப் பிறந்த பர்கேஷ், அப்போது தனது சீனக் காதலியுடன் இருந்தார்.
"சரி, நீ இந்தியாவிலிருந்து வரவில்லை. நீ சிங்கப்பூரில் தங்குவது குறித்தும் எனக்குப் பிரச்சினை இல்லை. உனக்கு எதிராக எந்த எண்ணமும் இல்லை. ஆனால் சீனப் பெண்களை நீ ஈர்க்க விரும்பினால் அது சீனர்களுக்குப் பிடிக்காது," என்று தேவ் பர்கேஷிடம் டான் கூறியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
"நீ உன்னுடைய சமயத்தைப் பற்றி பெருமைப்படுவதாக இருந்தால் ஓர் இந்தியரையே நீ திரு மணம் ெசய்து கொள்ள வேண்டும்," என்றும் டான் சொல்லி யிருக்கிறார்.
சிங்கப்பூர் சீன-தாய்லாந்து பெற்றோருக்குப் பிறந்த தேவ் பர்ேகஷின் காதலி, அந்தச் சம்பவத்தை படம் பிடித்து சமூக ஊடகத்தில் பதிவேற்றினார்.
இதையடுத்து பல்வேறு விமர் சனங்கள் எழுந்தன. டானும் பணியிலிருந்து நீக்கப்பட்டார். சிங்கப்பூரரான டான், 2017 ஜூலை 28ஆம் ேததி நீ ஆன் பலதுறைத் தொழில்கல்லூரியில் நடந்த விரிவுரையின்போதும் இஸ்லாமிய சமயம் தொடர்பில் புண்படுத்தும் விதத்தில் கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
2020 ஆகஸ்ட் 10ஆம் தேதி நடந்த இணையக் கலந்துரையாடலிலும் கேள்விகளுக்கு அவர் சமய உணர்வை பாதிக்கும் வகையில் பதில்களைத் தந்ததாகச் சொல்லப் படுகிறது.
ஆபாசப் படங்களை வைத்திருந்தது உட்பட பல்வேறு ஒழுங்கீன நடத்தைகளுக்காகவும் அவரை நீ ஆன் பலதுறைத் தொழில்கல்லூரி பணியிலிருந்து நீக்கியது.
மொத்தம் நான்கு குற்றச்சாட்டு களை எதிர்நோக்கும் டானை 5,000 வெள்ளி பிணையில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஜூன் 24ஆம் தேதி அவர் மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு வர வேண்டும்.
சமய உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கருத்துகளைத் ெதரி வித்தால் சட்டப்படி மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

