ப. சிதம்பரம், கார்த்தி வீடுகளில் சிபிஐ அதிரடிச் சோதனை

இந்­தி­யா­வின் பிர­தான எதிர்க்­கட்சி யான காங்­கி­ர­சின் முக்­கிய தலை­வ­ரும் முன்­னாள் நிதி அமைச்­ச­ரு­மான ப. சிதம்­ப­ரம், அவ­ரது மக­னும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கார்த்தி சிதம்­ப­ரம் ஆகி­யோ­ரது வீடு மற்­றும் அலு­வ­ல­கங்­களை சிபிஐ அதி­கா­ரி­கள் நேற்று காலையி லிருந்து அதி­ர­டி­யாக சோதனை நடத்­தி­னர்.

திரு கார்த்தி சிதம்­ப­ரம் மீது சுமார் 50 லட்­சம் லஞ்­சம் வாங்­கி­ய­தாக புதிய குற்­றச்­சாட்டு எழுந்­த­தைத் தொடர்ந்து இந்­தச் சோதனை நடத்­தப்­பட்­டது.

டெல்­லி­யி­லி­ருந்து வந்த 14 சிபிஐ அதி­கா­ரி­கள், இரு குழுக்­க­ளா­கப் பிரிந்து ஒரே சம­யத்­தில் சென்னை நுங்­கம்­பாக்­கம் ஹாடோஸ் சாலை­யில் உள்ள ப.சிதம்­ப­ரம், கார்த்­தி­யின் வீடு, அலு­வ­ல­கங்­களில் நேற்று காலை 7.30 மணி­ய­ள­வில் நுழைந்து சோத­னையை மேற்­கொண்­ட­னர்.

அங்­கி­ருந்த ஊழி­யர்­க­ளி­ட­மும் விசா­ரணை நடத்­தப்­பட்­டது.

சென்னை, மும்பை, கர்­நா­டகா, பஞ்­சாப் ஆகிய இடங்­களில் உள்ள அவர்­க­ளுக்­குச் சொந்­த­மான இடங் களி­லும் சோதனை நடத்­தப்­பட்­ட­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

மொத்­தம் ஒன்­பது இடங்­களில் ஐந்து மணி நேரத்­துக்கு மேல் சோதனை நடை­பெற்­றது.

இந்­தச் சோத­னை­யின்­போது கார்த்தி சிதம்­ப­ரம் லண்­ட­னில் இருந்­தார். சீன நிறு­வ­னம் ஒன்­றுக்கு 250 சீனர்­க­ளுக்கு சட்­ட­ விரோ­த­மாக விசா பெற்­றுத் தரு­வ­தற்­காக கார்த்தி சிதம்­ப­ரம் ரூ.50 லட்­சம் லஞ்­சம் வாங்­கி­ய­தாக அவர் மீது சிபிஐ புதிய வழக்­கைப் பதிவு செய்­துள்­ளது.

"பஞ்­சாப்­பில் உள்ள தல்­வாண்டி சாபோ எரி­சக்தி உற்­பத்தி நிறு­வ­னம், உள்­துறை அமைச்­சின் உச்ச வரம்­புக்கு மேல் சீன ஊழி­யர்­களை பணி­யில் அமர்த்த விரும்­பி­யது. 2011ல் அவர்­கள் கார்த்­தியை அணு­கி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது. அவர், 50 லட்­சம் ரூபாய் லஞ்­சம் பெற்று ஊழி­யர்­க­ளுக்கு விசா ஏற்­பாடு செய்து தந்­த­தாக சிபிஐ அதி­காரி ஒரு­வர் கூறி­யி­ருந்­ததை 'த இந்தி யன் எக்ஸ்­பி­ரஸ்' மேற்­கோள் காட்­டி­யி­ருந்­தது.

இதற்­கி­டையே சோதனை பற்றி கருத்து தெரி­வித்த கார்த்தி சிதம் பரம், "எத்­தனை முறை­தான் சோதனை நடத்­து­வார்­கள். இது வரை எத்­தனை முறை சோதனை நடந்­தது என்­ப­தையே மறந்­து­விட்­டேன்," என்று கூறி­யுள்­ளார்.

"முதல் தக­வல் அறிக்­கை­யில் எனது பெயர் இல்லை. ஆனால் எனது வீட்­டி­லும் சோதனை நடந்­துள்­ளது. சோத­னை­யில் எது­வும் கிடைக்­க­வில்லை. எது­வும் பறி முதல் செய்­யப்­ப­ட­வில்லை," என்று டுவிட்­டர் பதி­வில் ப. சிதம்­ப­ரம் தெரி­வித்­துள்­ளார்.

ஏற்­கெ­னவே ஐ.என்.எக்ஸ் மீடியா நிறு­வ­னம் தொடர்­பான முறை­கேடு வழக்­கில் அவர்­க­ளது வீடு, அலு­வ­ல­கங்­களில் சோத­னை­யி­டப்­பட்டு 2018ல் ப. சிதம்பர­மும் 2019ல் கார்த்­தி­யும் கைது செய்­யப்­பட்டு பின்­னர் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­ட­னர்.

கடந்த 2007ல் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறு­வ­னம் வெளி­நா­டு­களில் இருந்து ரூ.305 கோடி நிதி பெறுவ தற்கு ஒப்­பு­தல் அளித்த விவகாரத்­தில் அப்­போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்­ப­ரம், அவ­ரது மகன் கார்த்தி சிதம்­ப­ரம் ஆகி­யோர் முறை­கேட்­டில் ஈடு­பட்­ட­தாக குற்­றம் சாட்டப்­பட்­டி­ருந்­தது. இந்த வழக்கு இன்­ன­மும் நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!