டாக்டர் மகாதீர்: ஸாஹிட் மன்னிப்புக் கேட்க வேண்டும்

டாக்டர் மகாதீர்: ஸாஹிட் மன்னிப்புக் கேட்க வேண்டும்

2 mins read

மலே­சி­யா­வின் முன்­னாள் பிர­த­மர் டாக்­டர் மகா­தீர், அம்னோ தலை­வ­ரான அக­மது ஸாஹிட் அமி­டியை 'பொய்­யர்' என்று சாடி­யுள்­ளார்.

தம்மை பற்றி அவ­தூ­றாக கருத்து தெரி­வித்­த­தற்­காக ஸாஹிட் மீது வழக்­குத் தொடுக்க தயா­ராக இருப்­ப­தா­க­வும் அவர் கூறி­யுள்­ளார்.

இது தொடர்­பாக நேற்று அறிக்கை ஒன்றை டாக்­டர் மகா­தீர் வெளி­யிட்­டார்.

அதில் பல ஆண்­டு­க­ளுக்கு முன்பு தம்மை இந்­திய வம்சா வளி­யைச் சேர்ந்­த­வர் என்று ஸாஹிட் கூறி­ய­தா­க­வும் அத­னால் அவர் மீது அவ­தூறு வழக்­குத் தொடுக்­கப் போவ­தா­க­வும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

"உட­ன­டி­யாக ஸாஹிட் மன்­னிப்பு கேட்க வேண்­டும். இல்­லை­யென்­றால் அவ­தூறு வழக்­குத் தொடுப்­பேன்.

"என்னை அவ­தூ­றா­கப் பேசிய ஸாஹிட்­டின் பொய்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­பது குறித்து பரி­சீ­லித்து வரு­கி­றேன். நான் மலாய் இனத்­தைச் சேர்ந்­த­வன் இல்லை என்­ப­தற்­கான ஆதா­ரத்­தைக் காட்­டு­மாறு ஸாஹிட்­டுக்கு சவால் விடுக்­கி­றேன்.

"அவர் மன்­னிப்பு கேட்­க­வில்லை என்­றால் அவ­தூ­றான கருத்­து­களை மீட்­டுக்கொள்­ள­வில்­லை­யென்­றால் நீதி­மன்­றத்­தின் மூலம் நட­வ­டிக்கை எடுப்­பேன்," என்று அறிக்­கை­யில் அவர் குறிப்­பிட்டு உள்­ளார்.

"ஆம், என்­னி­டம் இந்­திய ரத்­தம் கலந்­துள்­ளது. இதனை என்­னு­டைய புத்­த­கத்­தி­லேயே தெரி­வித்­துள்­ளேன். இதை நான் மறுக்­க­வில்லை. இருந்­தா­லும் என்­னு­டைய பிறப்­புச் சான்­றி­தழ், அடை­யாள அட்­டை­யில் மகா­தீர் பின் முக­மது என்று குறிப்­பிட்­டி­ருப்­ப­து­தான் உண்மை.

"மலே­சிய சட்­டப்­படி நான் மலாய்க்­கா­ரன், எனது இனத்­தின் நலன்­க­ளைப் பாது­காப்­பதே என்­னு­டைய போராட்­ட­மா­கும். சுதந்­தி­ரம் பெறு­வ­தற்கு முன்பே என்­னு­டைய பெற்­றோர் மலே­சி­யா­வில் பிறந்­த­வர்­கள். நாங்­கள் அனை வரும் முஸ்­லிம்­கள்," என்று டாக்­டர் மகா­தீர் காட்­டத்­து­டன் தெரி­வித்­துள்­ளார்.

கடந்த 2017 ஜூலை 30ஆம் தேதி டாக்­டர் மகா­தீ­ரின் உண்­மை­யான பெயர் 'மகா­தீர் இஸ்­கந்­தர் குட்டி' என்று தேசிய பதி­வுத் துறை தம்­மி­டம் தெரி­வித்­த­தாக அக­மது ஸாஹிட் கூறி­ய­தைத் தொடர்ந்து சர்ச்சை வெடித்­தது.