வலுவான விமான பயண மீட்சி மேலும் வேகமடையும்

வலுவான விமான பயண மீட்சி மேலும் வேகமடையும்

3 mins read

சாங்கி விமான நிலை­யம் வழி­யாக பய­ணி­கள் போக்­கு­வ­ரத்து வலு­வாக மீட்சி கண்டு வரு­கிறது.

இது, வரும் ஜூன் மாத பள்ளி விடு­முறை கார­ண­மா­க­வும் வெளி­நா­டு­களில் கோடை பய­ணக் காலம் தொடங்­கு­வ­தா­லும் மேலும் வேக­ம­டை­யும் என்று போக்­கு­வரத்து அமைச்­சர் எஸ் ஈஸ்வ­ரன் தெரி­வித்து உள்­ளார்.

சாங்கி விமான நிலை­யம் வழி­யாக இப்­போது நடக்­கும் பய­ணி­கள் போக்­கு­வ­ரத்து, கொவிட்-19க்கு முன்பு இருந்த நிலை­யில் கிட்­டத்­தட்ட 40 விழுக்­காடு அளவுக்குத் திரும்பி இருக்­கிறது.

இது இந்த ஆண்டு இறு­தி­யில் 50 விழுக்­காடு ஆக வேண்­டும் என்­பது சிங்­கப்­பூ­ரின் இலக்­காக இருக்­கிறது.

என்­றா­லும் ஜூன் மாதம் பயணம் அதி­க­ரிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தால் அதற்குப் பிறகு இந்த இலக்கை அர­சாங்­கம் மீண்டும் ஆரா­யும் என்று நேற்று திரு ஈஸ்­வ­ரன் குறிப்­பிட்­டார்.

விமான நிலைய ஊழி­யர் அணியைப் பழை­ய­படி பலப்­படுத்து­வ­தும் செயல்­மு­றை­களை வேகப்­ப­டுத்­து­வ­தும் சவா­லாக இருக்­கும் என்­பதை அவர் சாங்கி விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை உச்ச மாநாட்­டிற்­குப் பிறகு நேற்று நடந்த செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தெரி­வித்­தார்.

சாங்கி விமான நிலை­யம் உள்பட உல­கம் முழு­வ­தும் உள்ள விமான நிலை­யங்­க­ளுக்கு இந்­தப் பிரச்­சினை இருக்­கிறது என்­பதை அவர் சுட்­டி­னார். பய­ணி­கள் அதி­க­ரிப்­பதைத் திறம்­பட கையாள வேண்­டும் என்­பதே நம்­மு­டைய உட­னடி முக்­கிய முன்­னு­ரிமை என்­பதை அமைச்சர் திரு ஈஸ்­வரன் வலி­யு­றுத்­தி­னார்.

பய­ணத் துறை வேகம் கூடும் என்று கணிக்­கப்­ப­டு­கிறது. ஆகை­யால், அடுத்த பய­ணி­கள் அலைக்கு நாம் தயா­ராக வேண்­டிய தேவை இருக்­கிறது என்று அவர் குறிப்­பிட்­டார்.

விமா­னப் போக்­கு­வ­ரத்துத் துறை­யின் எதிர்­கா­லம் பற்றி விவாதிப்­ப­தற்­காக சேண்ட்ஸ் கண்­காட்சி, மாநாட்டு நிலை­யத்­தில் 300க்கும் மேற்­பட்ட இந்­தத் தொழில்­துறைத் தலை­வர்­கள் கூடி உச்­ச­நிலை சந்­திப்பை நடத்­தி­னர்.

அதற்­குப் பிறகு சிங்­கப்­பூ­ரின் போக்­கு­வ­ரத்து அமைச்சு, அனைத்­து­லக விமா­னப் போக்­கு­வ­ரத்­துச் சங்­கம், அனைத்­து­லக சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து நிறு­வனம், அனைத்­து­லக விமான நிலை­யங்­கள் மன்­றம் ஆகிய அமைப்­பு­கள் நேற்று கூட்­ட­றிக்கை ஒன்றை வெளி­யிட்­டன.

அனைத்­து­லக சிவில் விமானப் போக்­கு­வ­ரத்­துத் துறை மீட்­சியை வேகப்­ப­டுத்­தப்போவ­தாக உறுதி கூறி 19 நாடு­க­ளைச் சேர்ந்த அதிகா­ரி­கள் அறிக்­கை­யில் கையெ­ழுத்­திட்­ட­னர்.

சுற்­றுச்­சூ­ழல் நிலைப்­பாட்டை மேம்­ப­டுத்­தப்போவ­தா­க­வும் புதிய தொழில்­நுட்­பங்­க­ளைப் பயன்­படுத்தி வளர்ச்­சியை வேகப்­ப­டுத்­தப்போவ­தா­க­வும் அவர்­கள் உறுதி தெரி­வித்­தார்­கள். வரும் 2024ல் அனைத்­து­லக சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்துத் துறை முழு மீட்சி­ய­டைய பாடு­ப­டப்­போ­வ­தாக அவர்­கள் உறுதி கூறி­னர்.

பாது­காப்­பாக, வேக­மாக பய­ணங்­களை மேற்­கொள்ள ஏது­வாக நேருக்­கு­நேர் தொடர்­பற்ற நவீன முறை­க­ளைப் பின்­பற்றி பய­ணி­களை அனு­மதிக்க ஊக்­க­மூட்­டப்போவ­தா­க­வும் அவர்­கள் உறுதி தெரி­வித்­த­னர்.

இத­னி­டையே, இந்த ஆண்­டின் இரண்­டா­வது பாதி­யில் விமா­னப் பாது­காப்பு அற­நி­று­வ­னம் என்ற அமைப்­பு­டன் சேர்ந்து புதிய மாநாடு ஒன்­றுக்குக் கூட்­டாக தான் ஏற்­பாடு செய்­யப்­போ­வ­தாக சிங்­கப்­பூர் சிவில் விமா­னப் போக்கு­வ­ரத்து ஆணை­யம் நேற்று தெரி­வித்­தது.

'விமா­னப் போக்­கு­வ­ரத்து பாது­காப்­புக்­கான ஆசி­ய பசி­பிக் உச்ச மாநாடு' என்று குறிப்­பி­டப்­படும் அந்த மாநாடு, ஆசி­ய பசி­பிக் வட்­டா­ரத்­தில் பாது­காப்­புத் தரங்­களை­யும் விமா­னப் போக்­கு­வ­ரத்து பாது­காப்­பை­யும் மேம்­ப­டுத்­தும் நோக்­கத்­தில் நடக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

விமா­னப் போக்கு­வ­ரத்து ஒழுங்­கு­முறை அமைப்­பு­கள், விமான நிறு­வ­னங்­கள், விமான தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள், பரா­மரிப்பு நிறு­வ­னங்­கள் ஆகி­ய­வற்றைச் சேர்ந்த பட்­டத்தொழி­லர்­கள், உயர்­நிலை நிர்­வா­கி­கள் அந்த மாநாட்டில் கலந்துகொள்வர்.

அவர்­கள் பாது­காப்­புத் துறை சவால்­கள் பற்­றி­யும் புதிய செயல்­திட்­டங்­கள் பற்­றி­யும் விவா­திப்­பார்­கள். அடுத்­த­டுத்த ஆண்­டு­களில் அந்த மாநாடு சிங்­கப்­பூ­ரி­லும் ஆசி­ய பசி­பிக் வட்­டா­ரத்­தில் உள்ள வேறு ஒரு நாட்­டி­லும் மாறி மாறி நடக்­கும்.

அமைச்சர்: ஜூன் விடுமுறை, உலக கோடைகால பயணத் தொடக்கம் உதவும்