6,600 பேருக்கு சாங்கி குழுமம் வேலை தரும்

6,600 பேருக்கு சாங்கி குழுமம் வேலை தரும்

2 mins read

அனைத்­து­லக விமா­னப் போக்கு­வரத்து படு­வே­க­மாக சூடு­பி­டிக்­கத் தொடங்கி உள்­ளது.

அத­னால் ஏற்­ப­டக்­கூ­டிய முழு அனு­கூ­லத்­தை­யும் பயன்­ப­டுத்­திக்­கொள்­ளும் வகை­யில் சாங்கி விமான நிலை­யம் ஆக அதிக எண்­ணிக்­கை­யில் ஊழி­யர்­களை வேலை­யில் சேர்க்க முயற்­சி­களை முடுக்­கி­விட்டு உள்­ளது.

6,600க்கும் மேற்­பட்ட ஊழி­யர்­களை வேலை­யில் சேர்க்­கும் நட­வடிக்­கை­யை விமான நிலை­யம் தொடங்கி இருக்­கிறது.

சன்­டெக் சிங்­கப்­பூர் மாநாடு மற்­றும் கண்­காட்சி மையத்­தில் நாளை வெள்ளி, சனிக்கிழமை­களில் விமா­னப் போக்­கு­வ­ரத்துத் தொழில்­துறை சந்தை நடக்­கிறது.

அந்­தச் சந்­தை­யில் நேர­டி­யாக பல­ரும் வேலை­யில் சேர்க்­கப்­ப­டு­வார்­கள் என்று சாங்கி விமான நிலையக் குழு­மம் தனது இணை­யத்தளத்­தில் தெரி­வித்­தது.

அந்­தச் சந்­தை­யில் 20க்கும் மேற்­பட்ட நிறு­வ­னங்­கள் நேரடி நேர்­கா­ணல்­களை நடத்தி ஊழியர்­களைச் சேர்க்­கும். முன்­க­ளப் பய­ணி­கள் சேவை வேலை­க­ளுக்கு ஊழி­யர்­க­ளைச் சேர்ப்­ப­தில் ஒரு­மித்த கவ­னம் செலுத்­தப்­படும்.

அதே­போன்று புத்­தாக்­கம், தொழில்­நுட்­பத்­தில் புதி­தாக உரு­வாக்­கப்­பட்டு உள்ள வேலை­களுக்­கும் ஊழி­யர்­கள் சேர்க்­கப்­படு­வார்­கள். விமான நிலை­யத்­தில் பல்­வேறு வேலை­க­ளை­யும் பார்ப்­பவர்­கள், தர உத்­த­ர­வா­தக் குழுப் பணி­யா­ளர்­கள் ஆகி­யோ­ருக்­கும் தேவை இருக்­கும்.

விமான நிலைய அவ­ச­ர­காலச் சேவை, இணை­யப் பாது­காப்பு அதி­கா­ரி­கள் ஆகி­யோரும் புதி­தாக வேலை­யில் சேர்க்­கப்­படுவர்.

இப்­போ­தைய போக்­கு­வ­ரத்­துத் துறையின் வளர்ச்­சியை அடிப்­படையாக வைத்துப் பார்க்­கை­யில், சாங்கி விமான நிலை­யம், கொவிட்-19க்கு முன்பு இருந்த பய­ணி­கள் அள­வில் பாதிக்­கும் மேற்­பட்ட அளவை இந்த ஆண்டு கையா­ளும் என்று எதிர்­பார்க்­கப்­படு­வ­தாக குழு­மம் தெரி­வித்­தது.

சாங்கி விமான நிலை­யத்­துக்குச் சுறு­சு­றுப்பு திரும்­பு­கிறது. அதிக விமா­னங்­கள், பய­ணி­கள் வரு­வார்­கள், போவார்­கள். அத­னால் விமான நிலைய ஊழி­யர்­கள் அதிகம் தேவை என்­பதை அது சுட்­டி­யது.

கொவிட்-19 தொற்று காலத்­தில் கிட்­டத்­தட்ட மூன்­றில் ஒரு பங்கு ஊழி­யர்­களை விமா­னப் போக்­கு­வரத்துத் தொழில்­துறை இழந்­து­விட்­டது. விமா­னப் போக்­கு­வ­ரத்துத் துறை அடுத்த ஆண்­டில் கொவிட்-19க்கு முன்பு இருந்த நிலையை எட்­டி­வி­டும் என்று அனைத்­து­லக விமானப் போக்­கு­வ­ரத்­துச் சங்­கம் கணிக்­கிறது.

விமான நிலை­யக் குழு­மம் 6,600 பேரை சேர்த்­தா­லும்­கூட 2019ல் இருந்த ஊழி­யர்­க­ளின் அளவை எட்ட இன்­னும் மேலும் பல­ரை­யும் சேர்க்க வேண்டி இருக்­கும்.

போட்­டித்­தி­றன்மிக்க சம்­ப­ளம், நல்ல ஊக்­கு­விப்­பு­கள், சிறந்த வாழ்க்­கைத்தொழில் வாய்ப்­பு­களை வழங்­கு­வ­தாக நிறு­வ­னங்­கள் அறி­வித்து உள்­ளன.