வடிவமைப்புடன் கூடிய தீர்வுகளை முன்மொழியலாம்

வடிவமைப்புடன் கூடிய தீர்வுகளை முன்மொழியலாம்

3 mins read

கடல்மட்ட உயர்விலிருந்து வடமேற்குக் கடலோரப் பகுதியைப் பாதுகாக்க நடவடிக்கை

உயர்ந்­து­வ­ரும் கடல்­மட்­டத்­தி­ல் இ­ருந்து நாட்­டைத் தற்­காப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை சிங்­கப்­பூர் நீர் முக­வை­யான பொதுப் பய­னீட்­டுக் கழ­கம் முடுக்­கி­வி­ட­ இருக்­கிறது.

அந்­ந­ட­வ­டிக்­கை­கள் நீக்­குப்­போக்­கான வகை­யி­லும் அந்தப்­ ப­கு­தி­யில் நிலப் பயன்­பாட்­டுத் தேவை­க­ளைக் கவ­னத்­தில் கொண்­ட­தா­க­வும் அமை­யும்.

தீவைச் சுற்றி சுவர் எழுப்­பு­வது போன்ற ஒரே அணு­கு­மு­றை­யாக இல்­லா­மல், நாட்­டின் வெவ்­வேறு கட­லோ­ரப் பகு­தி­க­ளுக்கு ஏற்ற தீர்­வு­க­ளைக் கழ­கம் ஆராய்ந்து வரு­கிறது.

சிங்­கப்­பூ­ரின் வட­மேற்­கில் உள்ள 17.1 கிலோ­மீட்­டர் நீள கட­லோ­ரப் பகு­தி­யைப் பாது­காப்­ப­தற்­கான தீர்­வு­க­ளைக் கழ­கம் வர­வேற்­கிறது. முதன்­மு­றை­யாக, அத்­த­கைய பாது­காப்பு அம்­சங்­களை எப்­படி ஒருங்­கி­ணைப்­பது என்­பது குறித்த வடி­வ­மைப்­புத் திட்­டங்­களை வழங்­கும்­படி விண்­ணப்­ப­தா­ரர்­கள் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­னர்.

எதிர்­கால சுங்கை காடுட் பசுமை வட்­டா­ரம், லிம் சூ காங் உயர்­தொ­ழில்­நுட்ப வேளாண் உணவுத் தொகுதி போன்­றவை அமை­ய­வுள்ள சுங்கை காடுட், லிம் சூ காங் பகு­தி­க­ளைச் சுற்றி இந்­தக் கட­லோ­ரப் பகுதி அமைந்­துள்­ளது.

கடல்­மட்ட உயர்வானது சிங்­கப்­பூருக்­குப் பெரும் அச்­சு­றுத்­த­லாக இருக்­கிறது. இதனை உணர்ந்தே, சமர்ப்­பிக்­கப்­படும் கட­லோ­ரப் பாது­காப்­புத் திட்­டங்­கள், ஐந்து மீட்­டர் வரை­யி­லான கடல்­மட்ட உயர்­வை­யும் பரு­வ­நிலை மாற்­றத்­தால் பொழி­யும் கன­ம­ழை­யை­யும் எதிர்­கொள்­ளும் படி­யான தீர்­வு­க­ளாக விளங்க வேண்­டும் என்று கழ­கம் தனது ஒப்­பந்­தப்­புள்ளி ஆவ­ணங்­களில் குறிப்­பிட்டுள்­ளது.

தேசிய கடல்­மட்­டத் திட்­டம் போன்ற ஆய்வு நட­வ­டிக்­கை­கள் மூல­மாக, உல­க­ளா­விய பரு­வ­நிலை மாற்­றம், சிங்­கப்­பூ­ரின் கடல்­மட்ட உயர்­வில் ஏற்­ப­டுத்­தும் தாக்­கம் குறித்து ஆரா­யப்­பட்டு வரு­கிறது.

அண்­மைய ஒப்­பந்­தப்­புள்ளி நட­வ­டிக்­கை­யா­னது, இத்­த­கைய ஆய்­வு­கள் மூலம் சேக­ரிக்­கப்­படும் தக­வல்­களை முழு­மைப்­ப­டுத்த நோக்­கம் கொண்­டுள்­ளது. அதா­வது, வெவ்­வேறு இயல்­பு­க­ளை­யும் நிலப் பயன்­பாட்­டுத் திட்­டங்­க­ளை­யும் கொண்­டுள்ள பகு­தி­களில் நடை­மு­றைப்­ப­டுத்­தத்­தக்க கட­லோ­ரப் பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் ஆரா­யப்­படும்.

எடுத்­துக்­காட்­டாக, கிராஞ்சி நீர்த்­தேக்­கம், உட்­லண்ட்ஸ் சோத­னைச்­சா­வடி, சுங்கை பூலோ சதுப்பு­ நி­லப்­ப­குதி, கிராஞ்சி கட­லோர இயற்­கைப் பூங்கா, வர­ இருக்­கும் லிம் சூ காங் இயற்­கைப் பூங்கா, மண்­டாய் சதுப்­பு­நி­லக் காடு­கள் உள்­ளிட்­டவை வட­மேற்­குக் கட­லோ­ர­மாக அமைந்­துள்­ள­வற்­றில் பாது­காக்­கப்­பட வேண்­டிய முக்­கி­யப் பகு­தி­கள்.

"இப்­ப­கு­தி­க­ளின் சிறப்­பி­யல்­பு­க­ளைப் பொறுத்து, கட­லோ­ரப் பாது­காப்பு உத்­தி­க­ளி­லும் நட­வடிக்­கை­க­ளி­லும் சில முக்­கி­யப் பரி­சீ­ல­னை­கள் உள்­ளன," என்று கழ­கத்­தின் கட­லோ­ரப் பாது­காப்புப் பிரிவு இயக்­கு­நர் ஹேஸல் கூ தெரி­வித்­தார்.

இந்த 17.1 கி.மீ. நீளக் கட­லோ­ரம் மூன்று முக்­கி­யப் பகு­தி­களை உள்­ள­டக்­கி­யுள்­ளது.

சதுப்­பு­நி­லக்­கா­டு­களும் வேளாண் நிலங்­களும் செறிந்த 7 கி.மீ. நீளப்­ப­குதி, தொழில்­துறை வட்­டா­ரத்­தை­யும் வர­வி­ருக்­கும் ஓர் இயற்­கைப் பூங்­கா­வை­யும் உள்­ள­டக்­கிய 3.3 கி.மீ. நீளப்­பகுதி, உட்­லண்ட்ஸ் சோத­னைச்­சா­வ­டியை உள்­ள­டக்­கிய 6.8 கி.மீ. நீளப்­ப­குதி ஆகி­ய­வையே அவை.

"நீடித்து நிலைக்­கத்­தக்க, வாழத்தகுந்த கட­லோ­ரப் பகுதியை உரு­வாக்­கும் வகை­யி­லான கருத்­தி­யல் வடி­வ­மைப்­பிற்கு மிகுந்த முக்­கி­யத்­து­வம் தர­வேண்­டிய அவ­சி­ய­ம் இருக்கிறது," என்­றார் திரு­வாட்டி கூ.

முதற்­கட்­ட­மாக, அதி­க­பட்­சம் நான்கு விண்­ணப்­ப­தா­ரர்­கள் வரை ஒப்­பந்­தப்­புள்­ளி­யின் இரண்­டாம் கட்­டத்­திற்­குத் தேர்வு செய்­யப்­படு­வர். ஒப்­பந்­தப்­புள்­ளி­யின் 2ஆம் கட்­டம் இவ்­வாண்­டின் இறு­திக் காலாண்­டில் இடம்­பெ­றும்.

வட­மேற்­குக் கட­லோ­ரத்­தின் இப்­ப­குதி குறித்த ஆய்வு அடுத்த ஆண்­டின் இரண்­டாம் காலாண்­டில் தொடங்கி, 2030ஆம் ஆண்­டில் நிறை­வு­பெ­றும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கிட்­டத்­தட்ட தீவின் 30 விழுக்­காட்­டுப் பகுதி கடல்­மட்­டத்­தி­ல் இ­ருந்து ஐந்து மீட்­டர் உய­ரத்­திற்­கும் குறை­வாக இருப்­ப­தால், கடல்­மட்ட உயர்­வால் சிங்­கப்­பூர் பாதிக்­கப்­படும் அபா­ய­முள்­ளது.

சிங்­கப்­பூர் பரு­வ­நிலை ஆராய்ச்சி மையத்­தின் இரண்­டா­வது தேசிய அள­வி­லான பரு­வ­நிலை மாற்ற ஆய்­வின்­படி, வரும் 2100ஆம் ஆண்­டு­வாக்­கில் சிங்­கப்­பூ­ரின் சரா­சரி கடல்­மட்­டம் ஒரு மீட்­டர் வரை உய­ரக்­கூ­டும் எனக் கணிக்­கப்­பட்­டுள்­ளது.