உணவுப் பற்றாக்குறை ஏற்படலாம்: இலங்கைப் பிரதமர் எச்சரிக்கை

கடும் பொரு­ளி­யல் நெருக்­க­டி­யைச் சந்­தித்­து­வ­ரும் இலங்­கை­யில் உண­வுப் பற்­றாக்­குறை ஏற்­ப­ட­லாம் என்று அந்­நாட்­டுப் பிர­த­மர் ரணில் விக்­ர­ம­சிங்கே எச்­ச­ரித்து இருக்­கி­றார்.

உற்­பத்­தித்­தி­ற­னைப் பெருக்­கும் வகை­யில், அடுத்த சாகு­படி காலத்­திற்­குப் போதிய உரங்­களை அர­சாங்­கம் வாங்­கும் என்று பிர­த­மர் ரணில் உறு­தி­ய­ளித்­துள்­ளார்.

அனைத்­து­வித வேதி உரங்­க­ளைப் பயன்­ப­டுத்­த­வும் தடை­வி­திப்­ப­தாக கடந்த ஆண்டு ஏப்­ர­லில் அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்சே அறி­வித்­தார். இத­னால் விளைச்­சல் பெரி­தும் குறைந்­து­போ­னது.

அத­னைத் தொடர்ந்து, வேதி உரங்­கள் மீதான தடையை இலங்கை அரசு மீட்­டுக்­கொண்­டது. ஆனா­லும், குறிப்­பி­டத்­தக்க அள­விற்கு உரங்­கள் இறக்­கு­மதி செய்­யப்­ப­ட­வில்லை.

இந்­நி­லை­யில், “மே-ஆகஸ்ட் சாகு­ப­டிப் பரு­வத்­திற்­குப் போதிய உரங்­களை வாங்க கால அவ­கா­ச­மின்­றிப் போக­லாம். ஆயி­னும், செப்­டம்­பர்-மார்ச் சாகு­ப­டிப் பரு­வத்­திற்­குப் போது­மான அள­விற்கு உரங்­கள் கையி­ருப்பு இருப்­பதை உறு­திப்­ப­டுத்த நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன,” என்று பிர­த­மர் ரணில் டுவிட்­டர் வழி­யா­கத் தெரி­வித்­துள்­ளார்.

அந்­நி­யச் செலா­வணி, எரி­பொருள், மருந்­துப்­பொ­ருள் பற்­றாக்­கு­றை­யால் இலங்கை கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

“வாழ்க்கை எவ்­வ­ளவு சிர­ம­மாக இருக்­கிறது என்­ப­தைப் பற்­றிப் பேசிப் பய­னில்லை,” என்­றார் கொழும்­பில் காய்­க­னி­கள் விற்­று­வரும் 60 வய­தான திரு­வாட்டி சும­னா­வதி. இன்­னும் இரு மாதங்­களில் நிலைமை எப்­படி இருக்­கும் எனக் கணிக்க இய­லாது என்ற அவர், இதே நிலை நீடித்­தால் தாங்­கள் ஊரை­விட்டு வெளி­யே­றும் நிலை­கூட ஏற்­ப­ட­லாம் என்­றார் அவர்.

மூன்­றா­வது நாளாக எரி­வாயு உரு­ளைக்­காக வரி­சை­யில் காத்­தி­ருந்த திரு முகம்­மது ஷஸ்லி கூறு­கை­யில், “எரி­வாயு, மண்­ணெண்­ணெய் இல்­லா­மல் எங்­க­ளால் எது­வும் செய்ய முடி­யாது. கடை­சி­யில் என்ன நடக்­கும்? உண­வின்றி நாங்­கள் சாகப் போகி­றோம். நூறு விழுக்­காடு அது­தான் நடக்­கப் போகிறது,” என்று ஆதங்­கப்­பட்­டார் பகு­தி­நேர ஓட்­டு­ந­ராக இருக்­கும் திரு ஷஸ்லி.

கடந்த மாதம் பண­வீக்­கம் 29.8% அதி­க­ரித்­தது. அத்­து­டன், ஆண்டு அடிப்­ப­டை­யில் உண­வுப்­பொ­ருள்­கள் விலை­யும் 46.6% கூடி­யது. இந்­நி­லை­யில், அடுத்த இரு மாதங்­களில் பண­வீக்­க­ம் 40 விழுக்­கா­டாக அதி­கரிக்­க­லாம் என்று இலங்கை மத்­திய வங்­கி­யின் ஆளு­நர் நந்­த­லால் வீர­சிங்க கூறி­யுள்­ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!