ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: போராட்டக்காரர்கள் 30 பேர்மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

தூத்­துக்­கு­டி­யில் ஸ்டெர்­லைட் ஆலையை மூட வலி­யு­றுத்தி இடம்­பெற்ற போராட்­டத்­தின்­போது துப்­பாக்­கிச்­சூட்­டுச் சம்­ப­வம் தொடர்­பில், ஆலைக்கு எதி­ரா­கப் போரா­டிய 30 பேர்­மீது இந்­தி­யா­வின் மத்­திய புல­னாய்­வுத் துறை (சிபிஐ) குற்­றப்­பத்­தி­ரிகை தாக்­கல் செய்­து உள்­ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடந்த அந்­தத் துப்­பாக்­கிச்­சூட்­டில் 13 பேர் மாண்­ட­னர். அந்­தச் சம்­ப­வத்­திற்கு ஐநா மனித உரிமை அமைப்­பும் கண்­ட­னம் தெரி­வித்­தி­ருந்­தது. இறந்­த­வர்­களில் அறு­வர் பின்­னால் இருந்து சுடப்­பட்­டது குறிப்­பி­டத்­தக்­கது.

சம்­ப­வம் தொடர்­பில் காவல்­துறை­யி­னர், அர­சாங்க அதி­கா­ரி­கள் எவர்­மீ­தும் குற்­றம் சுமத்­தப்­ப­ட­வில்லை என்று ராய்ட்­டர்ஸ் செய்தி தெரி­வித்­தது.

காவல்துறையினரைவிட போராட்­டக்­கா­ரர்­கள் அதிக அள­வில் இருந்­த­தால் துப்­பாக்­கிச்­சூடு நடத்­து­வ­தைத் தவிர காவல்­து­றைக்கு வேறு வழி­யில்லை என்று சிபிஐ குறிப்­பிட்­டுள்­ளது.

வன்­மு­றை­யில் ஈடு­பட்­டது, அரசு அதி­கா­ரி­க­ளைப் பணி செய்­ய­விடா­மல் தடுத்­தது, வேண்­டு­மென்றே காயம் விளை­வித்­தது, பொதுச் சொத்­துக்­குச் சேதம் விளை­வித்­தது உட்­பட 17 குற்­றச்­சாட்­டு­கள் அந்த 30 பேர்­மீது சுமத்­தப்­பட்­டுள்­ளது. குற்­றம் மெய்ப்­பிக்­கப்­பட்­டால், அவர்­க­ளுக்கு அதி­க­பட்­சம் ஏழு ஆண்­டு­கள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­ப­ட­லாம்.

துப்­பாக்­கிச்­சூட்­டில் மாண்­ட­வர்­களின் குடும்­பத்­தி­னர், சிபி­ஐ­யின் இந்த இறுதி அறிக்­கை­யால் அதிர்ச்சி அடைந்­துள்­ள­னர்.

"நல்ல தண்­ணீர், காற்று கேட்­டுப் போரா­டி­ய­வர்­க­ளைக் காக்கை குரு­வி­யைச் சுடு­வ­து­போல் சுட்­டுக்­கொன்­ற­னர். சம்­ப­வம் நடந்து நான்­காண்­டு­கள் ஆன நிலை­யில், சிபிஐ தனது 3வது இறுதி அறிக்­கை­யைத் தாக்­கல் செய்­துள்­ளது. அதில் காவல்­து­றை­யி­னர் ஒரு­வர்­மீது கூட வழக்கு பதி­ய­வில்லை. குற்­ற­வா­ளி­க­ளைச் சாட்­சி­க­ளா­க­வும் சாட்­சி­க­ளைக் குற்­ற­வா­ளி­க­ளா­க­வும் காட்­டி­யுள்ள இந்த அறிக்கை மிக­வும் மோச­மா­னது," என்று ஸ்டெர்­லைட் எதிர்ப்பு மக்­கள் கூட்­ட­மைப்­பின் ஒருங்­கி­ணைப்­பா­ளர் வழக்­கறி­ஞர் வாஞ்­சி­நா­தன் செய்­தி­யா­ளர்­களி­டம் கூறி­னார்.

சிபிஐ அறிக்­கை­யைக் கண்­டித்து, துப்­பாக்­கிச்­சூட்­டின் நினைவு நாளான நாளை தூத்­துக்­கு­டி­யில் போராட்­டம் நடத்­த­வி­ருப்­ப­தாக ஒருங்­கி­ணைப்­பா­ளர் வழக்­க­றி­ஞர் அரி ராக­வன் சொன்­னார்.

முன்­ன­தாக, ஓய்­வு­பெற்ற உயர் நீதி­மன்ற நீதி­பதி அருணா ஜெக­தீ­சன் சம்­ப­வம் தொடர்­பில் 3,000 பக்­கங்­கள் கொண்ட முழு­மை­யான விசா­ரணை அறிக்­கையைத் தமிழக முதல்­வர் ஸ்டா­லி­னி­டம் நேற்று முன்­தினம் சமர்ப்­பித்­தி­ருந்­தார்.

நீதி­பதி அருணா ஜெக­தீ­சன் விசா­ரணை ஆணை­யத்­தின் அறிக்­கையை தமி­ழக அரசு மக்­க­ளுக்கு வெளிப்­ப­டை­யாக தெரி­வித்து, சட்­ட­மன்­றத்­தில் விவா­திக்க வேண்­டும் என்று வழக்­க­றி­ஞர் வாஞ்­சி­நா­தன் கோரிக்கை விடுத்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!