206 சிறுநீரகக் கற்கள் அகற்றம்

206 சிறுநீரகக் கற்கள் அகற்றம்

1 mins read
4ba9f0a6-f6a9-4039-9a53-21c19a6137ad
அகற்றப்பட்ட சிறுநீரகக் கற்கள். படம்: இந்திய ஊடகம் -

இந்­தி­யா­வின் தெலுங்­கானா மாநிலம், ஹைத­ரா­பாத் நக­ரி­லுள்ள அவேர் கிள­னீ­கல்ஸ் குளோ­பல் மருத்­து­வ­ம­னை­யைச் சேர்ந்த மருத்­து­வர்­கள் குழு, அறுவை சிகிச்சை மூல­மாக நோயாளி ஒரு­வ­ரின் உட­லில் இருந்து ஒரு மணி நேரத்­தில் 206 சிறு­நீ­ர­கக் கற்­களை அகற்­றி­ச் சாதித்துள்ளனர்.

நல்­கொண்டா பகு­தி­யைச் சேர்ந்த வீர­மல்ல ராம­லட்­சு­மையா, 56, என்ற ஆட­வர் கடந்த ஆறு மாதங்­க­ளாக இடுப்­புப் பகு­தி­யில் கடு­மை­யான வலி­யால் துன்­புற்று வந்­தார்.

உள்­ளூர் மருத்­து­வர் ஒரு­வர் பரிந்­து­ரைந்த மருந்தை அவர் உட்­கொண்டு வந்­தார். ஆனா­லும், வலி தொடர்ந்­தது. இத­னை­ய­டுத்து, அந்த ஆட­வர் அவேர் கிள­னீ­கல்ஸ் குளோ­பல் மருத்­து­வ­ம­னையை நாடி­னார்.

இது­கு­றித்து விவ­ரித்த அந்த­ ம­ருத்­து­வ­ம­னை­யின் மூத்த சிறு­நீ­ர­க­வி­யல் ஆலோ­ச­கர் டாக்­டர் பூலா நவீன்­கு­மார், "முதற்­கட்ட ஆய்­வு­களும் அல்ட்­ரா­ச­வுண்ட் பரி­சோ­த­னை­யும் அவ­ரது இடப்­பக்­கத்­தில் சிறு­நீ­ர­கக் கற்­கள் இருப்­ப­தைக் காட்­டின. பின்­னர் 'சிடி ஸ்கே­னில்' அது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. இத­னை­ய­டுத்து, நோயா­ளிக்கு ஆலோ­சனை வழங்கி, அவரை அறுவை சிகிச்­சைக்­குத் தயார்­செய்­தோம். ஒரு மணி நேர அறுவை சிகிச்­சை­யில் 206 சிறு­நீ­ர­கக் கற்­கள் அகற்­றப்­பட்­டன. அதன்­பி­றகு அவர் உடல்­ந­லம் தேறவே, மறு­நாளே அவர் மருத்­து­வ­ம­னை­யில் இருந்து வீடு திரும்­பி­னார்," என்­றார்.

கோடைக்­கா­லத்­தில் கடும் வெப்­பம் கார­ண­மாக பல­ரும் நீர்ச்­சத்­துக் குறை­வால் பாதிக்­கப்­ப­ட­லாம். அத­னால், சிறு­நீ­ர­கங்­களில் கற்­கள் தோன்­ற­லாம். இத­னால், கோடைக்­கா­லத்­தில் அதிக நீர், முடிந்­தால் இள­நீர் அருந்­துங்கள் என்பது மருத்துவர்களின் அறிவுரை.