இந்திய பங்குச் சந்தை மோசடி: பல நகர்களில் சிபிஐ சோதனை

இந்திய பங்குச் சந்தை மோசடி: பல நகர்களில் சிபிஐ சோதனை

2 mins read
f4426955-5b13-482b-8b20-633287eadab5
தேசிய பங்­குச் சந்­தை­யின் முன்­னாள் தலைமை நிர்­வாக அதிகாரி­ சித்ரா ராம­கி­ருஷ்ணா. படம்: இந்திய ஊடகம் -

இந்­தி­யா­வின் மத்­திய புலன்­விசாரணை இலாகா (சிபிஐ) நேற்று பல­ ந­கர்­களில் பத்­துக்­கும் மேற்­பட்ட இடங்­களில் சோதனைகளைத் தொடங்கியது.

இந்­தி­யா­வின் தேசிய பங்­குச் சந்தை தக­வல்­கள் சேமிக்­கப்­பட்டு இருந்த கணி­னி­களில் இருந்து சட்­ட­வி­ரோ­த­மான முறை­யில் தக­வல்­கள் வெளி­யாகி இருப்­ப­தா­கக் கூறப்­ப­ப­டு­வ­தன் தொடர்­பில் சிபிஐ சோத­னை­க­ளைத் தொடங்கி இருப்­ப­தாக அதி­கா­ரி­கள் கூறினர்.

மும்பை, காந்தி நகர், டெல்லி, நொய்டா, குரு­கி­ராம், கோல்­கத்தா, உள்­ளிட்ட பல நகர்­க­ளி­லும் உள்ள 12க்கும் மேற்­பட்ட இடங்­களை அதி­கா­ரி­கள் சோதித்­து­ வருவதா­க­வும் பங்­குச் சந்தை தர­கர்­கள் விசா­ரிக்­கப்­படுவதா­க­வும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மோசடி தொடர்­பில், தேசிய பங்­குச் சந்­தை­யின் முன்­னாள் தலைமை நிர்­வாக அதி­காரி­யும் நிர்­வாக இயக்­கு­ந­ரு­மான சித்ரா ராம­கி­ருஷ்ணா, குழுமச் செயல்­முறை அதி­கா­ரி­யான ஆனந்த் சுப்பி­ர­ம­ணி­யன் ஆகிய இரண்டு பேருக்­கும் எதி­ராக சிபிஐ குற்­றச்­சாட்­டைப் பதிந்­துள்­ளது.

சித்ரா, தேசிய பங்­குச் சந்­தைக்குப் பொறுப்பு வகித்­த­போது, 2010 முதல் 2015வரை, 'ஓபிஜி செக்யூ­ரிட்­டீஸ்' என்ற நிறு­வ­னம், பங்­குச் சந்­தை­யின் வரு­நிலை வர்த்­த­கப் பிரி­வின் தக­வல் சேமிப்பு கணி­னி­யு­டன் 760 வர்த்­தக நாள்­களில் தொடர்பு கொண்­டது என்பது புலன்­விசாரணை மூலம் இது­வரை தெரிய வந்­துள்­ளது.

சித்­ரா­வும் சுப்­பி­ர­ம­ணி­ய­னும் பொறுப்­பில் இருந்தபோது தேசிய பங்­குச் சந்­தை­யைச் சேர்ந்த அதி­கா­ரி­கள், குறிப்­பிட்ட தர­கர்­களுக்குச் சலுகை அளித்து இருக்­கி­றர்­கள்.

அவற்­றைப் பயன்­ப­டுத்தி தகாத முறை­யில் லாபம் ஈட்­டப்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கி­றது. இது­பற்றி தான் விசா­ரித்து வரு­வ­தாக சிபிஐ தெரி­வித்­துள்­ளது.

சித்ரா பொறுப்பு ஏற்­ற­தும் அவர் தனது ஆலோ­ச­க­ராக சுப்­பி­ர­மணியனை நிய­மித்­துக்கொண்­டார்.

சுப்­பி­ர­ம­ணி­யன் ஆண்­டுக்கு 4.21 கோடி ரூபாய் சம்­ப­ளம் பெறும் குழுமச் செயல்­முறை அதி­கா­ரி­யாக பதவி உயர்வு பெற்­றார்.

இந்த நிய­ம­ன­மும் பதவி உயர்­வும் 'இம­ய­மலை யோகி' ஒரு­வ­ரின் வழி­காட்­ட­லின்படி இடம்­பெற்­ற­தாகக் கூறப்­ப­டு­கிறது. அந்த யோகி யார் என்பது மர்மமாகவே உள்ளது.

இத­னி­டையே, புது­டெல்­லி­யில் இருந்து செயல்­படும் ஓபிஜி செக்­யூ­ரிட்­டீஸ் நிறு­வ­னத்­தின் உரிமை யாளர் சஞ்­சய் குப்தா என்­ப­வரை­யும் சிபிஐ மடக்கி இருக்­கிறது.

இவர் பங்­குச் சந்தை கணி­னி­களில் அத்­து­மீறி நுழைந்து லாபம் சம்­பா­தித்து இருக்­கி­றார் என்று கூறப்­ப­டு­கிறது. இந்த விவ­கா­ரம் தொடர்­பில் இந்­திய பங்­குச் சந்தை, தேசிய பங்­குச் சந்தை அதி­கா­ரி­களை­யும் இதர பல­ரை­யும் சிபிஐ விசா­ரித்து வரு­கிறது.

தேசிய பங்­குச் சந்­தை­யின் அதி­கா­ரி­க­ளு­டன் சேர்ந்து ஓபிஜி செக்­யூ­ரிட்­டீஸ் நிறு­வ­னத்­தின் உரி­மை­யா­ளர் பங்­குச் சந்­தை­யின் தக­வல் சேமிப்பு கணி­னி­களைத் தவ­றான முறை­யில் பயன்­ப­டுத்தி இருக்­கிறார் என்­றும் மும்­பை­யில் இருக்­கும் பங்­குச் சந்­தை­யின் அதி­கா­ரி­கள் சட்­ட­வி­ரோ­த­மான முறை­யில் தக­வல்­களைப் பெற அனு­மதி வழங்கி உள்ளனர் என்­றும் கூறப்­ப­டு­கிறது.