வடகொரிய மிரட்டலை ஒடுக்குவதற்கு அமெரிக்கா, தென்கொரியா இணக்கம்

வட­கொ­ரி­யா­வின் மிரட்­ட­லைச் சமா­ளிக்க தேவை­யெ­னில் அதிகளவு அமெ­ரிக்க ஆயு­தங்­க­ளைப் பயன்­ப­டுத்த வேண்­டும் என்­றும் அமெ­ரிக்­கா­வும் தென்­கொ­ரி­யா­வும் இப்­போதைய ராணு­வப் பயிற்­சி­களைவிட பெரிய அளவில் பயிற்­சி­களை நடத்த வேண்­டும் என்­றும் இந்த இரு நாடு­க­ளின் தலை­வர்­கள் இணங்கி இருக்­கி­றார்­கள்.

புதிய வட்­டார, உலக சவால்­க­ளைச் சமா­ளிக்­கும் வகை­யில் அமெ­ரிக்கா, தென்­கொ­ரியா கூட்­ட­ணியை விரி­வு­ப­டுத்­த­வும் அவர்­கள் இணங்­கி­னர்.

அமெ­ரிக்கா-தென்­கொ­ரியா இடை­யில் நெடுங்­கா­ல­மாக தோழமை உறவு நிலவி வரு­கிறது. இது இன்­னும் மேம்­பட வேண்டும். அப்­போ­து­தான் வட­கொ­ரிய மிரட்­டலை மட்­டு­மின்றி இந்தோ-பசி­பிக் வட்­டா­ரத்தை சுதந்­தி­ர­மான, திறந்த பகு­தி­யாக வைத்­திருக்க முடி­யும்.

உல­க­ள­வில் பொருள், சேவை விநி­யோ­கக் கட்­ட­மைப்­பு­க­ளை­யும் பாது­காக்க முடி­யும் என்று அமெ­ரிக்க அதி­பர் பைடன், தென்­கொ­ரி­யா­வின் புதிய அதி­பர் யூன் சுக் யோல் இரு­வ­ரும் நேற்று தெரி­வித்­த­னர். தென்­கொ­ரி­யா­வின் புதிய அதி­ப­ராக 11 நாள்­க­ளுக்கு முன் யூன் பதவி ஏற்­றுக்­கொண்­டார். அதற்குப் பிறகு முதன்­முதலாக இந்த இரு தலை­வர்­களும் சோல் நக­ரில் இப்போது சந்­திக்­கி­றார்­கள்.

வட­கொ­ரிய அதி­பர் கிம் ஜோங் உன், அணு­ ஆயுதம் அல்­லது ஏவு­கணைப் பரி­சோ­த­னை­க­ளைத் தொடங்க ஆயத்­த­மாகி வரு­கி­றார் என்­பது வேவுத்­துறை மூலம் தெரி­ய­வந்து இருக்­கிறது.

வட­கொ­ரியா மிரட்­ட­லாக இருக்­காது என்­ப­தற்கு அமெரிக்கா அதிக உத்­த­ர­வா­தம் வழங்க வேண்­டும் என்று தென்­கொரிய அதி­பர் விரும்­பு­கி­றார்.

தேவை எனில் அணு­ஆ­யு­தங்­களை வழங்கி தென்­கொ­ரி­யாவைக் காக்க அமெ­ரிக்கா கடப்­பாடு கொண்­டி­ருப்தாக கூட்­ட­றிக்கை ஒன்­றில் அதி­பர் பைடன் மீண்­டும் உறு­தி­பட கூறி­னார். ராணுவப் பயிற்­சி­களை விரி­வு­ப­டுத்­து­வது பற்றி பரி­சீ­லிக்க இரு தலை­வர்­களும் ஒப்­புக்­கொண்­ட­னர்.

இரு தலைவர்களும் கூட்­டாக செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­த­னர். பேச்­சு­வார்த்தை­களை முக்­கி­ய­மா­ன­வை­யாக கருதி அவற்­றில் வட­கொ­ரி­யத் தலை­வர் கிம் ஆர்­வம் காட்­டி­னால் அவரைச் சந்­திக்க தான் தயா­ராக இருப்­ப­தாக பைடன் குறிப்­பிட்­டார்.

வட­கொ­ரி­யா­வுக்கு கொவிட்-19 தடுப்­பூசி மருந்தை வழங்­கத் தயார் என்று இரு தலைவர்களும் தெரி­வித்­தனர். ஆனால் வடகொரியாவிடம் இருந்து பதில் இல்லை.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!