சாங்கி 2வது முனையம் அடுத்த மாதமே திறப்பு

அதிக பயணிகளுக்குத் தோதாக வருகைக்கூடத்தின் ஒரு பகுதி செயல்படும்

சாங்கி விமான நிலை­யம் முனை­யம் 2ன் ஒரு பகுதி அடுத்த மாதமே திறக்­கப்­படக் ­கூ­டும் என்று தெரி­ய­வந்து இருப்­ப­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்­பிட்டு இருக்­கிறது.

அந்த முனை­யம் 2020ஆம் ஆண்டு மே மாதம் மூடப்­பட்­டது. அந்த முனை­யத்­தின் வருகை கூடத்­தின் ஒரு பகுதி ஜூன் மாதமே திறக்­கப்­ப­ட­லாம் என்று கடந்த ஏப்­ரல் மாதம் சாங்கி விமான நிலை­யக் குழு­மம் நடத்திய ஒரு கூட்டத்­தின்­போது, அங்கு இடங்­களை குத்­தகைக்கு எடுத்திருப்­போ­ரி­டம் தெரி­விக்­கப்­பட்­டது.

இது ஒரு­பு­றம் இருக்க, அந்த முனை­யத்­தின் புறப்­பாட்­டுக் கூடத்­தின் ஒரு பகு­தி­யும் இடை­வ­ழிப் பய­ணி­க­ளுக்­கான பகு­தி­யும் அக்­டோ­பர் மாதமே திறக்­கப்­ப­ட­லாம் என்­ப­தும் தெரி­ய­வந்துள்ளது.

அந்த முனை­யத்தை திறப்­ப­தற்­கான சாத்­தி­ய­கூ­று­கள் பற்­றி ஆய்வு ஒன்று நடத்­தப்­படும். அந்த ஆய்­வின் முடி­வு­களைப் பொறுத்­தும் ஊழி­யர்­கள் கிடைப்­பதைப் பொறுத்­தும் இதர அம்சங்களைக் கருத்தில்கொண்டும் முனை­யம் 2 எந்த தேதி­யில் திறக்­கப்­படும் என்­பது முடிவு செய்­யப்­படும்.

இத­னி­டையே, இது பற்றிக் கேட்­ட­போது கருத்து கூறிய சாங்கி விமான நிலையக் குழு­மத்­தின் பேச்­சா­ளர், விமானப் பயணங்­க­ளுக்­கான தேவை அதி­க­ரிப்­பதை­யும் பய­ணி­கள் போக்­கு­வரத்து கூடு­வதை­யும் கருத்­தில்­கொண்டு அதற்குத் தோதாக இந்த ஆண்­டில் முனை­யம் 2 படிப்­ப­டி­யா­கத் திறந்­து­விடப்­படும் என்று தெரி­வித்­தார்.

இதுபற்றி பொது­மக்­க­ளுக்கு உரிய நேரத்­தில் தக­வல் தெரி­விக்­கப்­படும்.

முனை­யம் 2 மூடப்­பட்டு இருக்­கையில் அங்கு திட்டமிட்டப்படி புதுப்­பிப்பு வேலை­கள் நடந்து வருகின்றன. அதை 18 மாதங்­கள் மூடு­வது என்று முதன்­மு­தலாக திட்­ட­மி­டப்­பட்­டது. ஆனால் விமா­னப் பய­ணி­கள் குறை­வாக இருந்­த­தால் தொடர்ந்து அந்த முனையம் இன்­ன­மும் மூடியே இருக்­கிறது.

சாங்கி விமான நிலை­யம் வழி­யாக பய­ணி­கள் போக்­கு­வ­ரத்து வலு­வான நிலை­யில் மீட்சி கண்டு வரு­வ­தா­க­வும் ஜூன் விடு­முறை கார­ண­மா­க­வும் உலக கோடை பய­ணக் காலம் தொடங்குவதாலும் பய­ணி­கள் போக்­கு­வ­ரத்து மேலும் சூடு­பி­டிக்­கும் என்­றும் போக்கு­வரத்து அமைச்­சர் எஸ் ஈஸ்­வ­ரன் கடந்த புதன்­கி­ழமை தெரி­வித்து இருந்­தார்.

கொவிட்-19க்கு முந்­திய பய­ணி­கள் அள­வில் சரா­ச­ரி­யாக 40% அளவை சாங்கி விமான நிலை­யம் எட்­டி­விட்­டது. இந்த ஆண்டு முடி­வில் 50% அளவை எட்­டி­விட வேண்­டும் என்­பது இலக்­கு.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!