சாங்கி முனையம்2 மே 29 முதல் திறப்பு

சாங்கி விமான நிலை­ய முனை­யம்2 இந்த மாதம் 29ஆம் தேதி முதல் கட்­டம் கட்­ட­மா­கத் திறக்­கப்­படும். வரும் மாதங்­களில் விமா­னப் பயணி­க­ளின் போக்­கு­வ­ரத்து அதி­க­ரிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இதைச் சமா­ளிக்க சாங்கி மையம் ஆயத்­த­மாகி வரு­கிறது.

கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் முதல் முனை­யம் 2 மூடப்­பட்டுள்ளது. அங்கு மேம்­பாட்­டுப் பணி­கள் நடந்து வரு­கின்­றன.

அந்­தப் பணி­கள் 2024ல் முடி­வடை­யும். அதன் விளை­வாக முனை­யம் 2ன் ஆற்­றல், மேலும் ஐந்து மில்­லி­யன் பய­ணி­க­ளைக் கையா­ளும் அள­விற்கு அதி­க­ரிக்கும். ஆண்டு ஒன்­றுக்கு 28 மில்­லி­யன் பய­ணி­கள் போக்­கு­வரத்தைக் கையா­ளக்­கூ­டிய ஆற்றலு­டன் அந்த முனை­யம் திக­ழும் என்று சாங்கி விமான நிலை­யக் குழு­மம் நேற்று தெரி­வித்­தது.

முதல் கட்­ட­மாக அந்த முனை­யத்­தின் தெற்குப் பகு­தி­யில் வரு­கை­யா­ளர்­கள் குடி­நு­ழை­வுத் துறை, சரக்கு பெட்­டி­கள் வந்து சேரும் ஏற்­பாடு, நுழைவு வாயில்­கள் ஆகி­யவை ஆயத்­த­மா­கும்.

முனை­யம் 3ல் செயல்­படும் விமான நிறு­வ­னங்­க­ளின் விமா­னங்­கள் உச்ச நேரங்­களில் முனை­யம் 2ல் தரை­யி­றங்­கும்.

முனை­யம் 3ல் புறப்­படும் விமா­னங்­களில் ஒரு சில விமா­னங்­களைச் சேர்ந்த பய­ணி­கள் முனை­யம் 2ல் உள்ள நுழைவு வாயில்­களைப் பயன்­ப­டுத்­தக்­கூ­டும்.

விமா­னம் தரை இறங்­கு­வ­தற்கு குறைந்­த­பட்­சம் 2 மணி நேரம் முன்­ன­தாக சாங்கி விமான நிலைய இணை­யத்தளத்­தி­லும் 'ஐசாங்கி' செய­லி­யி­லும் அனைத்து விவ­ரங்­களும் இடம்­பெற்று இருக்­கும்.

முனை­யம் 2 விரி­வு­ப­டுத்­தப்­ப­டு­கிறது. அத­னை­ய­டுத்து வரு­கைக் கூடம் பெரி­ய­தாக இருக்­கும்.

தானி­யங்கி குடி­நு­ழைவு வாயில்­களும் சிறப்பு உதவித் தடங்­களும் அதி­க­மாக இருக்­கும்.

தானி­யங்கி குடி­நு­ழைவு தடங்­கள் அதி­க­ரிக்­கப்­படும். இந்­தத் தடங்­கள் குடி­நு­ழைவு, சோத­னைச்­சா­வடி ஆணை­யத்­தி­டம் தங்­கள் முகம், கண் தோற்­றத்தைப் பதிந்து இருக்­கும் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும் நிரந்­த­ர­வா­சி­க­ளுக்­கும் முக்­கி­ய­மா­கச் சேவை­யாற்­றும்.

இப்­படி செய்து இருக்­கும் தகுதி உள்ள வெளி­நாட்டு வரு­கை­யா­ளர்­களும் இந்­தத் தடங்­க­ளைப் பயன்­படுத்தி வேக­மாக அனு­மதி பெற்று செல்­ல­லாம்.

சிறப்பு உதவித் தடங்­கள் மூலம் குடும்­பங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் ஒன்றாக, எளி­தாக அனு­மதி பெற்று வேக­மா­கச் செல்­ல­லாம்.

விசா­ல­மாக இருக்­கும் இந்­தத் தடங்­கள், நட­மாட்­டப் பிரச்­சினை உள்­ள­வர்­க­ளுக்­கும் உத­வும்.

பய­ணி­க­ளின் சரக்கு பெட்­டி­கள் மூன்று நக­ரும் மேடை­களில் வரும். அவற்­றில் ஒரு மேடை­யின் நீளம் அதி­க­ரிக்­கப்­பட்டு இருக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!