பேட்மிண்டன் இறுதிப்போட்டி: லோவுக்கு வெள்ளிப் பதக்கம்

பேட்மிண்டன் இறுதிப்போட்டி: லோவுக்கு வெள்ளிப் பதக்கம்

1 mins read
efb03373-3ecb-49d7-972e-cc9e28fc9ce2
ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் சிங்கப்பூரின் லோ கியன் இயூ, 21-13, 21-13 என்ற செட் கணக்கில் தாய்லாந்து வீரரிடம் தோல்வியடைந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வியட்­னா­மின் ஹனோய் நக­ரில் நேற்று நடந்த தென்­கி­ழக்கு ஆசிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் பேட்­மிண்­ட­னில் சிங்­கப்­பூரின் லோ கியன் இயூ வெள்­ளிப் பதக்­கத்­தைப் பெற்­றார்.

ஒற்­றை­யர் ஆட­வர் இறு­திப் போட்­டி­யில் தாய்­லாந்­தைச் சேர்ந்த குன்­லா­வட் விடிட்­சார்ன் 21-13, 21-13 என்ற செட் கணக்­கில் வெற்றி பெற்­றார்.

தென்­கி­ழக்கு ஆசிய விளை­யாட்டு 2019ல் நடந்­த­போது மலே­சி­யா­வின் பேட்­மிண்­டன் வீரர் லீ ஸி ஜியாவுடன் மோதி லோ வெள்­ளிப் பதக்­கத்­தைத்­தான் பெற்­றார்.

இப்­போ­தும் வெள்­ளிப் பதக்­கத்­தைப் பெற்று இருக்­கி­றார்.

சிங்­கப்­பூ­ரில் 2015ல் நடந்த போட்­டி­யில் ஒற்­றை­யர் ஆட்­டத்­தில் அவர் வெண்­க­லப் பதக்­கத்தை வென்றார்.

பேட்­மிண்­டன் ஒற்­றை­யர் அரை­யி­றுதி ஆட்­டம் சனிக்­கி­ழமை நடந்­தது. அந்­தப் பர­ப­ரப்­பான ஆட்­டத்­தில் வியட்­னா­மின் நுயன் தியன் மின் என்­ப­வரை 21-15, 10-21, 23-21 என மூன்று செட்­டு களில் தோல்­வி­யின் விளிம்பு வரை சென்று வெற்­றி­கண்­டார் லோ.

அரை­யி­றுதி ஆட்­டத்­தில் தொடக்­கம் முதலே லோ போட்டி யில் பேரா­திக்­கம் செலுத்தி வென்று இறு­திப்­போட்­டிக்குத் தகுதி பெற்­றார்.