போர் நிறுத்தம் இல்லை என உக்ரேன் அறிவிப்பு; கிழக்கில் கடும் தாக்குதல்; பின்லாந்துக்கு எரிவாயுவை ரஷ்யா நிறுத்தியது

ரஷ்­யா­வு­டன் போர் நிறுத்­தம் இல்லை என்­றும் மாஸ்­கோ­வுக்கு எதையும் விட்­டுக்­கொ­டுக்­க­த் தயாராக இல்லை என்றும் உக்­ரேன் அறி­வித்தது. அதே­வே­ளை­யில், உக்­ரேனின் கிழக்கு டோன்­பாஸ் வட்­டா­ரத்­தில் தாக்­கு­தலை ரஷ்யா வேகப்­ப­டுத்­தி­யது.

பின்­லாந்­துக்கு எரி­வாயு விநி­யோ­கத்தை ரஷ்யா நிறுத்திவிட்­டது.

தெற்கு துறை­முக மரி­ய­போல் நக­ரைப் பிடித்­து­விட்ட ரஷ்யா, டோன்­பாஸ் வட்­டா­ரத்­தில் இருக்கும் முக்­கி­ய­மான இரண்டு மாநிலங்­களில் ஒன்­றான லுஹான்ஸ் பக்­கம் கவ­னத்­தைத் திருப்பி உள்­ளது.

மாஸ்கோ அதன் மீது கடும் தாக்­கு­தலை நடத்த தொடங்­கி­யது.

ரஷ்­யா­வின் ஆத­ரவு பெற்ற பிரிவினைவாதி­கள், உக்­ரேன் மீது ரஷ்யா படை எடுப்­ப­தற்கு முன்பே, லுஹான்ஸ் மாநிலத்­தின் பெரும் பகு­தி­யைத் தங்­கள் வசம் வைத்­தி­ருக்­கி­றார்­கள். பக்­கத்­தில் இருக்கும் டொனெட்ஸ்க் மாநில­த்­தின் பல பகு­தி­களும் அவர்கள் கைகளில்­தான் இருக்­கிறது.

இருந்­தா­லும் டோன்­பாஸ் வட்­டா­ரத்­தில் உக்­ரேன் வசம் எஞ்சி இருக்­கும் பகு­தி­க­ளை­யும் கைப்­பற்றி­விட வேண்­டும் என்று ரஷ்யா விரும்­பு­கிறது. டோன்­பாஸ் வட்­டா­ரத்­தில் நிலைமை மோச­மாக இருக்­கிறது என்­று­ உக்­ரே­னிய அதி­பர் ஸெலென்ஸ்கி கூறினார்.

இரண்டு முக்­கிய நக­ர்க­ளைக் குறிவைத்து தாக்க ரஷ்யா முயன்று வருவதா­க­வும் உக்­ரேனிய படை­கள் கடும் எதிர்ப்­பைக் கொடுத்து வரு­வ­தா­க­வும் அவர் தெரிவித்தார்.

இவ்­வே­ளை­யில், போர் நிறுத்­தத்தை ஏற்க மாட்­டோம் என்­றும் எல்­லை­களை விட்­டுக்­கொ­டுப்­பது தொடர்­பான எந்த உடன்­பாட்­டை­ யும் ரஷ்­யா­வு­டன் செய்துகொள்­ள­மாட்­டோம் என்­றும் உக்­ரே­னிய அதி­ப­ரின் ஆலோ­ச­கர் பொடோல்­யாக் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!