அதிபர் பைடன்: குரங்கம்மை நிலவரம் கவலை தருகிறது

அதிபர் பைடன்: குரங்கம்மை நிலவரம் கவலை தருகிறது

2 mins read

குரங்­கம்மை பாதிப்பு அதி­க­மாகி வரு­வது ஒவ்­வொ­ரு­வ­ருக்­குமே கவலை அளிப்­ப­தாக இருக்­கிறது என்று அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் தெரி­வித்து இருக்­கி­றார்.

அந்த வைரஸ் கிருமி பற்றி ஆலோ­ச­கர்­க­ளி­டம் தான் பேசி இருப்­ப­தாக அவர் தென்­கொ­ரி­யா­வின் சோல் நக­ரில் செய்­தி­யா­ளர்­களி­டம் பேசி­ய­போது குறிப்­பிட்­டார்.

"குரங்கம்மை கிருமி தொடர்­பில் நாங்­கள் தீவிரமா­கச் செயல்­பட்டு வரு­கி­றோம்.

"அதைத் தடுக்க என்ன செய்­ய­லாம்? தடுப்­பூசி மருந்து ஏதே­னும் பலன் தருமா என்­பது பற்றி நாங்­கள் ஆராய்ந்து வரு­கி­றோம்," என்று தென்­கொ­ரி­யா­வில் ஏர்­ஃபோர்ஸ் ஒன் விமா­னத்­தில் ஏறி ஜப்­பான் புறப்­பட்­ட­தற்கு முன்­ன­தாக செய்தி­யா­ளர்­க­ளி­டம் அவர் கூறினார்.

"அந்­தக் கிருமி வேக­மா­கப் பர­வி­னால் தொடர் விளை­வு­கள் பாத­க­மாக இருக்­கும். குரம்­கம்மை கவலை தரும் அம்­ச­மாக இருக்­கிறது," என்று அவர் தெரி­வித்­தார்.

ஐரோப்­பா­வி­லும் வட அமெ­ரிக்­கா­வி­லும் பல­ருக்கு குரங்­கம்மை தொற்று அதி­க­மாகி வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அமெ­ரிக்­கா­வில் ஒரு­வ­ருக்கு அது உறு­திப்­ப­டுத்­தப்­பட்டுள்ளது.

இத­னி­டையே, 12 நாடு­களில் 92 பேருக்கு குரங்­கம்மை உறு­திப்­படுத்­தப்­பட்டு இருக்­கிறது என்­றும் அது உல­க­ள­வில் பல நாடு­க­ளுக்­கும் பர­வக்­கூ­டும் என்­றும் உல­கச் சுகா­தார நிறு­வ­னம் எச்­ச­ரித்துள்ளது.

அமெ­ரிக்கா, கனடா, ஆஸ்­தி­ரே­லியா, பிரிட்­டன், ஸ்பெ­யின், போர்ச்­சு­கல், ஜெர்­மனி, பெல்­ஜி­யம், பிரான்ஸ், நெதர்­லாந்து, இத்­தாலி, சுவீ­டன் ஆகிய நாடு­களில் அந்­தக் கிருமி பாதிப்பு இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்டு இருக்­கிறது.

இது­வரை மர­ணம் அறி­விக்­கப்­ப­ட­வில்லை. அந்த நாடு­களில் மேலும் 28 பேருக்கு குரங்­கம்மை தொற்று ஏற்­பட்டு இருக்­க­லாம் என்று சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

குரங்­கம்மை தொடர்­பில் வரும் நாள்­களில் தான் வழி­காட்டி நெறி­மு­றை­க­ளை­யும் பரிந்­து­ரை­க­ளை­யும் வெளி­யி­டப் போவ­தாக உலக சுகா­தார நிறு­வ­னம் தெரி­வித்து இருக்­கிறது.