ஐந்து நிமிடங்களில் மூன்று கோல்கள்; இபிஎல் பட்டத்தை வென்றது மேன் சிட்டி

இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் பட்டத்தை வென்றுள்ளது மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு. 

இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக்கின் கடைசி நாள் ஆட்டங்கள் நேற்று (மே 22) நடைபெற்றன.

ஆட்டங்கள் தொடங்கும் முன்னர் 90 புள்ளிகளுடன் பட்டியலின் முதல் இடத்தில் இருந்தது சிட்டி. லிவர்பூல் குழு இரண்டாம் இடத்தில் இருந்தது. 

இறுதி ஆட்டத்தில் ஆஸ்டன் விலா குழுவை வெற்றி பெற்றால் பட்டம் உறுதி எனும் சூழலில் சிட்டி. மறு பக்கம் உல்வ்ஸ் குழுவை வெற்றி பெறுவதுடன் சிட்டி குழு அதன் ஆட்டத்தில் வெற்றி பெறாமல் இருந்தால் மட்டுமே பட்டம் தன் கைகளுக்கு வரும் எனும் சூழலில் லிவர்பூல் குழு.

தொடக்கம் முதல் இறுதி வரை பல திருப்புமுனைகள், பல கோல்கள், மாறி மாறி காற்பந்து கிண்ணம் இந்தப் பக்கமா அந்தப் பக்கமா என்று சிட்டி, லிவர்பூல் ஆட்டங்களில் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை.

முதலில் லிவர்பூல் குழுவுக்கு எதிராக 3ஆம் கோல் போட்டது உல்வஸ். சிட்டி அரங்கில் மகிழ்ச்சி. ஆனால் 24ஆம் நிமிடத்தில் ஆட்டத்தைச் சமன் செய்தது லிவர்பூல். மறுமுனையில் சிட்டி குழு இரண்டு கோல்கள் வாங்கி பின்னிலை அடைந்தது.

இம்முறை லிவர்பூல் பக்கம் நம்பிக்கை அலை. மேலும் இரு கோல்கள் போட்டு லிவர்பூல் முன்னிலை பெற்றாலும் மறு பக்கம் சிட்டி குழு ஐந்து நிமிடத்தில் மூன்று கோல்கள் போட்டு முன்னிலை பெற்றது. இறுதியில் லிவர்பூல் குழு 3-1 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றாலும் சிட்டி 3-2 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்று இபிஎல் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!