மூலாதாரப் பணவீக்கம் ஏப்ரல் மாதம் 3.3 விழுக்காடு ஏற்றம்

மூலாதாரப் பணவீக்கம் ஏப்ரல் மாதம் 3.3 விழுக்காடு ஏற்றம்

2 mins read

தங்­கு­மிடச் செலவு, தனி­யார் போக்கு­வ­ரத்து செல­வைத் தவிர்த்த சிங்­கப்­பூ­ரின் மூலா­தா­ரப் பண­வீக்­கம், கடந்த ஏப்­ர­லில் தொடர்ந்து உச்­சம் தொட்­டது. மின்­சா­ரம், எரி­வாயு, உணவு, சில்­லறை விற்­பனை பொருள்­கள் ஆகி­ய­வற்­றின் விலை­யேற்­றமே இதற்­குக் கார­ணம்.

மூலா­தா­ரப் பண­வீக்­கம் ஆண்டு அடிப்­ப­டை­யில் கடந்த ஏப்­ரல் மாதம் 3.3 விழுக்­காடு ஏற்­றம் கண்­டது. கடந்த மார்ச் மாதம், பண­வீக்­கம் 10 ஆண்­டு­களில் காணப்­ப­டாத அள­வாக 2.9 விழுக்­காடு உயர்ந்­தி­ருந்­தது.

வரும் மாதங்­களில் மூலா­தா­ரப் பண­வீக்­கம் மேலும் உய­ரும் என முன்­னு­ரைக்­கப்­ப­டு­வ­தாக சிங்­கப்­பூர் நாணய ஆணை­ய­மும் வர்த்­தக, தொழில் அமைச்­சும் நேற்று தெரி­வித்­தன. பின்­னர் ஆண்­டி­று­தி­யில் அது மித­ம­டை­யும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

என்­றா­லும், புவி­சார் அர­சி­யல் மற்­றும் கொவிட்-19 பெருந்­தொற்று கார­ணங்­க­ளால் பண­வீக்­கம் ஏற்­ற­மாக இருக்­கும் சூழல் நில­வி வருகிறது.

ஏப்­ர­லில் ஒட்­டு­மொத்த பண­வீக்­கம் ஆண்டு அடிப்­ப­டை­யில் 5.4 விழுக்­கா­டா­கப் பதி­வா­னது. மார்ச் மாத விகி­தத்­துக்­கும் இதற்­கும் இடை­யில் மாற்­றம் எது­வு­மில்லை.

தனி­யார் போக்­கு­வ­ரத்­துத் துறை­யில் பண­வீக்­கம் ஆண்டு அடிப்­படை­யில் கடந்த ஏப்­ரல் மாதம் 18.3 விழுக்­கா­டாக இருந்­தது. மார்ச் மாதம் அது 21.5 விழுக்­கா­டாக இருந்­தது.

ஆனால், மின்­சார, எரி­வாயு விலை­கள் ஆண்டு அடிப்­ப­டை­யில் ஏப்­ர­லில் 19.7 விழுக்­காடு உயர்ந்­தன. மார்ச் மாதம் அந்த ஏற்­றம் 17.8 விழுக்­கா­டாக இருந்­தது.

உணவுப் பொருள்கள் விலை உயர்வும் அதி­க­ரித்து வந்­தது. ஆண்டு அடிப்­ப­டை­யில் ஏப்­ர­லில் உணவு விலை­கள் 4.1 விழுக்­காடு அதி­க­ரித்­தன. தங்கு­மிட பண­வீக்­கம் 3.9 விழுக்­கா­டா­கப் பதி­வா­னது.

உக்­ரேன்-ரஷ்யா போர், வட்­டார பெருந்­தொற்று நில­வ­ரம் கார­ண­மாக விநி­யோ­கச் சங்­கி­லிக்கு ஏற்­பட்­டுள்ள பாதிப்­பால் சிங்­கப்­பூ­ருக்கு வெளி­யி­லி­ருந்து வரும் பண­வீக்க நெருக்­கு­தல் தொடர்ந்து வலு­வாக இருக்­கும் என சிங்­கப்­பூர் நாணய ஆணை­ய­மும் வர்த்­தக, தொழில் அமைச்­சும் எச்­ச­ரித்­தன.

குறு­கிய காலத்­தில், புவி­சார் அர­சி­யல் நில­வ­ரத்­தா­லும் இறுக்­க­மான விநி­யோக சூழ­லா­லும் கச்சா எண்­ணெய் விலை­கள் ஏற்­ற­மாக இருக்­கும். மேலும், உணவு போன்ற இதர பொருள்­க­ளின் விலை­களும் தொடர்ந்து அதி­க­மாக இருக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஆண்டு முழு­மைக்­கு­மான பய­னீட்­டா­ளர் விலை உயர்வு 4.5 விழுக்­காட்­டிற்­கும் 5.5 விழுக்­காட்­டிற்­கும் இடைப்­பட்டு இருக்­கும் என முன்­னு­ரைக்­கப்­ப­டு­கிறது.

மூலா­தா­ரப் பண­வீக்­கம் 2.5 விழுக்­காட்­டிற்­கும் 3.5 விழுக்­காட்­டிற்­கும் இடைப்­பட்டு இருக்­கும் என முன்­னு­ரைக்­கப்­ப­டு­கிறது.