ரிங்கிட் மதிப்புக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளி புதிய உச்சம்

ரிங்­கிட் மதிப்­புக்கு நிக­ரான சிங்கப்­பூர் வெள்ளி புதிய உச்­சத்­தைத் தொட்­டுள்­ளது. நேற்றைய நில­வ­ரப்­படி ஒரு சிங்கப்­பூர் வெள்­ளிக்கு நிக­ரான ரிங்­கிட்­டின் மதிப்பு 3.19ஆக இருந்­தது.

இத­னால் சிங்­கப்­பூ­ரில் மலே­சிய ரிங்­கிட் நாண­யத்­தைப் பெறு­வ­தில் சிலர் ஆர்­வம் கொண்­டுள்­ள­னர்.

ரிங்­கிட்­டின் மதிப்பு சரி­வ­டைந்­து­வ­ரும் நிலை­யில் வெளி­நாட்டு நாணய மாற்­று­நர்­கள் அதிக எண்­ணிக்­கை­யில் வாடிக்­கை­யா­ளர்­கள் மலே­சிய ரிங்­கிட்டை வாங்­க ­வரு­வதா­கக் கூறி­னர்.

“ரிங்­கிட்­டின் மதிப்பு குறைந்­தி­ருப்­ப­தால் பல சிங்­கப்­பூ­ரர்­கள் அதிக அள­விலான பணத்­தொ­கையை ரிங்­கிட்­டாக மாற்று­கின்றனர் என்­றார் சங்­கம் எக்ஸ்­சேஞ்ச் நாணய மாற்று நிறு­வ­னத்­தின் இஸ்­மத் ரியாஸ், 34.

“மலே­சிய ரிங்­கிட்­டின் மதிப்பு குறைந்­தி­ருப்­ப­தால் சிங்­கப்­பூர் வெள்­ளியை மாற்­றும்­போது முன்­பி­ருந்­ததைவிட கூடுத­லான மலே­சிய ரிங்­கிட்டை பெறு­கி­றார்­கள். அதே நேரத்­தில் ரிங்­கிட்டை சிங்கப்பூர் வெள்ளியாக மாற்றம்­போது இவ்வ­ள­வு­தானா என்று கேட்­கி­றார்­கள்,” என்­றார் அவர்.

சென்ற மாதம் சிங்­கப்­பூ­ரில் பல நாண­ய மாற்­றுக் கடை­களில் ரிங்­கிட் தீர்ந்­து­போ­னது.

“இந்த வார­யி­று­தி­யில் குடும்­பத்­தி­ன­ரு­டன் ஜோகூ­ர் செல்லத் திட்­ட­மிட்­டுள்­ளோம். $1,000க்கு ரிங்கிட் மாற்­றி­னேன். 3,170 ரிங்­கிட் கிடைத்­தது. இந்த அள­விற்கு ரிங்­கிட் கிடைத்­ததேயில்லை,” என்­றார் திரு­வாட்டி ஆனந்­த­லதா, 56.

இணை­யத்­தில் ஒரு வெள்­ளிக்­கான ரிங்­கிட் விலை 3.19 என்று குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தா­லும் அந்த விலை வங்கி பரி­மாற்­றத்­திற்­கா­னது என்­றும் ரொக்­கத்தை நாணய மாற்று­நர்­க­ளி­டம் பெறும்­போது அதற்­கான விலை சற்று மாறு­பட்­டி­ருக்­கும் என்­றும் மற்­றொரு நாணய மாற்­று­நர் முஹம்­மது யாசிர், 31, விளக்­க­ம­ளித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் பணி­பு­ரி­யும் மலே­சிய ஊழி­யர்களுக்கு ஒரு பக்­கம் நாணய பரி­வர்த்­தனை மூலம் அதிக ரிங்­கிட் பெறு­வ­தில் மகிழ்ச்சி என்­றா­லும் இத­னால் மலே­சி­யா­வில் விலை­வாசி ஏற்­றம் ஏற்­ப­டுமோ என்ற கவ­லை­யில் உள்­ள­னர்.

“சம்­ப­ளத்தை ரிங்­கிட்­டாக மாற்றும்­போது மகிழ்ச்­சி­யாக உள்­ளது. ஆனால் ரிங்­கிட் மதிப்பு குறைந்­து­கொண்டே­ போ­னால் மலே­சி­யா­வில் விலைகூடிக்கொண்டே போனாலும் போகும். ஏற்கெனவே விலையேற்றம் பாதித்துவருகிறது,” என்றார் கடந்த எட்டு ஆண்­டு­க­ளாக மலே­சி­யா­வின் கெடா­வி­லி­ருந்து சிங்­கப்­பூர் வந்து பொறி­யா­ள­ரா­கப் பணி­யாற்­றும் ஸ்ரீ சர­வ­ண­ரா­ஜன், 42.

கூடு­தல் செய்தி:

ஹர்­‌ஷிதா பாலாஜி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!