புதிய பிடிஓ வீடுகள் நாளை விற்பனைக்கு வருகின்றன

புதிய பிடிஓ வீடுகள் நாளை விற்பனைக்கு வருகின்றன

2 mins read

தேவைக்­கேற்ப கட்­டித் தரப்­படும் (பிடிஓ) ஐந்து திட்­டங்­க­ளின்­கீழ் நாளை (மே 27) புதிய பிடிஓ வீடு கள் விற்­ப­னைக்கு விடப்­படும் என்­றும் அவற்­றில் இரண்டு முதன்மை வட்­டார வீட­மைப்­புத் திட்­டங்­கள் என்­றும் தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ தெரி­வித்­துள்­ளார்.

இத்­திட்­டங்­க­ளின் வீடு­க­ளுக்­கான விண்­ணப்­பம் ஜூன் 2ஆம் தேதி வரை ஏற்­றுக்­கொள்­ளப்­படும் என்­றும் அவர் நேற்று கூறி­னார்.

புக்­கிட் மேரா, குவீன்ஸ்­ட­வுன், தோ பாயோ ஆகிய முதிர்ச்­சி­அ­டைந்த பேட்­டை­க­ளி­லும் ஜூரோங் வெஸ்ட், ஈசூன் ஆகிய முதிர்ச்­சி­பெ­றாத பேட்­டை­க­ளி­லும் ஏறக்­கு­றைய 4,500 பிடிஓ வீடு­கள் விற்­ப­னைக்கு விடப்­படும்.

இவற்­றில் புக்­கிட் மேரா­வும் குவீன்ஸ்­ட­வு­னும் முதன்மை வட்­டார வீட­மைப்பு மாதி­ரித் திட்­டத்­தின்­கீழ் வரு­வ­தாக வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் (வீவக) தெரி­வித்­தி­ருந்­தது.

புக்­கிட் மேரா வட்­டா­ரத்­தில் ஹெண்­டர்­சன், தியோங் பாரு மற்­றும் லோவர் டெல்டா சாலை

களின் எல்­லைக்­குட்­பட்ட இடத்­தில் கிட்­டத்­தட்ட 1,660 மூவறை மற்­றும் நான்­கறை வீடு­கள் கட்­டப்­படும்.

குவீன்ஸ்­ட­வுன் வட்­டா­ரத்­தில் போன விஸ்தா எம்­ஆர்டி நிலை­யத்தை அடுத்­துள்ள கிம் மோ ரோட்­டில் உள்ள தளத்­தில் 860 மூவறை மற்­றும் நான்­கறை வீடு­கள் இடம்­பெ­றும்.

இந்த வீடு­க­ளுக்­கான விற் பனை­யின்­போதே, எஞ்­சிய வீடு

களின் விற்­ப­னைத் திட்­ட­மும் நடை­பெ­றும். தீவு முழு­வ­தும் பல்­வேறு நக­ரப் பகு­தி­களில் உள்ள வீடு­களை உள்­ள­டக்­கிய திட்­டம் இது.

பொங்­கோ­லில் உள்ள நார்த்­ஷோர் எட்ஜ் பிடிஓ திட்­டப் பணி­க­ளைப் பார்­வை­யிட நேற்று வந்த திரு லீ, புதிய பிடிஓ திட்­டங்­கள் தொடங்­கப்­ப­டு­வ­தைப் பல­ரும் எதிர்­பார்த்­துக் காத்­தி­ருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார். நார்த்­ஷோர் எட்ஜ் பிடிஓ திட்­டம் விரை­வில் முடி­வ­டைய உள்­ளது.

இந்த ஆண்­டில் மட்­டும் 23,000 பிடிஓ வீடு­களை விற்­ப­னைக்கு விடு­வ­தற்­கான பணி­களில் வீவக ஈடு­பட்டு வரு­கிறது.நாளை தொடங்­க­வி­ருக்­கும் ஐந்து பிடிஓ விற்­பனை நட­வ­டிக்கை களை அடுத்து ஆகஸ்ட் மாதம் அங் மோ கியோ, புக்­கிட் மேரா, சுவா சூ காங், ஜூரோங் ஈஸ்ட், குவீன்ஸ்­ட­வுன் மற்­றும் உட்­லண்ட்­ஸில் புதிய திட்­டங்­கள் தொடங்­கப்­படும். தேவை­யின் அடிப்­ப­டை­யில், 2021ஆம் ஆண்டு தொடங்கி 2025 ஆம் ஆண்­டுக்­குள் 100,000 வரை­யி­லான வீடு­கள் விற் பனைக்கு விடப்­படும் என்­றும் திரு லீ தெரி­வித்­தார்.

5 திட்டங்களில் இடம்பெறும் வீடுகளுக்கு ஜூன் 2 வரை விண்ணப்பிக்கலாம்