இதற்கிடையே, ஆறு மாதங்களுக்கும் அல்லது அதற்கு மேலும் தாமதமடைந்த பிடிஓ திட்டங்
களின் எண்ணிக்கை 58க்குக் குறைந்துள்ளதாக திரு லீ தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 74ஆக இருந்தது.
இவ்வாண்டின் ஏப்ரல் மாத நிலவரப்படி 60 விழுக்காட்டுக்கும் குறைந்த வீடமைப்பு வளர்ச்சிக் கழக பிடிஓ திட்டங்கள் தாமதத்தை எதிர்நோக்கின.
ஓராண்டுக்கு முன்னர் இது 80 விழுக்காடாக இருந்தது. கடந்த ஆண்டு, கட்டி முடிக்கப்பட்ட அதிகமான பிடிஓ வீடுகள் அவற்றின் உரிமையாளர் களிடம் ஒப்படைக்கப்பட்டன. ஏறக்குறைய 15,000 வீடுகளின் சாவி அவற்றின் உரிமையாளர்களிடம் தரப்பட்டதாக திரு லீ கூறினார்.
2019ஆம் ஆண்டு 13,500 வீடுகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த ஆண்டு மேலும் அதிகமான வீடுகளைக் கட்டி முடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.
அடுத்த ஈராண்டுகளுக்கான பிடிஓ திட்டங்களின் இடைநிலை காத்திருப்புக் காலம் நான்காண்டு முதல் நான்கரை ஆண்டு வரை இருக்கக்கூடும் என்றும் கொவிட்-19 பரவல் மிகுந்திருந்தபோது காத்திருப்புக் காலம் நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரை இருந்தது என்றும் ஒப்பிட்டுக் கூறினார் அமைச்சர்.
வீடு கட்டப்படும் பகுதி, நிலப்
பரப்பு மற்றும் சுற்றுசூழல் ஆகிய காரணிகளால் காத்திருப்பு காலம் தீர்மானிக்கப்படுகிறது என்றார் அவர். உயரமான கட்டடங்களைக் கொண்ட சில பிடிஓ திட்டங்கள் நிறைவேற நீண்டகாலம் பிடிக்கும். சில நேரங்களில் உயர்மாடி தோட்டங்களை அவற்றில் அமைக்க வேண்டி இருக்கும்.
அதற்கேற்ற வகையில் கட்டடத் தரத்தையும் வடிவமைப்பையும் மேற்கொள்வதில் அதிக சிரமம் ஏற்படுவதும் அதிக கால தாமதம் ஏற்படுவதற்கான காரணம் என்றார் திரு லீ.

