ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் நேர்காணலில் பங்கேற்ற ரணில் விக்ரமசிங்கே, இலங்கையின் பணவீக்கம் வெகுவிரையில் 40 விழுக்காட்டைத் தொட்டு
விடும் நிலை இருப்பதாகத்
தெரிவித்தார்.
இலங்கையின் தற்போதைய பணவீக்கம் 33.8 விழுக்காடாக உள்ளது. கடந்த ஆண்டின் 5.5 விழுக்காட்டைக் காட்டிலும் இது கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகம். நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்புக் கடுமையாக வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக இறக்குமதிக்குப் பணம் செலுத்த முடியாமல் இலங்கை திண்டாடி வருகிறது. அண்டை நாடான இந்தியா அதற்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறது.
அண்மையில், $33 பில்லியன் கடன் அனுமதிக்கு இந்தியா ஒப்புதல் அளித்தது. மேலும், 40,000 மெட்ரிக் டன் பெட்ரோல், அதே அளவு டீசல், 400,000 மெட்ரிக் டன் எரிவாயு போன்றவற்றுடன் அரிசி, பால் மாவு, மருந்துப் பொருள்களையும் மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்கு இந்தியா அனுப்பி வைத்தது. இதற்கு நன்றி தெரி வித்த திரு விக்ரமசிங்கே, சீனா விடமிருந்து உரங்களையும் மருந்துப்பொருள்களையும் கோர இருப்பதாகக் கூறினார்.

