விரிவடைகிறது உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி

சிங்­கப்­பூ­ரின் உட்­லண்ட்ஸ் சோத­னைச்­சா­வடி விரி­வு­ப­டுத்­தப்­ப­டு­கிறது. போக்கு­வ­ரத்தை மேலும் சீராக்­க­வும் போக்­கு­வ­ரத்து அதி­க­மா­கும் என்ற எதிர்­பார்ப்­பி­லும் குடி­நு­ழைவு, சோதனைச்­சா­வடி ஆணை­யம், வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம், சிங்­கப்­பூர் நில ஆணை­யம் ஆகி­யவை கூட்­டாக இதனை அறி­வித்­தன. பெரு­ம­ள­வி­லான இந்த மறு­மேம்­பாட்டு, விரி­வாக்­கத் திட்­டத்­திற்­குச் சோத­னைச்­சா­வ­டி­யின் அரு­கி­லுள்ள ஒன்­பது வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கக் கட்­ட­டங்­கள் கைய­கப்­ப­டுத்­தப்­படும் என்று அறி­யப்­ப­டு­கிறது.

மேம்­பாடு காணும் சோத­னைச்­சா­வடி

கார்­க­ளை­யும் மோட்­டார்­சைக்­கிள்­க­ளை­யும் உட­னுக்­கு­டன் அனு­ம­திப்­ப­தற்கு உட்­லண்ட்ஸ் சோத­னைச்­சா­வ­டி­யில் தானி­யங்­கித் தடங்­கள் அதி­க­ரிக்­கப்­படும். இத­னால் பயண நேரம் நான்கு மடங்கு துரி­த­மா­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. சுங்­கச்­சா­வடி, குடி­நு­ழைவு மற்­றும் தடைக்­காப்பு வளா­கத்­தைச் சுற்றி அமைந்­துள்ள சாலை­க­ளி­லும் நெரி­சல் ஏற்­ப­டு­வ­தைத் தவிர்க்க முடி­யும் என்று கூறப்­ப­டு­கிறது.

பாது­காப்பு தொடர்­பான அபா­ய­க­ரச் சம்­ப­வங்­கள் ஏற்­ப­டு­வ­தைக் குறைப்­ப­தற்­காக சோத­னைச்­சா­வ­டி­யின் மையப் பகு­தி­க­ளி­லி­ருந்து வில­கியே பாது­காப்­புச் சோத­னை­கள் மேற்­கொள்­ளப்­படும்.

உட்­லண்ட்ஸ் ஸ்தி­ரீட் 13ல் மாற்று வீடு

மார்­சி­லிங் கிரெ­செண்ட்/லேன் வட்­டாரத்­தில் அமைந்­துள்ள புளோக்­கு­கள் 210 முதல் 218 வரை இந்த மறு­மேம்­பாட்­டுத் திட்­டத்­திற்­குப் பயன்­ப­டுத்­தப்­படும். இந்த புளோக்­கு­களில் 732 விற்­ப­னை­யான வீடு­கள், 53 வாடகை வீடு­கள், ஆறு வாட­கைக் கடை­கள் ஆகி­ய­வற்­று­டன் வாடகை உண­வ­கம் ஒன்­றும் வாடகை ஒட்­டுக்­கடை ஒன்­றும் அடங்­கும். குடி­யி­ருப்­பா­ளர்­கள் 2028ன் இரண்­டாம் காலாண்­டுக்­குள் வீடு­களை காலி செய்ய வேண்­டும். அவர்­க­ளுக்கு 99 ஆண்டு குத்­த­கைக் காலத்­து­டன் புதிய மாற்று வீடு­கள், உட்­லண்ட்ஸ் ஸ்தி­ரீட் 13ல் கட்­டப்­படும்.

மார்­சி­லிங் எம்­ஆர்டி நிலை­யத்­தி­லி­ருந்து 10 நிமிட நடை தொலை­வில் அமை­ய­வுள்ள இந்­தப் புதிய அடுக்­கு­மா­டி­க­ளுக்­கான கட்­டு­மா­னப் பணி அடுத்து மூன்­றாம் காலாண்­டில் தொடங்­கும். வீடு­கள் 2027ன் நான்­காம் காலாண்­டுக்­குள் தயா­ரா­கி­வி­டும்.

ஈரறை வீடு­கள் முதல் ஐந்­தறை வீடு­கள் வரை கிட்­டத்­தட்ட 1,103 புதிய வீடு­கள் கட்­டப்­படும்.

வீட்டு உரி­மை­யா­ளர்­க­ளுக்கு இழப்­பீடு

வீட்டை வாங்­கிய உரி­மை­யா­ளர்­க­ளுக்கு, 'ஒட்­டு­மொத்த மறு­மேம்­பாட்­டுத் திட்­டம்' அதா­வது 'செர்ஸ்' திட்­டத்­தின்கீழ் வழங்­கப்­படும் அதே இழப்­பீட்­டுத் தொகை வழங்­கப்­படும். தங்­கள் வீடு­க­ளின் சந்தை மதிப்பை ஒட்டி இந்த இழப்­பீட்­டுத் தொகை மதிப்­பி­டப்­படும்.

வீடு மாறு­வ­தால் ஏற்­படும் செல­வு­களைச் சமா­ளிக்க $10,000 செல­வுத்­தொகை, புதிய வீட்டை வாங்­கு­வ­தற்­கான முத்­திரை மற்­றும் சட்ட ரீதி­யான செலவு­களை வீவக ஏற்­றுக்­கொள்­ளு­தல், புதிய வீட்டை வாங்­கும் ஒற்­றை­யர்­க­ளுக்கு $15,000 செர்ஸ் மானி­யத்­தொகை, குடும்­பங்­க­ளுக்கு $30,000 செர்ஸ் மானி­யத்­தொகை முத­லிய சலு­கை­களும் வழங்­கப்­ப­டு­கின்­றன. தங்­களுக்கு விருப்­ப­மான ஒரு வட்­டா­ரத்­தில் மறு­விற்­பனை வீடு வாங்­க­வும் திட்­டம் இட­ம­ளிக்­கிறது.

வீட்டு, வர்த்­தக வாட­கை­தா­ரர்­கள்

மார்­சி­லிங் கிரெ­செண்ட்­டின் புளோக்­கு­கள் 210, 211ல் வசிக்­கும் வாட­கை­தா­ரர்­க­ளுக்கு மறு­கு­டி­யி­ருப்பு செல­வுத்­தொ­கை­யாக $2,500 வழங்­கப்­படும்.

அத்­து­டன் உட்­லண்ட்ஸ் ஸ்தி­ரீட் 13ல் தேவைக்­கேற்­பக் கட்­டித்­த­ரப்­படும் வீடு­கள் (பிடிஓ) திட்­டம் அல்­லது மீதி­யி­ருக்­கும் வீடு­க­ளின் விற்­பனை (எஸ்­பி­எஃப்) திட்­டத்­தின்கீழ் வீடு­கள் வாங்க முன்­னு­ரிமை தரப்­படும்.

பாதிக்­கப்­பட்ட வர்த்­தக இடங்­க­ளின் வாட­கை­தா­ரர்­கள் வேறு இடத்­தில் வீவக வாட­கைக் கடை அல்­லது உண­வ­கத்­துக்­கான ஏலக்­குத்­த­கையை வெற்­றி­க­ர­மா­கச் சமர்ப்­பித்­தி­ருந்­தால் அவர்­களுக்கு முதல் குத்­த­கைக் காலத் தவ­ணை­யில் 10% வாட­கைக் கழிவு கிடைக்­கும்.

குடி­யி­ருப்­பா­ளர்­கள் கருத்து

புதிய அறி­விப்பு தொடர்­பில் குடி­யிருப்­பா­ளர்­கள் சில­ரின் கருத்தை அறிந்து வந்­தது தமிழ் முரசு.

புளோக் 212ல் கடந்த 40 ஆண்­டு­களாக வசித்து வரும் சியா­மளா, தாம் இதே வீட்­டில் புது­ம­ணப்­பெண்­ணாக கண­வ­ரின் குடும்­பத்­து­டன் வாழ்ந்­த­தாக கூறி­னார். இப்­போது அந்த நினை­வு­கள் மன­தைத் தைப்­ப­தாக, சிறார் பரா­ம­ரிப்பு நிலை­யத்­தில் பணி­யாற்­றும் திரு­மதி சியா­மளா கூறி­னார்.

ஆயி­னும், புளோக் 216ல் வாழ்ந்து வரும் திரு வின்ஸ்­டன் தாமஸ், 79, தற்­போ­துள்ள தமது குடி­யி­ருப்பு மிக­வும் பழை­ய­தா­கி­விட்­ட­தா­க­வும் புதிய குடி­யி­ருப்­புக்­காக தாம் காத்­தி­ருப்­ப­தா­க­வும் கூறி­னார்.

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லுக்கு முன்­ன­தாக மளி­கைப் பொருட்­கள் வாங்­கு­வ­தற்­காக அடிக்­கடி ஜோகூர் பாரு சென்று வந்த வசதி, இனி­மேல் இருக்­காது என்று கவ­லைப்­பட்­டார் புளோக் 218ல் வசிக்­கும் போகா ஆறு­மு­கம், 62. ஈசூன் வட்­டா­ரத்­தில் உள்ள வீட்­டுக்கு மாற­வி­ருக்­கும் திரு­வாட்டி போகா, தம் பிள்­ளை­க­ளின் வீடு­க­ளுக்கு அரு­கில் புதிய வீடு இருக்­கும் என்று ஆறு­தல் கொள்­கி­றார்.

கூடு­தல் செய்தி: கி.ஜனார்த்­த­னன்,

யுகேஷ் கண்­ணன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!