பிரதமர் லீ: சிங்கப்பூரின் ஜனநாயகம் ஏற்றதொரு அமைப்புமுறையாகும்

பிரதமர் லீ: சிங்கப்பூரின் ஜனநாயகம் ஏற்றதொரு அமைப்புமுறையாகும்

2 mins read

சிங்­கப்­பூ­ருக்கு ஏற்­பு­டை­ய­தாக அதன் ஜன­நா­யக அமைப்­பு­முறை உள்­ள­தா­க­வும் அந்த அமைப்­பு­மு­றை­யால் சட்ட ஒழுங்கு, வளர்ச்சி, செயல்­தி­றன்­மிக்க ஆளுமை போன்ற விளை­வு­கள் ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­துள்­ளார்.

தோக்­கி­யோ­வில் ஆசி­யா­வின் எதிர்­கா­லம் குறித்து நடை­பெற்று வரும் 27வது அனைத்­து­லக மாநாட்­டில் கலந்­து­ரை­யா­டல் சந்­திப்பு ஒன்­றின்­போது 'நிக்கே ஏஷியா'வின் தலைமை ஆசி­ரி­யர் ஷிகே­ச­புரோ ஒக்­கு­முரா கேட்ட கேள்­விக்­குப் பிர­த­மர் இவ்­வாறு பதி­ல­ளித்­தி­ருந்­தார்.

சுதந்­தி­ரம் பெற்­றதை அடுத்து பல்­வேறு அம்­சங்­களில் சிங்­கப்­பூர் முன்­னேற்­றம் அடைந்­துள்­ளதை திரு ஒக்­கு­முரா பாராட்­டி­ய­போ­தும் மக்­கள் செயல் கட்­சி­யின் ஆதிக்­கம் குறித்து அவர் கேள்வி எழுப்­பி­னார். ஜன­நா­யக மாநாட்­டுக்கு அமெ­ரிக்கா கடந்த ஆண்டு ஏற்­பாடு செய்­தி­ருந்த நிலை­யில் அதில் கலந்­து­கொள்­ளு­மாறு சிங்­கப்­பூ­ருக்கு அமெ­ரிக்கா அழைப்பு விடுக்­கா­த­தை­யும் அவர் சுட்­டி­னார்.

"சிங்­கப்­பூ­ருக்கு எது பலன் அளிக்­குமோ அதைத்­தான் நாங்­கள் செய்து வரு­கி­றோம். எங்­க­ள் சட்ட ஒழுங்கு, எங்­க­ள் வளர்ச்சி, செயல்­தி­றன்­மிக்க அர­சாங்­கம் நன்று என்­கி­றீர்­கள். உங்­க­ளின் அன்­பான வார்த்தைகளுக்கு நன்றி.

"இருப்­பி­னும் எங்­க­ளின் அர­சி­யல் இயங்­கும் விதத்­தோடு இது தொடர்­பு­டை­ய­தாக இருக்­க­லாம் என்று சிந்­தித்­துப் பார்க்­கு­மாறு உங்­க­ளைக் கேட்­டுக்­கொள்­கி­றேன். சிங்­கப்­பூ­ரர்­கள் ஒன்­றி­ணைந்து, அவர்­களின் ஆர்­வம் எதில் உள்­ளது என்­பதை உணர்ந்து, நாட்­டின் நலனையும் தங்களின் எதிர்கால நலனையும் கவ­னித்­துக்­கொள்­ளும் நாடாளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும் தலை­வர்­க­ளுக்­கும் வாக்­க­ளிக்­கி­றார்­கள்.

"அடுத்­த­டுத்த தேர்­தல்­களில் எங்­க­ளால் இதை நிறை­வேற்ற முடி­வ­தால் மக்­கள் செயல் கட்­சிக்கு மக்­க­ளின் பலத்த ஆத­ரவு கிடைக்­கிறது. அத­னால் மக்­க­ளுக்­குச் சேவை­யாற்­ற­வும் அவர்­க­ளு­டன் இணைந்து மேலும் சிறப்­பாக ஆட்சி செய்யவும் எங்­க­ளுக்கு வாய்ப்பு கிடைக்­கிறது. இது முடிந்­த­வரை நீண்டகாலத்­திற்­குத் தொடர வேண்­டும் என்­பதே என் விருப்­பம்," என்­றார்.

மக்­க­ளுக்­குச் சேவை புரிந்து நாட்டை முன்­னேற்­றப் பாதை­யில் கொண்டு செல்­லும் வகை­யில் சிங்­கப்­பூர் அர­சாங்­கம் இயங்­கி­னா­லும் மேம்­ப­டுத்­தப்­பட வேண்­டிய அம்­சங்­களில் தேவை ஏற்­ப­டும்­போது மாற்­றங்­கள் செய்­யப்­பட வேண்­டும் என்­பதை சிங்­கப்­பூ­ரின் அர­சி­யல் தலை­வர்­கள் அறிந்­தி­ருப்­ப­தாக திரு லீ குறிப்­பிட்­டார்.