ஃபோர்ப்ஸ் சஞ்சிகையின் ‘30 வயதுக்குக் குறைந்த 30 பேர்’ பட்டியலில் யங் ராஜா, லோ கியன் இயூ

ஆசிய நாடு­க­ளின் பல்­வேறு துறை­களில் தொழில்­மு­னை­வர்­க­ளா­க­வும் புத்­தாக்­கக் கலை­ஞர்­க­ளா­க­வும் சாதித்­துள்­ள­வர்­களை ஃபோர்ப்ஸ் சஞ்­சி­கை­யின் 30 வய­துக்­குக் குறைந்த 30 பேர் பட்­டி­யல் அடை­யா­ளங்­கண்­டுள்­ளது. அந்­தப் பட்­டி­ய­லில் 'ராப்' இசைக்­க­லை­ஞர் யங் ராஜா, பூப்­பந்து விளை­யாட்டு வீரர் லோ கியன் இயூ ஆகி­யோர் இடம்­பெற்­றுள்­ள­னர்.

கலை­கள், சமூ­கத் தாக்­கம், பய­னா­ளர் தொழில்­நுட்­பம், கேளிக்கை, விளை­யாட்­டு­கள் என பத்து பிரி­வு­க­ளின்கீழ் இளம் சாத­னை­யா­ளர்­கள் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டார்­கள். கொவிட்-19 கொள்­ளை­நோ­யால் ஏற்­பட்டு வந்த சவால்­க­ளுக்கு இடை­யே­யும் தத்தம் துறை­களில் மாற்­றத்­தைத் தோற்­று­வித்­தோ­ரும் புத்­தாக்­கத்தை ஊக்­கு­வித்­தோ­ரும் சிறப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக பட்­டி­யலை நேற்று வெளி­யிட்ட ஃபோர்ப்ஸ் நிறு­வ­னம் குறிப்­பிட்­டது.

கொள்­ளை­நோய் ஏற்­ப­டுத்­திய தடைக்­கும் தனி­மைக்­கும் பிறகு ஆசி­யாவை மீண்­டும் இணைப்­பதை நோக்கி இவ்­வாண்டு பட்­டி­ய­லில் இடம்­பெற்ற தொழில்­மு­னை­வர்­களும் புத்­தாக்­கக் கலை­ஞர்­களும் செயல்­ப­டு­வ­தாக பட்­டி­ய­லின் ஆசி­ரி­யர் ராணா வெபெ வாட்­சன் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரைப் பிர­தி­நி­தித்து 34 பரிந்­து­ரைப் படி­வங்­கள் சமர்ப்­பிக்­கப்­பட்­டன. பட்­டி­யல் வெளி­யி­டப்­ப­டத் தொடங்­கிய 2016ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரர்கள் அதிகளவில் இடம்பெற்றிருப்பது இந்த ஆண்டில்தான். இந்­தி­யா­வுக்­குப் பிறகு, ஆக அதி­க­மான எண்­ணிக்­கை­யில் பிர­தி­நி­திக்­கப்­பட்டுள்ள நாடும் சிங்­கப்­பூரே.

உல­கப் பூப்­பந்து (பேட்­மிண்­டன்) கூட்­ட­மைப்­பின் வெற்­றி­யா­ள­ருக்­கான இறு­திப் போட்­டி­யில் கடந்த ஆண்டு லோ கியன் இயூ, 24, வாகை சூடி­னார். இசைக்­க­லை­ஞர் யங் ராஜா, 26, அண்­மை­யில் அமெ­ரிக்­கா­வின் 'அலாமோ ரெக்­கோர்ட்' இசை நிறு­வ­னத்­து­டன் இணைய ஒப்­பந்­த­மா­கி­யுள்­ளார். கிட்­டத்­தட்ட 4,000க்கும் மேற்­பட்ட பரிந்­து­ரைப் படி­வங்­க­ளி­லி­ருந்து இறு­திப் பட்­டி­யல் முடி­வா­னது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!