மலேசியா: மனைவி, மகன் முன்னிலையில் இந்திய ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்

முரளி சண்­மு­கத்தை முகத்­துக்கு நேராக நின்று ஆட­வர் ஒரு­வர் துப்­பாக்­கி­யால் சுட்­ட­போது முர­ளி­யின் மனை­வி­யும் மக­னும் செய்­வ­த­றி­யாது திகைத்து நின்­ற­னர்.

கெடா மாநி­லத்­தின் ஜாலான் கம்­போங் பாரு பகு­தி­யில் உணவு சாப்­பிட்­டு­விட்டு கடைக்கு வெளியே முர­ளி­யின் மனை­வி­யும் மக­னும் நின்­று­கொண்­டி­ருந்த சம­யம், நேற்று முன்­தி­னம் சுமார் பகல் 12.30 மணி­ய­ள­வில் இந்­தத் துப்­பாக்­கிச் சூட்டு சம்­ப­வம் நடந்­த­தாக 'த ஸ்டார்' செய்தி நிறு­வனம் குறிப்­பிட்­டுள்­ளது.

கடைக்கு வெளியே நிறுத்­தப்­பட்­டி­ருந்த தமது காரின் கதவை 36 வயது முரளி திறக்­கச் சென்­ற­போது இரண்டு மோட்­டார்­சைக்­கிள்­களில் நால்­வர் வந்­த­தா­க­வும் அந்த நால்­வ­ரில் ஒரு­வர் துப்­பாக்­கி­யால் முர­ளி­யின் தலை­யைக் குறைந்­தது எட்டு குண்­டு­க­ளைக் கொண்டு துளைத்­த­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

சம்­பவ இடத்­தி­லேயே முரளி மாண்­டு­விட்­டார் என்று உறு­தி­செய்­யப்­பட்­டது.

தாக்­கு­தல் நடத்­திய நால்­வ­ரும் முகத்தை மறைத்­த­வாறு கையு­றை­கள் அணிந்­தி­ருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

முர­ளி­யின் மனைவி, மகன், நண்­பர் ஆகிய மூவ­ரும் காயங்­க­ளின்றி உயிர் தப்­பி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கொல்­லப்­பட்ட முரளி, குண்­டர் கும்­பல் தலை­வன் என்று நம்­பப்­ப­டு­வ­தாக கெடா காவல்­து­றைத் தலை­வர் குறிப்­பிட்­டுள்­ளார்.

திட்­ட­மிட்­டக் குற்­றச்­செ­யல்­கள், போதைப்­பொ­ருள் குற்­றங்­கள் தொடர்­பில் சந்­தேகத்­தின் பேரில் முரளி, தேடப்­பட்டு வந்த ஒரு­வர் என்­றும் அவர் கூறி­னார்.

பாது­காப்­புக் குற்­றச்­செ­யல்­கள் சட்­டத்­தின்­கீழ் முரளி மீது வழக்கு ஒன்று பதி­வா­கி­யுள்­ள­தா­க­வும் கூறப்­பட்­டது.

முரளி அடிக்­கடி வந்து போகும் இடம் அந்த காப்­பிக் கடை என்­றும் வாரந்­தோறும் அவர் தம் குடும்­பத்­தா­ரு­டன் அங்கு உணவு சாப்­பிட வரு­வார் என்­றும் சம்­பவ இடத்­தில் இருந்த சாட்சி ஒரு­வர் கூறி­னார்.

இது குண்­டர் கும்­ப­லில் உள்­ள­வர்­கள் நடத்­திய தாக்­கு­த­லாக இருக்­க­லாம் என்று சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!