போதிய உணவுப்பொருள்: சிங்கப்பூரின் 2 அம்ச உத்தி

போதிய உணவுப்பொருள்: சிங்கப்பூரின் 2 அம்ச உத்தி

3 mins read

பிரதமர் லீ: இருப்பை பலப்படுத்த, கொள்முதல் வழிகளைப் பலமுனைப்படுத்த முயற்சி

உக்­ரேன் போர், அதிக பண­வீக்­கம் கார­ண­மாக உணவு விநி­யோகக் கட்­ட­மைப்­பில் இடை­யூ­று­கள் ஏற்­பட்டு உள்­ளன.

இத­னால் சிங்­கப்­பூ­ரும் பாதிக்­கப்­பட்டு இருக்­கிறது. இது வருத்­த­ம­ளிக்­கிறது என்­றா­லும் வியப்­பான ஒன்று அல்ல என்று பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்து இருக்­கி­றார்.

போதிய அள­வுக்கு உண­வுப்­பொ­ருள்­கள் இருக்­கின்­றன என்­பதை உறு­திப்­ப­டுத்த பல ஆண்டு கால­மா­கவே சிங்­கப்­பூர் பல முயற்சி­களை எடுத்து வரு­கிறது.

இருப்­பு­களை அதி­க­மாக்­கு­வதும் உண­வுப்­பொ­ருள்­க­ளைப் பெறும் வழி­க­ளைப் பல­மு­னைப்­படுத்­து­வ­தும் அதில் உள்­ள­டங்­கும்.

இவற்­றின் மூலம் சிங்­கப்­பூ­ரர்­கள் அவ்­வ­ள­வா­கப் பாதிக்­கப்­படு­வதில்லை என்று திரு லீ விளக்­கி­னார்.

"உண­வுப்­பொ­ருள்­களை இறக்கு­மதி செய்­யும் நாடு என்ற முறை­யில், நாம் மோச­மா­கப் பாதிக்­கப்­பட்டு இருக்­கி­றோம். இது வருத்­த­மளிக்­கிறது," என்று திரு லீ சிங்­கப்­பூர் ஊட­கத்­தி­டம் தெரி­வித்­தார்.

பிர­த­மர் தோக்­கி­யோ­வுக்கு நான்கு நாள் பய­ணம் மேற்­கொண்டு இருந்­தார். இறுதி நாளன்று அவர் சிங்­கப்­பூர் ஊட­கத்­தி­டம் பேசி­னார்.

திரு லீ எந்த நாட்­டை­யும் குறிப்­பி­ட­வில்லை. இருந்­தா­லும் இந்த வார தொடக்­கத்­தில் மலே­சியா ஓர் அறி­விப்பை விடுத்­தது.

உற்­பத்­தி­யும் விலை­யும் நிலைப்­படும்வரை ஜூன் 1ஆம் தேதி முதல் ஒவ்­வொரு மாத­மும் 3.6 மில்­லி­யன் புதிய கோழி இறைச்சி ஏற்­று­மதிக்குத் தடை­வி­திக்­கப்­போ­வ­தாக மலேசியா அறி­வித்­தது.

இந்­தியா உள்­நாட்­டில் சர்க்­கரை விலை உயர்­வைத் தடுக்­கும் நோக்­கத்­தில் சர்க்­கரை ஏற்­று­ம­தி­யைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான திட்­டத்தை அறி­வித்து இருக்­கிறது.

கொவிட்-19 தலை­காட்­டிய போது முகக்­க­வ­சங்­களும் தனி­நபர் பாது­காப்புச் சாத­னங்­களும் போதிய அள­வுக்கு கிடைக்­கா­மல் போனதை திரு லீ சுட்­டிக்­காட்­டி­னார். உலக வர்த்­தக விதி­கள் மீறப்­படும் பட்­சத்­தில் உலக வர்த்­தக நிறு­வ­னத்தை நாடி அதற்குத் தீர்வு காண­லாமா என்­பது பற்றி கருத்து கூறிய திரு லீ, அது நீண்டநெடிய நடை­முறை என்று குறிப்­பிட்­டார்.

இப்­போ­தைய சூழ்­நி­லை­யில், உணவு விநி­யோ­கத்­தைப் பாது­காப்­பதே அவ­சர தேவை என்­றார் அவர். "இதற்­கான விடை இப்­போது நாம் என்ன செய்­கி­றோம் என்­பதைப் பொறுத்­தது அல்ல. கடந்த பல ஆண்­டு­க­ளாக நாம் என்ன செய்து வந்­தி­ருக்­கி­றோம் என்­ப­து­தான் முக்­கி­யம்.

"சிங்­கப்­பூர் பல ஆண்­டு­க­ளா­கவே இருப்­பு­களை அதி­கப்­ப­டுத்தி வந்­தி­ருக்­கிறது. மீள்­தி­றனை மேம்­படுத்தி உள்­ளது.

"உண­வுப்­பொ­ருள்­கள் கொள்­மு­தல் செய்­வ­தைப் பல­மு­னைப்­படுத்தி இருக்­கிறது," என்று திரு லீ குறிப்­பிட்­டார்.

"ஆகை­யால், உண­வுப்­பொ­ருள் ஓரி­டத்­தில் இருந்து வரு­வது தடை­பட்­டால், அதா­வது ஓர் இடத்­தில் இருந்து கோழியை வாங்க முடி­ய­வில்லை என்­றால் இதர நாட்­டில் இருந்து நாம் அதை வாங்க முடி­யும்.

"இப்­போது கோழி தட்­டுப்­பாட்டுப் பிரச்­சினை. அடுத்­த­தாக வேறு ஏதா­வது தலை­தூக்­க­லாம். எதற்­கும் நாம் ஆயத்­த­மாக இருக்க வேண்­டும்," என்று திரு லீ குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூர் போதிய உண­வுப்­பொ­ருள் கிடைப்­பதை உறு­திப்­படுத்த கொள்­மு­தல் வழி­க­ளைப் பல­மு­னைப்­ப­டுத்­து­கிறது. இதுவே முக்­கிய உத்­தி­யாக இருக்­கிறது.

தனக்கு தேவை­யான உண­வுப்­பொ­ருள்­களில் 90 விழுக்­காட்டை சிங்­கப்­பூர் இறக்­கு­மதி செய்­கிறது.

இத­னி­டையே, சிங்­கப்­பூ­ரில் போதிய அள­வுக்கு கோழி இருப்­ப­தா­க­வும் ஆகை­யால், பயந்­து­கொண்டு மக்­கள் அள­வுக்கு அதி­க­மாக அதை வாங்க வேண்­டாம் என்­றும் நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற துணை அமைச்­சர் டெஸ்­மண்ட் டான் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை தெரி­வித்­தார்.