சர்க்கரை ஏற்றுமதிக்கு இந்தியா வரம்பு: இங்கு பாதிப்பு இராது

சர்க்கரை ஏற்றுமதிக்கு இந்தியா வரம்பு: இங்கு பாதிப்பு இராது

2 mins read
fe8faf2d-15fb-4e6b-9226-b591947b1584
கடந்த சில மாதங்களாகச் சிங்கப்பூரில் சர்க்கரை விலை சீராக இருந்து வருகிறது. கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ் -

சர்க்­கரை ஏற்­று­ம­தி­யைக் கட்­டுப்­படுத்­து­வது என்று இந்­தியா முடிவு செய்து இருக்­கிறது. இருந்­தா­லும்­கூட சிங்­கப்­பூர் பய­னீட்­டா­ளர்­களுக்கு அத­னால் எந்த பாதிப்­பும் இல்லை. அவர்­கள் கவ­லைப்­பட வேண்­டிய அவ­சி­ய­மும் இல்லை.

இந்­தியா உல­கின் ஆகப் பெரிய நான்­கா­வது சர்க்­கரை உற்­பத்தி நாடு. பிரே­சி­லுக்கு அடுத்தபடி­யாக அது சர்க்­கரை ஏற்­று­ம­தி­யில் 2வது இடத்­தைப் பெற்று இருக்­கிறது என்று அந்­தத் தொழில்­து­றை­யைச் சேர்ந்­த­வர்­கள் கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­தது.

ஆனால் இந்­தி­யா­வில் இருந்து கொஞ்ச அளவு சர்க்­கரையை சிங்­கப்­பூர் இறக்­கு­மதி செய்­கிறது. சிங்­கப்­பூ­ரில் சர்க்­க­ரையை அதிக அளவு இறக்­கு­மதி செய்­யும் 'செங் இயூ ஹெங்' நிறு­வ­னம், சர்க்­கரையை­யும் தயா­ரிக்­கிறது.

இந்த நிறு­வ­னம் இறக்­கு­மதி செய்­யும் சர்க்­க­ரை­யில் இந்­தி­யா­வில் இருந்து வரும் சர்க்­க­ரை­யின் அளவு 5%க்கும் குறைவு என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

தாய்­லாந்து, மலே­சியா நாடு­களில் இருந்­து­தான் சிங்­கப்­பூர் அதி­க­மாக சர்க்­க­ரையை இறக்­கு­மதி செய்­கிறது என்று 'ஹியாங் லி டிரே­டர்ஸ்' நிறு­வ­னத்­தின் பேச்­சா­ளர் ஒரு­வர் கூறி­னார்.

உள்­ளூர் சந்­தை­யில் புழங்­கும் இந்­திய சர்க்­கரை அளவு மிக­வும் குறைவு. ஆகை­யால், இந்­திய அரசின் முடி­வால் நாம் கவ­லைப்­படத் தேவை­யில்லை என்று அந்­தப் பேச்­சா­ளர் மேலும் தெரி­வித்­தார்.

இந்­தியா, பொது­வாக ஆண்டு முடி­வில் சர்க்­கரை ஏற்­று­ம­திக்கு வரம்பு விதிக்­கும் என்­றார் அவர்.

ஒட்­டு­மொத்­த­மா­கப் பார்க்­கை­யில், இந்­தி­யா­வி­டம் இன்­ன­மும் சர்க்­கரை உப­ரி­யாக இருக்­கிறது. ஆகை­யால், நாம் கவ­லைப்­பட வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

உள்­ளூர் சந்தை விலை­கள் நிலைப்­பட்­ட­தும் இந்­தியா பழை­ய­படி சர்க்­க­ரையை அதி­கம் ஏற்­று­மதி செய்­யத் தொடங்­கி­வி­டும் என்று அந்­தப் பேச்­சா­ளர் விளக்­கி­னார்.

இத­னி­டையே, ஆஸ்­தி­ரே­லியா, இந்­தியா, மலே­சியா, தாய்­லாந்து உள்­ளிட்ட 40க்கும் மேற்­பட்ட நாடு­களில் இருந்து சிங்­கப்­பூர் சர்க்­கரையை இறக்­கு­மதி செய்­வ­தாக சிங்­கப்­பூர் உணவு அமைப்­பின் பேச்­சா­ளர் கூறி­னார்.