தகவல், தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் 'மின்னிலக்க வாழ்க்கை விழா' இன்று முடிவடை கிறது. நேற்று பிடோக்கில் நடந்த விழாவில் கலந்துகொண்ட தொடர்பு தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ அந்த விழாவின் வெற்றி குறித்து பேசினார்.
அதிபர் ஹலிமா யாக்கோப்பும் விழாவுக்குச் சென்றிருந்தார். அதிபர் சவால் 2022ன் குறைந்த வருமான குடும்பங்களுக்கு உதவும் கருப்பொருளை ஒட்டி தொண்டூழிய அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த 'தொழில்நுட்ப சனிக்கிழமை' என்ற நிகழ்ச்சியை அதிபர் பார்வையிட்டார்.
இந்த விழாவுக்கு சிங்கப்பூரர்கள் ஊக்கமூட்டும் ஆதரவை அளித்துள்ளனர். 'அனைவருக்கும் கணினித் தகவல்' என்ற கணினி இணைப்புச் செயல்திட்டத்தின் கீழ் வசதி குறைந்தோர் மின்னிலக்க வசதிகளைப் பெற 80,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

